மனிதன் எந்த மர்மத்தை கண்டு பிடித்தாலும் இறந்த பின்னரான மர்மத்தை தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறான் . புரியாத பல புதிர்களையும் கேள்விகளையும் , குழப்பங்களையும் சுமந்து நிற்கிறது . இந்த குழப்பங்களில் வாழ்கிறது கடவுள் நம்பிக்கை. விஞ்ஞானத்தால் எட்ட முடியாத இடம் அது , இருந்தாலும் அதனை அணுகும் முறையில் முன்னேறுகிறது மனோதத்துவமும் விஞ்ஞானமும் .
மரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்கள் சிலர் இன்னமும் உயிர் வாழ்கிறார்கள் அதில் பலர் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் . தமது கண்கள் மூடும் முன்னர் தமது வாழ்வு , தமது சூழல் அனைத்தும் ஒளியால் நிரம்பி இருந்தது எனவும் ஒரு வித அமைதி நிலை காணப்பட்டது எனவும் கூறியுள்ளனர் உயிர் பிழைத்து வந்தவர்கள். அமானுஷ்ய விடயங்கள் பல மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது நடைபெறும் .
மரணத்திற்கு அருகாமையில் சென்று வருவது என்றால் என்ன ? அது என்ன அமானுஷ்யமா ? ஏதாவது சக்தியா ? அல்லது மூளையின் திடீர் மாற்றங்களா ? என பல கேள்விகள் எழுந்தாலும் விஞ்ஞானம், சமய நம்பிக்கை , அறிவியல் எனும் பார்வையில் கொஞ்சம் பார்க்கலாம் என எண்ணுகிறேன் .
மரணத்திற்கு பின்னரான வாழ்க்கை பற்றி கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த பிளாடோ என்பவர் தனது குறிப்பில் Er என்ற போர் வீரன் இறந்த போது தனது உயிர் (நாம் கூறுவது இவ்வாறே ) செல்வதை உணர்ந்து கூறியதை குறித்திருக்கிறார் . இது உண்மையா என பலரிடம் கேள்வி எழுந்தாலும் கூடுதலானோருக்கு அதே போன்ற ஒரே உணர்வு ஏற்பட்டிருக்கிறது .
மரணத்தை அண்மிப்பவர்களின் உணர்வு
அமைதியான உணர்வு
பதற்றமில்லாது அமைதியாக செயல்ப்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் . அவர்களால் மட்டும் தாம் இறக்கப்போவது பற்றி தெரிந்திருக்கும் ஆனால் அதை எப்படி விளங்கப்படுத்துவது வெளிப்படுத்துவது என அவர்களுக்கு தெரிந்திருக்காது . மரணத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இருப்பதை அது காட்டுகிறது.
மிகவும் கூடுதலான வெளிச்சம்
ஒரு வித ஒளி வந்து அவர்கள் சுற்றுப்புறம் அனைத்தையும் சூழும் . அவர்களின் ஆள் மனது இறைவனை அல்லது சொர்க்கத்தை காண்பது போல உணர்வை தோற்றுவிக்கும்.
உடலுக்கு வெளியே அனுபவம்
தான் உடலை விட்டு வெளியேறுவது போல உணர்வு தோன்றும் . கிட்டத்தட்ட மிதப்பது போல . தன்னால் தனது உடலை பார்க்க முடியும் . சிலர் தாம் டாக்டர்கள் தம் உடலுக்கு சிகிச்சை செய்வதை பார்த்ததாக கூறியுள்ளனர். பின்னர் எங்கோ பறந்து போவது போல உணர்வு தோன்றுமாம் .
இன்னொரு பரிமாணம் நோக்கி செல்லல்
சில வேளை அவர்கள் அவர்கள் மனதில் பதிந்த மத நம்பிக்கைகள் படி அல்லது உலக அனுபவங்கள் என்பன அவர்களை அந்த அந்த பரிமாணங்கள் நோக்கி இட்டுச்செல்லும் . ஒரு வேளை சொர்க்கத்திற்கும் சில வேளை நரகத்திற்கும். ஒரு வேளை வித்தியாசமான உலகமாக இருக்கலாமோ .
உயிரின் தொடர் பயணம்
ஒரு குகை போன்ற அமைப்பினூடு வெளிச்சமான பகுதியை நோக்கி செல்வது போல உணர்ந்திருக்கின்றனர் சிலர் . குகையினூடு செல்லும் போது பல விதமான தேவதைகள் , கடவுள் போல அவர்கள் மனதில் சித்தரிந்திருந்த உருவங்களை கண்டுள்ளனர் .
சக்திகளுடனான உரையாடல்
அதனூடு பயணிக்கும் போது சில உரையாடல்களை கேட்டுள்ளனர் . பெரிய ஆண் குரலில் இது உங்களுக்கான நேரமில்லைமீண்டும் திரும்பி செல்லுங்கள் என்றெல்லாம் கட்டளை வந்திருக்கிறது . அது இறைவன் குரல் என நம்புகின்றனர் .
வாழ்க்கை மீதான மீள் பார்வை
சிலர் இறந்த பின்னர் தமது வாழ்க்கை மீண்டும் தொடக்கத்திற்கு செல்வது போல உணர்வர் . கிட்டத்தட்ட பிளாஷ் பக் போல ஒன்று ஓடும்.
இது சிலர் கண்டு வந்தவை ஆனால் இன்னொருவர் தாம் இந்த உலகை விட்டே வெளியேறுவது போலவும் அந்த உணர்வு மிகவும் மகிழ்ச்சியானது எனவும் கூறியிருந்தார் . அந்த ஒளிக்குள்ளே செல்ல வேண்டும் என்ற உணர்வு எம்மை தூண்டும் எனவும் அதனுள் சென்றவுடன் அது தன்னை இன்னொரு ஒளி இல்லாத நகரத்திற்கு அழைத்து சென்றது எனவும் அங்கு தன்னுடன் ஒலியுடன் ஒருவர் நின்றதாகவும் கூறியிருந்தார் . (from The vestuble by Jess E. Weiss )
இன்னொருவரின் கருத்துப்படி அது ஒரு சிறந்த அனுபவம் எனவும் தன்னை சுற்றி அனைத்தும் வெள்ளையாக இருந்ததாகவும் ஆனால் அதே நேரம் வெட்ட வெளியாக இருந்ததாகவும் கூறியிருந்தார். இவர் தற்கொலை முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் .
Tracy Lovell, after a drug overdose suicide attempt (in "The return from silence " by Scott D. Rogo)
இந்த பிரச்னையை விஞ்ஞான ரீதியாகவும் வேறு விதமாகவும் ஆராயலாம் . விஞ்ஞானத்தை தவிர்த்து பார்த்தால் உடலை விட்டு வெளியேறும் உயிர் எமது உலகத்துக்கும் மரணத்திற்கு பின்னரான இன்னொரு உலகத்துக்கும் இடையில் பயணிக்கிறது . இது மிக நீண்ட குகை போன்ற இடங்களினூடு பயணிக்கின்றது . சில வேளைகளில் ஒளியின் வேகத்தில் பயணிக்கலாம் .
இது நேர இயந்திரத்துடன் அதாவது ஐன்ஸ்டினின் நேர பயணத்துடன் தொடர்பு பட்டுள்ளதா என யோசிக்க தோன்றுகிறது . மேலே கவனித்தீர்களானால் பச்சை எழுத்துக்களால் அவர்கள் பார்த்த வெளிச்சமில்லாத உலகம் , குகை போன்ற அமைப்பினூடு பிரயாணம், பார்த்த இன்னொரு வெளிச்சமில்லாத நகரம் போன்றவை இந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு வேளை எமது வாழ்க்கை ஒரு தொடராக மீண்டும் பழைய காலத்துக்கோ அல்லது அதி நவீன காலத்துக்கோ நாம் செல்லலாம் .
சிலருக்கு நித்திரையில் தியானத்தின் போதும் உடலை விட்டு மேலே செல்வது போல உணர்வுகள் தோன்றும் . உடலை விட்டு வெளியே செல்வது மரணத்தின் ஒரு அங்கமே .
மரணத்தை அண்மித்தால் விஞ்ஞான ரீதியாகவும் பார்க்கலாம் . எனது அடுத்த பதிவில் விஞ்ஞான அறிவியல் பார்வையில் இடுகிறேன் .
தகவல் பிடித்திருந்தால் ஓட்டு போட்டு அனைவரையும் சென்றடைய செய்யவும்...
Comments
தொடர்ந்து எழுதுவேன் .. ;))
பகுத்தறிவுள்ளவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ..எடுத்த மாத்திரத்தில் எதுவும் சொல்ல மாட்டார்கள் ஆனால் ஆராய்வார்கள் .. இதை விஞ்ஞான பார்வையிலும் பார்க்கலாம்
Innum eluthunga... :)