பிரபஞ்ச தேடல்(Cosmic ocean) - முடிவிலி- ஏலியன்ஸ்

சாதாரண மனிதர்களின் சிந்தனை கடவுளுக்கு அப்பால் செல்வதில்லை. கடவுள் எனும் எல்லைக்கோட்டுடன் நின்று விட்டால் அறிவும் மட்டுப்படுத்தப்படும் .  உலகத்திற்க்கு அப்பால் நின்றால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் .

தற்ப்போதைய மிக முக்கிய கேள்வி, வேற்று உயிரினங்கள்(ஏலியன்ஸ்) உண்டா என்பதே. உண்டு என்பதற்கான சாத்தியங்களே அதிகம் . காரணம் நாம் இருக்கும் பிரபஞ்சம் மீதான நீண்ட கால அவதானம் . அறியப்பட்டவரை அனைத்தும் முடிவிலி . 


பிரபஞ்சம் மிக மிக பெரியது .இந்த சூரிய குடும்பத்தில் ஒரு புள்ளி பூமி . 200 பில்லியன் நட்சத்திரங்கள் கொண்ட எமது பிரபஞ்சத்தில் சூரிய குடும்பம் ஒரு புள்ளி . இவ்வாறு  பல சேர்ந்தது தான்  கலக்சி எமது பால் வீதி. பல பால்வீதிகள் சேர்ந்தது தான் காஸ்மிக் ஓசியன். கிட்டத்தட்ட 100 பில்லியன் பால் வீதிகள். அனைத்தும் ஒரு ஒழுங்கில் அனைத்து பக்கமும்  இழுவை விசையுடன் . இவற்றை அறியும் போது  நாம் உண்மையில் தனிமையில் இருக்கிறோம் என்பது நம்ப முடியாதது . 

ஏலியன்ஸ் இருக்கிறதா இல்லையா என்பதற்க்கு விடை தொடங்கிய  இடத்திலேயே இருக்கிறது . நமது பூமியில் ....

 பூமியின் உயிரினங்கள் தோற்றம் பற்றி விரிவாக பார்த்தால் விளங்கும் .அதற்க்கு  பூமியில் 4 .5 பில்லியன் வருடங்களுக்கு முன் செல்ல வேண்டும் . உலக உயிரினங்களின் தோற்றத்துக்கு பல நிகழ்வுகள்  இருந்தாலும்  ஒன்று மட்டும் பொதுவானது . உயிரினங்களின் தோற்றம் ஒரு எதிர்பாராத ஒன்று . விபத்து போன்றது எனலாம் . அமினோ அமிலங்கள் உயிர்களின்  மூலம் . அமிலங்கள் தாக்கத்திட்க்கு நீர் தேவைப்பட்டது . நீர் வாழ் உயிரினங்களே முதல் முதல் தோன்றியது . பிணைப்புகள் தானாக இடம் பெற்றது . அனைத்து பிணைப்புகளும் உயிரினத்தை உருவாக்கவில்லை . சரியான பிணைப்பு தற்செயலாக உண்டாக பல மில்லியன் வருடங்கள் தேவைப்பட்டது . இவற்றின்(உயிரின உருவாக்க ) மூலம் விண்வெளியில் பரவக்கூடியதாகவும் இருக்கலாம் . காரணம் அசையும் பாறைகள் ( எரிகற்கள்  ). பாறைகளை ஆராய்ந்ததில் அவற்றில் காணப்படும் மூலக்கூறுகள் விண்வெளியில் அசையும் பாறைகள் மூலம் இடம் பெயர்க்கப்படுகின்றன .அவை காலப்போக்கில் தாக்கமடைகின்றன . 


  இவற்றின் மூலம் மேலும் உயிரினங்கள் இருக்கலாம் என்பது உறுதி . பூமியில் உயிர்களின் தோற்றம் பற்றி  விளங்கினால் இன்னும் மில்லியன் வருடங்களின் பின்னோ அல்லது  இப்போதோ  பல உயிரினங்கள் எங்கேயோ இருக்கலாம் என எண்ணத்தோன்றும் . ஏலியன்ஸ் கட்டாயம் காட்டப்படும் உருவ அமைப்பிலே இருக்க வேண்டும் என்று இல்லை . ஒரு இயந்திரம் போன்ற அமைப்பிலேயும்  இருக்கலாம் , வேறு ஏதாவது விலங்குகள் போன்ற அமைப்பிலும் எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கலாம் . பல உயிரினங்கள் அவ்வாறு இருக்கலாம் . ஏலியன்ஸ் வாழ்க்கையும்  மனிதனின் வாழ்க்கை போன்றே தக்கன பிழைத்தல் போன்ற கட்டங்களை தாண்டி இருக்க வேண்டும் . 

இன்னும் இவற்றை உறுதியாக்கும் மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் நீர் இந்த பால்வீதி முழுதும் காணப்படுகிறது . சிலவை சிறிய அளவிலும் சிலவை பணிக்கட்டிகளாகவும் திண்ம நிலையில்  காணப்படுகிறது . இறுதியாக கிடைத்த தரவுகள் ஜோபிடரிலும்( பனிக்கட்டியாக  ) ,செவ்வாயிலும் நிலத்தடியில் நீர் இருப்பதி உறுதிப்படுத்தப்பட்டது. உயிரினங்கள் பல இவ்வாறாக  இருப்பதற்க்கு சாத்தியக்கூறுகள் அதிகம் . ஏன் நிச்சயமாக இருக்கும் .யுரோப் 


வியாழனின் உபகோள் . வியாழனை மிக குறுகிய காலத்தில் சுற்றி வருகிறது . முட்டை வடிவில் சுற்றுகிறது .மிகவும் சிறிய கொள் . மயினஸ் 260 பாகை .சுற்றும் போது விரிந்து சுருங்குகிறது . 15 மயில் தடிப்பமான  ஐஸ் ஆல் மூடப்பட்டிருக்கிறது . 3 .6 நாட்களில் பூமியை சுற்றி வருகிறது . விரிந்து சுருங்குவதால் வெப்பம் வெளிவிடப்படுகிறது . வெளிவிடப்படும் வெப்பம் ஐஸ் உருக்கிகிறது . ஒரு வேளை பனிக்கு  அடியில் உயிரினங்கள் வாழலாம் என்பது கொச்மொலோஜிஸ்ட் களின் கருத்து .

பிரபஞ்சம் பற்றிய தேடல் ஏலியன்ஸ் பற்றிய கேள்விக்கு நிச்சயமாக விடை தரும் . ஏலியன்ஸ் வந்தமைக்கான உறுதியான சான்றுகளுடன் மேலும் பிரபஞ்சம் பற்றிய தகவல்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்

Comments

Prasanna said…
நல்ல தகவல்கள்.. கண்டிப்பாக இருப்பார்கள் என்றே எனக்கும் தோன்றுகிறது
Sathish said…
VERY GOOD POST. FOR MORE VIDEOS ABOUT ALIENS VISIT THE BELOW BLOG http://eyesnotlies.blogspot.com
பிரசன்னா said...

//நல்ல தகவல்கள்.. கண்டிப்பாக இருப்பார்கள் என்றே எனக்கும் தோன்றுகிறது//

நன்றி பிரசன்னா ...

Sathish said...

நன்றி Sathish...
விடியோக்கள் பார்த்தேன் அண்மையில் ஹவக் என்பவரும் ஏலியன்ஸ் இருப்பதை உறுதி செய்துள்ளார் .
Valaakam said…
சுப்பர்...
நைஸ் போஸ்ட்...
வாழ்த்துக்கள்...

உயிரினத்தோற்றத்துடன்... நீரை (H2O ) பற்றி அதிகம் எழுதியுள்ளீர்கள்...
எனக்கு டவுட்... ஏன் ஒட்சிசன், ஐதரசன் தான் உயிரினத்தோன்றலுக்கு முக்கியமா???
வேற்று கிரகங்களில்... அல்லது வேற்று கலக்ஸியிலும்... எமது அடிப்படை மூலக்கூறே (காபன் உட்பட) தேவையா???
நான் இல்லை என்று... என்ட புளொக்ல எழுதி இருக்கன்... இன்னும் எழுதனும்... ("ரைம் இல்லை..." அப்பிடினு சொல்ல ஏலாது... கொஞ்சம் சோம்பல்... :) )

நன்றி... சதீஸ்... ( சுப்பர் புளொக் share பண்ணினதுக்கு.)
------------------------------
http://valaakam.blogspot.com/2010/03/blog-post.html
&
//ஏலியன்ஸ்... பேய்...கடவுள்... (விளங்க முடியா பரிமாணங்கள்...)///

(இது என்னுடையத‌ விளம்பரப்படுத்த போடல... இந்த போஸ்டோட சம்பந்தப்பட்டது, அதால போட்டு இருக்கன்...)
நன்றி பிரபு

நயிற்றெஜன் போன்ற வாயுக்கள் உரை குளிரில் நீராகும். ஹயிட்றேஜன் காபன் போன்றவையும் இருக்கலாம் . காரணம் அடிப்படை மூலக்கூறுகள் ஒரு கலக்ஸ்சியில் இருந்து இன்னொரு கலக்ஸ்சிக்கு கூட செல்லலாம் என்பது விஞ்ஞானிகள் கருத்து . நான் கூறியது போலே வின் கற்கள் காரணமாக இருக்கலாம் .

அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் விளக்குகிறேன் . உங்களுடைய பதிவுக்கு லிங்க் மேல குடுத்திருக்கேன் டா
butterfly Surya said…
நண்பன் மயில்ராவணம் மூலம் உங்கள் வலை அறிந்தேன்.

அருமையான பதிவு.


முகப்புத்தகத்தில் உங்கள் பதிவை இட அனுமதி தேவை.

நன்றி.
butterfly Surya said.
நன்றி நண்பரே
நீங்கள் போடுங்கள் .. ஊக்கத்திற்க்கு நன்றி . தொடர்ந்து இவ்வாறான ஆக்கங்களை எழுதுகிறேன்

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்