Skip to main content

12 B திரைப்படமும் பார்க்காத உலகமும்

குப்பைகளுக்குள் முத்து போல வந்த சில அருமையான தமிழ் திரைப்படங்கள் , கிட்டத்தட்ட நாம் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும்  சில  தியரிகளை வைத்து வந்த படங்கள் சரியான விளக்கமின்மை காரணமாக பெரிதாக பேசப்படவில்லை .

அவ்வாறான படங்களில் தசாவதாரம்( வண்ணத்து பூச்சி விளைவு ) , அதாவது இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களுக்கும் இடையில் ஒரு தொடர்புண்டு, ஒரு சிறிய மாற்றம் பெரியதொரு விளைவை கொண்டு வரும் என்கிறது அந்த தியரி .கயோஸ் தியரியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது . ஒரு வண்ணத்து பூச்சியின் இறக்கையின் படபடப்பு ஒரு பெரிய சூறாவளியையே உருவாக்கலாம் என்கிறது கயோஸ்  தியரி . 

 இன்னொரு அருமையான பேசப்படாத படம் தான் 12 B . அநேகருக்கு படம் விளங்கியிருக்க வாய்ப்பில்லை . போதிய விளக்கமின்மை காரணமாக இருக்கலாம் . விளக்கம் போதாது என்றும் கூற முடியாது . ஒரு படத்தில் வெறுமனே தியரியை விளங்கப்படுத்திக்கொண்டு இருக்க முடியாது .ஒரு வேளை நம்மவர்கள் ( பெரும்பாலான சதவீதம் ) இன்னும் அந்த நிலையை அடையவில்லையோ என்னவோ . அநேகரின் கருத்து விமர்சனங்கள் கூட அந்த படம் நேரத்தின் முக்கியத்துவம் கூறுவதாக மாத்திரம் அமைகிறது என நினைக்கின்றனர் . நிச்சயமாக  இல்லை .முடிந்தவரை விளக்க முயற்ச்சிக்கிறேன். வாசித்து விட்டு படத்தை மீண்டும்  பார்த்தால் விளங்கும் .



12 B திரைப்படம் எடுத்துக்கொண்ட தியரி தான் ஐங்ஸ்டாயினின் ஸ்ட்ரிங் தியரி (String theory ), நேர பயணம்  அல்லது சமாந்தரமான உலகம் எனலாம் . மிக மிக ஆச்சரியமான தியரி தான் .

நாம் வாழும் உலகம் ஒன்றல்ல . முடிவிலி உலகங்கள் உண்டு .எமது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நம் கண்ணுக்கு தெரியாமல் நம்முடனேயே நகர்கிறது . நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் மாறு இருக்கிறது . நீங்கள் ஒரு பாதையால் செல்கிறீர்கள் என்றால் , அந்த பாதைக்கு  எதிராகவும் நீங்கள் செல்வது போல ஒரு நிகழ்வு உங்கள் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் .உங்கள் காதலி காதலை ஏற்றுக்கொள்கிறாள் என்றால் , ஏற்க்காமல் இருப்பது போல இன்னொரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் . ஆனால் அது முடிவிலி .ஒரு காரியத்தை செய்யும் நிகழ்வு செய்யாத நிகழ்வு என எம்முடனேயே இந்த நிகழ்வுகளும் நகர்கிறது .
  

நாம் பிரதிகளாக , எமது நிகழ்வுகள் கிளைகளாக  உருமாறி எமக்கு சமாந்தரமாக எம்முடனேயே  எமது இன்னொரு(பல)  வாழ்க்கை நிகழ்கிறது .

சில உதாரணங்கள்  சொல்கிறேன் 

சில இடங்களால் நீங்கள் செல்லும் போது அந்த இடங்கள் எப்போதோ பார்த்த இடங்கள் போல இருக்கும் .ஏற்க்கனவே அந்த இடத்தில் இருந்த ஒரு உணர்வு . சில செயல்கள் நாம் ஏற்க்கனவே செய்து முடித்தவையாக இருக்கும் .சிலரை எங்கேயோ பார்த்த உணர்வும் தோன்றும் . காரணம் எல்லா நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பு . நான் கூறியது போல இன்னொரு கோணத்திலும் நீங்கள் நகர்கிறீர்கள் .

சில நேரங்களில் நீங்கள் சில பொருட்களை தொலைத்துவிட்டு தேடுவதுண்டு , ஆனால் அது கிடைக்காது . போட்ட இடமும் தெரியும் ,அங்கே தேடினாலும் கிடைக்காது . ஆனால் பல காலங்கள் கழித்து அதே பொருள்  கிடைக்கும் .

சிலர் உங்களை எங்கேயோ  பாத்திருக்கேன் என்று கூட கேட்டிருப்பார்கள் . அதற்க்கான விடைகள் தான் இந்த தியரியில் .


அந்த தியரியை பிரதிபலிக்கும் படம் தான் 12 B . சாதாரண இளைஞனின்(ஷியாம் ) வாழ்க்கை ஒரு பஸ்ஸை தவறவிடுவதால் எவ்வாறு போகிறது எனவும் , அதே நபர் பஸ்ஸில் ஏறி இருந்தால் அவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என காட்டுவது தான் அந்த படத்தின் கரு . அதாவது இதில் அனைவருக்கும் விளங்காத மறந்த விடயங்கள் என்னவென்றால் இருவரின் வாழ்க்கையும் சமாந்தரமாக தான் செல்கிறது . ஒரே இடத்தில் இருவர் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் நடக்கும் .  

ஒரு ஷியாமுக்கு(இண்டர்வியூக்கு  பஸ்ஸை பிடித்த ) வேலை கிடைக்கிறது , ஜோதிகாவுடன் காதலில் தோற்கிறார் , வேலை  செய்யும் இடத்தில் சிம்ரனை சந்திக்கிறார் . மற்றைய ஷியாம்(பஸ்ஸை தவறவிட்ட ) வாழ்க்கையில் தோற்றாலும் ஜோதிகாவுடன் காதலில் ஜெயிக்கிறார் . ஆனால் ஜோதிக கண்ணுக்கோ அதே ஷியாமின் கண்ணுக்கோ மற்றைய ஷாம் தெரிய மாட்டார் , ஆனால் நிகழ்வுகளில் தொடர்பு இருக்கும் .

படத்தின் ஆரம்பத்தில் மருத்துவமனையில் சிம்ரனை(கவலையில் வந்து அழுகையில் ) சந்திக்கும் ஷியாம் . படத்தின் இறுதியில் அதே போல ஒரு நிகழ்வில் மீண்டும் அதே இடத்தில் சிம்ரனை பார்ப்பார் . ஆனால் சிம்ரன் முதல் அழுதமைக்கு காரணம் அதே ஷியாமின் இன்னொரு நிகழ்வு இறந்து கிடப்பது . அதாவது அதே ஷியாம் இறந்து கிடப்பார் . ஆனால் ஜோதிகா பின்னால் செல்லும் ஷியாமை கடந்து தான் சிம்ரன் செல்வார் . ஆனால் சிம்ரன் கண்ணுக்கு மற்றைய  ஷியாம் இருப்பது தெரியாது . கண்ணுக்கு தெரியாத இன்னொரு ஷியாம் உயிரோடு இருக்கிறார் .


பல இடங்களில் நடை பெறும் நிகழ்வு , உதாரணமாக சண்டை இடம் பெறும் இடங்கள் ,  இரு ஷாமும் மாறி மாறி ஜோதிகாவை சந்திக்கும் இடங்கள் என்பன பொதுவாகவே இருக்கும் . அது தான் அந்த தொடர்பு முறை . ஒவ்வொரு நிகழ்வுக்கும் பல பிரதிகள் இருக்கிறது .


இந்த தியரியை விளக்க தனிப்பதிவு தான் போட வேண்டும் . ஆனால் இதன் அடிப்படையாவது விளங்கியிருக்கும் .சுருக்கமாக விளக்கியுள்ளேன் . தவறவிட்டவர்கள் , விளங்காமல் விட்டவர்கள் இந்த படத்தை மீண்டும்  பாருங்கள்.  நிச்சயம் விளங்கும் . 

நல்ல படங்களை தந்த ஜீவா நம்முடன் இல்லை . உன்னாலே உன்னாலேயில்  ஆண் பெண் பிரச்சனைகளை சரியாக காட்டி இருப்பார் . இரண்டும் அருமையான படங்கள் . ஐங்ஸ்டாயினும் தியரிகளை முடிக்காமல் சென்றதும் கவலை தான் .

நல்ல படங்கள், வித்தியாசமான படங்கள்  நிச்சயம் மக்களை சென்றடைய வேண்டும் .

To Watch it Online- 12 B


பிடித்திருந்தால்  இந்த தகவல் அனைவரையும் சென்றடைய ஓட்டளிக்கவும் .அன்பான  உங்கள் பின்னூட்டங்களை தெரிவியுங்கள் .

Comments

Valaakam said…
சுப்பர் போஸ்ட்டா...
பயணுள்ள பதிவு. சுப்பர் விளக்கம்... :)

12 பி படம் இரண்டு சந்தர்ப்பத்தை விளக்கியிருக்கிறது.
இன்னொரு இங்லிஸ் படத்தில்... பல கிழைகளாக எடுத்து விளக்கி இருந்தார்கள். பெயர் நினைவில்லை.

இந்த தியரியும் தியரி ஒஃப் ரிலேட்டிவிடியோட ஒப்பிடக்கூடியதுதான்...
அதாவது... ஃப்ரேம் கொள்கையோட... ( ஃப்ரேம் பற்றி பரிமாணங்கள் தொடரில் எழுதி இருக்கிறேன்...)
வளாகம் said...

நன்றி டா ...
ஸ்ட்ரிங் தியரியில் நிறைய இருக்கிறதாம் . ஐங்ஸ்டெயின் பாதீலையே சொல்லாம போயிட்டார்
ஸ்ரீ.கிருஷ்ணா said...
really intresting .....

நன்றி சிறீ கிருஷ்ணா
மிகவும் வியப்பானதும் கூட .
Harinarayanan said…
This comment has been removed by the author.
Harinarayanan said…
நல்லா எழுதியிருக்கீங்க சுதர்சன்.வாழ்த்துக்கள்!ஸ்டிரிங் தியரியப் பத்தி நான் இன்னும் படிக்கல. நீங்க கண்டிப்பா அதப்பத்தி ஒரு தனிப்பதிவு போடுங்க! இன்னும் அறிவியல் தொடர்பான பல பதிவுகள் எழுத முயற்ச்சி பண்ணுங்க. நன்றி!
பத்மஹரி.
http://padmahari.wordpress.com
இது ஒரு ஆங்கிலபடத்தின் (Sliding Doors) முழு தழுவலே. ஆனாலும் சுவை குறையாது தமிழிலும் எடுத்திருந்தார்கள்.
Anonymous said…
nice
பத்மஹரி (Padmahari) said...

நன்றி
நிச்சயமாக எழுதுகிறேன் பத்மஹாரி
சூர்யகதிர் said...
//இது ஒரு ஆங்கிலபடத்தின் (Sliding Doors) முழு தழுவலே. ஆனாலும் சுவை குறையாது தமிழிலும் எடுத்திருந்தார்கள்//.

நான் அந்த படம் பார்க்கவில்லை . ஆனால் ஜீவாவும் நன்றாக செய்திருக்கிறார் .

Anonymous said...
nice
நன்றி அனானி
ஜெய் said…
சூர்யகதிர் சொன்ன மாதிரி 12B படம் Sliding Doors படத்தின் தழுவல்தான்.. கதைக்கரு தழுவல்னா ஒத்துக்கலாம்.. ஆனா, பல காட்சிகளே தழுவல்தான்.. அதுக்கு ஒரு நன்றி கார்டு கூட போடல.. சம்பந்தமே இல்லாம ஜோதிகாவுக்கும் ஷ்யாமுக்கும் நடக்கற கார் ஆக்ஸிடெண்ட் காட்சி வச்சு, அதை அப்படியே mission impossible 2-ல இருந்து காபி அடிச்சுருக்காங்க..

ஐன்ஸ்டைனின் String theory இதைப்பத்தினதா??? அது Quantum Physics பத்தினதுன்னு இல்ல நான் படிச்சு இருக்கேன்!! http://en.wikipedia.org/wiki/String_theory
which says that we need to consider gravitational force at longer distances and electromagnetic force at shorter distances..
ஜெய் said...
//சூர்யகதிர் சொன்ன மாதிரி 12B படம் Sliding Doors படத்தின் தழுவல்தான்.. கதைக்கரு தழுவல்னா ஒத்துக்கலாம்//.

தமிழில் படங்கள் வந்த உடன தான் சிலர் அதை எங்கயாவது காப்பி அடிச்சிருக்க என தேடுவதுண்டு. ஆங்கில படங்கள் பார்க்காதவர்கள் எங்கு செல்வது ?

"String theory posits that the electrons and quarks within an atom are not 0-dimensional objects"

தகவலுக்கு நன்றி நண்பரே .. ஆனால் இப்படியும் ஒன்று பல பரிமாணங்களாக இருக்கலாமே . ஒவ்வொரு நிகழ்வுகளும் கண்ணுக்கு தெரியாத மூலக்கூறுகளால் ஆனது . அந்த மூலக்கூறுகள் கண்ணுக்கு தெரியாதவை . அந்த நிகழ்வுகளுக்கு கோர்வை உண்டு . அது தான் நான் தெரிந்து கொண்டது . சில தியரிகள் விக்கிபீடியாவில் உள்ளது போல் இல்லை . காரணம் சிலவற்றை முழுமையாக எயக்ச்டையின் சொல்லவில்லை . இன்னும் தேடி அடுத்த பதிவுகளில் விரிவாக எழுதுகிறேன் .

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...