விமான விபத்திலிருந்து எப்படி தப்பலாம்..?

உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ ,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான் தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் .


அண்மையில் நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின் பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும் மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார் மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது . அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை .


இனி எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் . இது குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2 மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும் முக்கியம் .இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கின்றன . சிலவை தவிர்க்கமுடியாதாயினும் உயிர் பிழைக்கும் விகிதத்தை எம் இறுதி நேர நடவடிக்கைகளால் அதிகரிக்கலாம்.


எவளவு பெரிய விபத்தானாலும் ஒரு விமானம் முழுமையாக தீப்பிடித்து வெடித்து எரிவதற்கு 90 செக்கன்கள் ( 1 1/2 நிமிடங்கள் ) ஆகும். இது சர்வதேச தீ விபத்து பாதுகாப்பு மையத்தின் ஆய்வு அறிக்கை கூறும் தகவல் . அந்த 90 செக்கன்களையும் நாம் பயனுள்ள விதத்தில் பாவிப்பதிலேயே உயிர் பிழைக்கும் சந்தர்ப்பம் உண்டு .


நடை பெற்ற விபத்தில் இருந்து பிழைத்த உமர் பாரூக் கூறிய கருத்தின் படி பார்த்தால் முடிவெடுக்கும் சந்தர்ப்பம் அதிகம் . சில உயிர்கள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் ஏன் மற்றயவர்களால் எழுந்து வரமுடியவில்லை ??


"திடீரென விமானம் தள்ளாடியது. விமானத்தின் இறக்கை ஒன்று மலை மீது உரசியதை பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லாரும் அலறினோம்.சிறிது நேரத்தில் மலை மீது பலத்த சத்தத்துடன் விமானம் மோதியது. விமானம் முழுக்க தீ பிடித்தது. எங்கும் புகையாக இருந்தது."தைரியத்தை வர வழைத்துக்கொண்டு எழுந்து வெளியில் ஓடிவந்தேன். அடுத்த சில நிமிடங்களில் நான் இருந்த இடம் உள்பட விமானத்தின் பெரும் பகுதி வெடித்து சிதறியது."


I got caught in some cables but managed to scramble out

தான் இடையில் மாட்டிக்கொண்டதாக கூறியிருந்தார் உமர் . விமானம் எரிந்து தீப்பற்ற முதலே சிலரது உயிர்கள் பதற்றத்தால் செல்லும் வாய்ப்பு அதிகம் . மற்றும் பொருள்கள் ஏதாவது எதிர்பாராத விதமாக அடிபடும் . முக்கியமாக தலைப்பகுதியே முதலில் தாக்கப்படும் .
தலைப்பகுதி அடிபடுவதால் சிலர் முதலே மயக்கமடைவர் . தலைப்பகுதியை முன்னாள் இருக்கும் இருக்கையில் வைத்து படுக்க வேண்டும் . இதனால் முதல் சந்தர்ப்பத்தில் இருந்து பிழைக்கலாம் .


என் அருகில் இருந்தவர்கள் எல்லாரும் மயங்கி, சரிந்து கிடந்தனர். ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.


பலரால் எழுந்து ஓடி வந்திருக்க முடியும் ஆனால் நெருப்பு எரிந்ததால் வந்த புகை அவர்கள் மயக்கத்திற்கு காரணம் . வரும் நெருப்பு புகை மேலாக தான் கூடுதலாக செல்லும். குறைவாக சுவாசிப்பதன் மூலமும் கீழே குனிந்து கொண்டு வெளியேறுவதன் மூலமும் அந்த மயக்கத்தை தவிர்க்கலாம் .இல்லாவிட்டால் ஈரமான துணியால் மூக்கை மூடிக்கொள்ளவும்இந்த செயன்முறை உயிர் பிழைக்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் .


"நான் இருந்த பகுதியில் விமானம் இரண்டாக பிளந்து கிடந்தது. இதனால் வெளியில் செல்ல வழி கிடைத்தது." ஏன் அவரால் விரைவாக வெளியேறும் பகுதியை திறக்கம் முடியவில்லை? அவர் இருந்த இருக்கைக்கு அருகாமையில் தான் வெளியேறும் பகுதி இருக்கிறது . தான் விமானத்தின் பின் பகுதியில் இருந்ததாக கூறினார் .அனைவரும் கட்டாயமாக விரைவாக வெளியேறும் பகுதி திறக்கும் முறையை அறிந்திருக்க வேண்டும். சில வேளைகளில் விமானம் எரியும் போது அதில் பணி புரிபவர்கள் கூட இறந்திருக்கலாம் . ஆகவே எமக்கு அதை திறக்க தெரிந்திருக்க வேண்டும் . இதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் .

நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் நமது பாதுகாப்பை மேலும் உறுதி செய்கின்றன .கூடுதலாக விரைவாக வெளியேறும் கதவுக்கு அருகில் இருப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்புகள் மற்றும் விமானத்தில் பின்னால் இருப்பவர்கள் உயிர் பிழைக்கும் வீதம் 60 % ஆம்..


முக்கியமான தவறுகள்


விரைவான அதிர்ச்சி

அனைவரும் அதிர்ச்சியில் செய்வதறியாது தான் இருப்பார்கள். சிலர் கடவுளை வணங்குவர் . கண்களை மூடிக்கொண்டு இருந்து விடுவார்கள் . அடுத்த படியை யோசிப்பதில்லை . இது தான் உண்மை .


பொதிகளை கை விடாமல் இருத்தல்


முக்கியமாக எம்மவர்கள் பொதிகள் மீது கவனம் செலுத்தி அதை எடுத்துக்கொண்டு செல்ல முற்படுவர். பொதிகளை விட்டு விட்டு உடனடியாக வெளியேற மட்டுமே பார்க்க வேண்டும் . எந்த நேரத்தில் வெடிக்கும் என்பது கூற முடியாது . ஆனால் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்பது நிச்சயம் .

தயவு செய்து விமான பயணத்தில் குடிக்காதீர்கள் . அது உங்கள் செயல்ப்படும் திறனை இன்னும் குறைக்கும் .


விமான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கும் போது அலட்ச்சியம்


அனைத்திற்கும் காரணம் அலச்சியம். கூடுதலாக நாம் ஒருவரும் விமானம் புறப்படும் முன் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை . காரணம் எத்தனையோ தடவை கேட்டு விட்டோம் என்ற அலட்ச்சியம் . ஆனால் சில தகவல்கள் விமானத்துக்கு விமானம் வேறு படும் எனபதே உண்மை .பாதுகாப்பு உறையை கூடுதலாக உடனே அணிய வேண்டும் ஆனால் விமானம் விழுந்தது நீர் பரப்பாக இருந்தால் விமானத்தை விட்டு உடனே குதிக்க தேவையில்லை .


இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து பார்த்தால் தான் தெரியும் என்பது சிலருடைய கருத்து . சிலருடைய கருத்து அந்த நேரம் என்ன செய்வதென்றே தெரியாது என்பதே . நாம் அதிர்ச்சியடைவதன் மூலம் உயிர் காப்பாற்றப்படப்போவதில்லை .உயிர் பிழைக்கும் விகிதம் மனதளவில் குறைக்கப்படும் . ஆனால் மன அழுத்தத்தை எதிர் கொண்டு விரைவாக செயல்ப்பட வேண்டும் . சில திடீர் வெடிப்புகள் தவிர்க்க முடியாது .இவற்றால் உயிர் பிழைக்கலாம் என்றில்லை . உயிர் பிழைக்கும் விகிதத்தை கூட்டலாம்.


இந்த தகவல் பிரயோசனமாக இருந்தால் அனைவரையும் சென்றடைய ஓட்டை கிளிக் செய்யவும் .

Comments

S.Sudharshan said…
நன்றி மின்னுது மின்னல் :)
soundar said…
இந்த பதிவை நான்கு நாள் முன்னே போட்டு இருக்கலாம்
soundar said…
This comment has been removed by the author.
S.Sudharshan said…
நன்றி soundar
ஹஹா ...
விபத்து நடந்தா பிறகு தான் எண்ண தோன்றியது ....
விபத்து நடக்காவிட்டால் விழிப்புணர்வு ஏற்ப்பட்டிருக்காது ...
Felix Raj said…
thanks for infos, very important message, thank you very much felix
saisayan said…
nice article.. thanks for information...
நல்ல பதிவு சார்..
velumani1 said…
நல்லாத்தான் இருக்கு. ஆனா இது விபத்து நடப்பதற்கு முன்தினம் படித்திருக்க வேண்டிய பதிவு. கண் கெட்ட பிறகு சூரிய நம்ஸ்காரம் சொல்லித்தர நம் ஊரில்தான் எத்தனை பேர்? நீங்க என்ன வேலை பார்க்கரீங்க? நேத்து ஒருத்தர் ஃப்ளைட் எப்படி தரை இறக்குவதுன்னு எழுதியிருந்தார். எல்லோருமே டெக்னீசியன்கள் மாதிரியே நடிச்சுகிட்டிருந்தா, உண்மையான டெக்னீசியன்கள் என்னத்தை புடுங்குவார்கள். அவங்கவங்க வேலையை அவங்கவங்க செய்ங்க! அடுத்தவன் ஷூவுக்குள் கால் நுழைக்காதீங்க. போங்க, போயி புள்ள குட்டிகளுக்கு பாடமாவது சொல்லிக் கொடுங்க.
S.Sudharshan said…
thank u velumani1

எங்க யாரையும் காணமேன்னு பார்த்தேன்
கண் கெட்ட பின்பு தான் சூரிய நமஸ்காரத்தின் அருமை தெரியும் என்பது உங்களுக்கு தெரியாதா ?
அதுவும் இந்த விமான விபத்து நடக்கவில்லை என்றால் இதற்க்கு இவளவு முக்கியத்துவம் கொடுத்து வாசித்திருப்பீர்களா ?
இவாவு முக்கியத்துவம் நிச்சயம் கிடைத்திருக்காது . நீங்கள் கூட வாசித்திருக்க மாற்றீர்கள் . நான் ஒன்றும் டெக்னீஷியன்களை குறை சொல்லவில்லையே. நான் எம்மால் என்ன செய்யமுடியும் என்பது பற்றியே எழுதியுள்ளேன் .
S.Sudharshan said…
saisayan said...
//nice article.. thanks for information.//

நன்றி சாய் சயன் .

பட்டாபட்டி.. said...
//நல்ல பதிவு சார்.//

நன்றி பட்டாப்பட்டி .. நான் சார் இல்ல . இப்பிடி எழுதின உடன சார் என்டிருவீன்களே .. நானும் யூத்து தான்
S.Sudharshan said…
Felix Raj said...
//thanks for infos, very important message, thank you very much felix//

thank u soo much felix raj
jayaraj said…
நன்றி! தங்களது பதிவு பயன் உள்ளதாகும் ! எதுவுமே பட்டால் தான் தெரியும் ! இனிமேலாவது முன்எச்சரிக்கையுடன் எல்லா விமானப்பயனிகளும் இருப்போம் !!


தஞ்சை.ஞான. ஜெயராஜ்.

துபாய்,UAE .
S.Sudharshan said…
thank u jayaraj

thank u soo much....

Popular posts from this blog

கண்ணாளனே...!

மழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி

கலாவல்