ஏலியன்ஸ் - பிரபஞ்ச தேடல் 2

எனது அடுத்த பதிவு :- ஒன்று ஏன் ஒன்று இரண்டு ஏன் இரண்டு ??? கிளிக்   

முன்னைய பதிவில் நூறு பில்லியன் பால்வீதி உள்ள  இந்த அண்டத்தில் நம்மைப்போல ஒரு சூரிய குடும்பமோ அல்லது எமது பூமி போலவே ஒரு பூமி இருப்பதற்கோ  எவளவோ சாத்தியங்கள் உண்டு என பார்த்தோம் . எமது பூமியில் உயிர்கள் எதிர்பாராத ஒன்றாகவே உருவாகியது என பார்த்தோம் . மற்றும் அடிப்படை மூலக்கூறுகள் எரி கற்கள் மூலம் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லப்படலாம் எனவும் பார்த்தோம்  . போதுய ஓட்டுகள் இல்லாததால் அந்த பதிவு அனைவரையும் சென்றடையவில்லை . முதல் பதிவை வாசிக்க :-- ஏலியன்ஸ்  பாகம்  1
==================================================================================

அவ்வாறு  எதிர்பாராத விதமாக எமது உலகில் தோன்றிய உயிர்கள் நாமாக இருந்தாலும் அனைத்திற்க்கும் ஒரே தியரி தான் . அது தான் தக்கன  பிழைத்தல் . எத்தனையோ உயிர் பிணைப்புகள் வந்தாலும் சூழலுக்கு  ஒத்துப்போகக்கூடிய உயிர்கள் தான் நிலைத்திருக்கின்றன . இவ்வாறு வந்த உயிரினங்களுக்கு  சக்தி (உணவு) தேவைப்பட்டது . அப்போது தொடங்கியது தான் தேடலும் உயிரினங்களின் பரம்பலும் .

இதற்க்கு பல உதாரணங்கள் நாம் தற்ப்போது  காணும் விலங்குகளிடம் உண்டு . கவனித்து பார்த்தால் தாவர உன்னிகளுக்கு கண்கள் முகத்தின் இரு பக்கமும் பக்க வாட்டில் இருக்கும் ஆனால் மாமிச உன்னிகளுக்கு கண் நேரே பார்த்த படி தான் இருக்கும் . தாவர உண்ணிகள் மாமிச உன்னிகளிடம் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள சுற்றி இருக்கும் கண் உதவுகிறது , ஆனால் மாமிச உன்னிகளுக்கு அவற்றின் இலக்கு தான் குறி அதனாலேயே அவற்றின் கண்கள் முன்னோக்கி இருக்கிறது .

இதை ஏன் கூறுகிறேன் என்றால் இவ்வாறன செயல்ப்பாடுகள் நாம் இன்னொரு உயிர் இருப்பதாக கூறும் உலகத்திலும் நடக்கிறது என்பது தான் ஸ்டீபன் ஹவ்கிங் எனும் கொஸ்மொலோஜிஸ்ட் , பௌதீகவியலாளர்   கூறியிருக்கும் கருத்து . நான் முன்னர் கூறிய  அடிப்படை மூலக்கூறுகளின்  வளர்ச்சிக்கு தேவையானது நீர் . நீர் வேறு சூரிய குடும்பத்திலும்  இருக்கலாம் . ஆனால் நம் அருகில்  இருக்கும் செவ்வாயிலும் உறைந்த நிலையில் நீர்  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது . செய்மதி புகைப்படங்கள் உரை நிலை நீர் இருப்பதை உறுதி செய்வதோடு இன்னொரு சான்றும் கிடைத்துள்ளது .


இவை நீருடன் தொடர்பிருந்தால் மட்டுமே உருவாகும் என்பது விஞ்ஞானிகள்  கருத்து . செவ்வாயில்  உயிரினங்கள் இருக்கலாம் என்பது ஒரு கருத்து . அது இல்லாவிட்டால்  வியாழனின் உபகோள் யுரோப்பா விழும் இருக்கலாம் . முன்னைய பதிவில் யுரோப்பா  பற்றி பார்த்திருக்கிறேன் .  எம்மால் கிரகங்களுக்குள் தான் செல்ல முடியுமே தவிர நட்ச்ச்சத்திரங்களுக்குள் செல்ல  முடியாது .

ச்டீப்ஹன் ஹவ்கிங்கின் தேடல் படி ஏலியன்ஸ் எவளவோ வகைகளில் இருக்கலாம் . நிச்சயம் நம்மை போல நம் உயிரினங்களை  போல இருக்க வேண்டும் என்றில்லை .


நிச்சயம் நீரை தவிர இன்னொரு விடயத்தை அடிப்படையாக கொண்டு உயிர் வாழலாம்  . அது தான் நைற்றேஜன் . நம் பூயில் அது வாயுவாக இருக்கிறது . ஆனால் -320 பாகை பாரனயிட்டில் அது நீர் . நைற்றேஜன் கடல்கள் கூட நம் அண்டத்தில் இருக்கலாம் . அதில் கூட உயிரினங்கள் இருக்கலாம் .ஏன் வாயுக்களில் கூட உயிரங்கள் வாழலாம் என்பது எதிர்வு கூறல் . சுற்றி வர எங்கு பார்த்தாலும்  அங்கே உயிரினங்கள் வாழ்வதற்க்கு  சாத்தியம் அதிகம் .

ஏலியன்ஸ் எப்படி இருந்தாலும் கவலையில்லை அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதே முக்கியம் . அவர்களும் எம்மை போல யோசிப்பார்களா ? இல்லை எம்மை விட தொழில்நுட்பம் கூடியவர்களா ? . எம்மை விட தொழில் நுட்பம் கூடியவர்களாக இருந்தால் எமக்கு தான் ஆபத்து .


கூடுதலாக ஏலியன்ஸ் கடத்தல் சுமார் 50 வருடங்களாக நிகழ்வதாக கதை . தனியான வழியில் இரவு வேளையில் செல்பவர்கள் காணாமல் போவதாக கதை . ஆனால் இது அரசால் மூடி மறைக்கப்பட்டுள்ளது . நாசாவும் மறைத்து வருகிறது . அமெரிக்க அரசு பறக்கும் தட்டை கண்டு எடுத்ததாக தகவல் . அது பற்றிய எனது பதிவை வாசிக்க . அமெரிக்காவின் ரகசிய இராணுவத்தளம் ஏரியா ரியா  51 பற்றியது .

ஏலியன்ஸ் இருப்பதற்க்கு உறுதியான சில தகவல்கள் மேலும் உண்டு . ஆகஸ்ட் 16 1997   செய்மதியில் இருந்து தொலைத்தொடர்ப்பு நிலையத்துக்கு ஒரு சிக்னல் கிடைத்தது .


அதனை தொலைத்தொடர்பு நிலைய கருவிகள் பதிவு செய்தது . அது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது . கணணி  அந்த சிக்னலை ஆறு எழுத்துகளாகவும் இலக்கங்களாகவும் பதிவு செய்தது .  அதனை மாற்றிய போது வாவ் எனும் சொல் என கண்டறியப்பட்டது .

எலியன்சால்  எமது சூரிய குடும்பத்திட்க்கே பிரச்சனை காத்திருக்கிறது .
எலியன்சால்  என்ன பிரச்சனை ? மனிதன் பூமிக்கு என்ன செய்கிறானோ அதையே அவையும் செய்யுமா ?  அவற்றுடன் ஆனா ஆராச்சியில் வெற்றி காண முடியுமா ? என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் .


பிடித்திருந்தால் ஓட்டு போட்டு அனைவரையும் சென்றடைய செய்யவும் .

Comments

நமக்கு எலிகலாலும் பிறச்சனை


எலியன்சாலும் பிற்ச்சனை
ஹஹா .. அது எண்டா சரி தான் . நாங்க சும்மா இருந்தா தானே ...
Sukumar said…
தொடர்ந்து படிக்கிறேன். நன்றி பகிர்வுக்கு,,
Sukumar Swaminathan said...
தொடர்ந்து படிக்கிறேன். நன்றி பகிர்வுக்கு,//

மிகவும் நன்றி ... தொடருங்கள்
மகரன் said…
நாம பாட்டுக்கு "சிவனே..." எண்டு இருக்கிறம்...
இதில அவங்க வந்து "ஐயோ..!" எண்டு எம்மை அலற வைக்கப் போறாங்களோ..?
எப்படியோ....பதிவு ரொம்ப நல்லா இருக்கு சார்...!
shunya prem said…
விஞ்ஞானத்துக்கு பதில் தெரியாததால் உயிரினங்கள் தோன்றியது ஒரு விபத்து,பெரும்பாலான விஞ்ஞான கருத்துகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது போல் இதுவும் எதிர்காலத்தில் மாறிவிடும்.

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்