டைம் டிரவல் ( கால பயணம் ) சாத்தியம்!!

டைம் டிரவல் ( கால பயணம் ) எனும் விடயம் எல்லோரும் தலையை பித்துக்கொள்ளும்  விடயம் பலருக்கும் இன்னும் தெளிவில்லை. பலருக்கு இன்னும் இப்படி ஒரு விடயம் இருப்பதே தெரியாது . இறைவன் காலத்தை கடந்தவன் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம் . எம்மாலும்  கடக்க முடியும்.

இறந்த காலத்துக்கு செல்ல முடிந்தால் நாம் இழந்தவற்றை செய்யலாம். பிரபலமானவர்களை பார்க்கலாம் .நாம் தவறவிட்ட யாருடன் வேண்டுமானாலும் கதைக்கலாம் . உதாரனத்திட்க்கு நியூட்டனை சந்திக்கலாம் , ராஜ ராஜ சோழனை சந்திக்கலாம். எதிர் காலத்துக்கு சென்று நம் உலகை கவனிக்கலாம்.


காலத்துக்கு விளக்கம் கேட்டால் ஒருவராலும் விளக்கம் கொடுக்க முடியாது . காலம் என்பது மிக மிக விளங்குவதற்கு கடினமான விடயம் . முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன் . நேரத்தை பார்க்கவும் முடியாது தொடவும் முடியாது . ஆனால் அதன் விளைவுகளை நாம் உணர முடியும் . எமக்கு வயதாகிறது , மரங்கள் வளருகின்றன போன்றவற்றின் மூலம் காலம் என்ற ஒன்று எம்முடன் நகருவதை நாம் உணரலாம் . நீங்கள் இப்போது மவுசை வைத்து கிளிக் செய்து கொண்டு இருக்கிறீர்கள் அந்த ஒவ்வொரு நொடியும் இமைக்கும் பொழுதில் கடக்கிறது . கடக்கும் நிமிடங்களை நிறுத்த முடியாது . ஆனால் அதை நாம் உணருகிறோம் . ஒவ்வொரு நொடியும் இறந்த காலத்திற்க்கு  செல்கிறோம் .

இன்னும் விரிவாக விளக்க வேண்டுமானால் , நாம் காரில் பயணிக்கும் போது நேர் பாதையில்(நீளம் ) பயணிக்கிறோம் , வளை பாதையில்(அகலம் ) பயணிக்கிறோம் . அதே ஒரு உயரமான மலை பாதையில் வளைந்து வளைந்து ஏறுகிறோம்( உயரம் + நீளம்+அகலம் ) . மூன்று பரிமாணங்கள் உண்டு . நான்காவது பரிமாணம் தான் நேரம். அதாவது நாம் பயணம் செய்யும் காரின் காலத்தை அளவிடலாம் (அதுவும் ஒரு அளவுகோல் தானே ) . அப்படியானால் கண்ணுக்கு தெரியாத மிக மிக குறுகியது தான் நேரம் . இன்னும் எவளவோ பரிமாணங்கள் இருக்கின்றன. 

அதாவது இரு நேரங்களுக்கு இடையில் ஒரு இடைவெளி இருக்கிறது . அவை இரண்டையும் தொடர்பு படுத்துகிறது தான் நேரம் . 

இறந்த காலத்துக்கு கொண்டு செல்லும் டைம்  டிரவல் இயந்திரம் மிகவும் சக்த்தியை உறிஞ்சும் இயந்திரமாக காணப்படும் . ஒவ்வொரு குகைக்குள்ளும் செல்வது போல அமைய வேண்டும் என்பது ஒரு ஊகம் . 


இது சாத்தியம் என்பது ஐங்ஸ்டெயின் ரிலேடிவிட்டி தியரி சொல்கிறது( E =MC ^2 ). அதாவது ஒளியின் வேகத்தில்(3 *10 ^8 ms) சென்றால் நாம் இறந்த காலத்துக்கோ நிகழ் காலத்துக்கோ செல்லலாம் என்பது அந்த தியரி . 

இயற்கையில் எதிர்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் எம்மால் போக முடியுமா?
ஒரே பதில் வார்ம்ஹோலேஸ்(வார்ம்ஹோலஸ்) என்பது பவுதீகவியலாலரின் கருத்து .  

ஒவ்வொரு தேடல்களுக்கும் இயற்கையில் நாம் காணும் விடயங்களில் இருந்து விடை கிடைக்கும் . அதே போல நாம் காணும் சடப்பொருட்கள் . உதாரணமாக பூல் விளையாட்டு பார்த்திருப்பீர்கள் . பந்து மிகவும் வழுக்கும் தன்மை உடையது. விளையாடும் மேசையும் மிக மிக தட்டை. ஆனால் அதை மிக மிக தொழில்நுட்பம் பாவித்தால் அங்கு நிறைய துளைகள் காணப்படும். பந்திலும் நிறைய துளைகள் காணப்படும். இவ்வாறன துளைகள்  மூன்று பரிணாமங்களிலும் காணப்படுகிறது. 


ஆனால் இது நான்காவது பரிணாமமான நேரத்திலும் காணப்படுகிறது . அணுவை விட மிக மிக சிறிய  இடைவெளிகள் நேரத்திலும் காணப்படுகிறது .அளவிட மிக சிறியது . மிக மிக சிறிய இடைவெளிகள், விரைவான குறுக்கு பாதை , இரு வேறு நேரத்தையும்  இடத்தையும் அந்த இடைவெளிகள் இணைக்கின்றன . மில்லியன் ட்ரில்லியன் சென்டி மீட்டர் ஒரு சதுர குறுக்குவெட்டு பரப்புக்கு இருக்கலாம் . மனிதனால் போக முடியாதா அளவில் காணப்படுகிறது .     

டைம் டிரவல்  இயந்திரம் செய்ய வேண்டிய வேலை என்ன ?
 இந்த துளைகள் மனிதனால் செல்ல முடியாதவை . பவுதீக விஞ்ஞானிகள் முயற்ச்சி அந்த துளைகளில் ஒன்றை பெரிதாக்கினால் அதனுள் மனிதனை செலுத்தலாம் என்பதே. அதற்க்கான முயற்ச்சிகள் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது . மனிதனை செலுத்த  முடியா விட்டாலும் செயற்க்கை கோளை விண் வெளியில் வைத்தே  இவ்வாறு டைம் இயந்திரம் மூலம் எதிர் காலத்திட்ட்க்கு கொண்டு செல்லலாம் .

Comments

அடுத்த பதிவு???
D.Gajen said…
மிகவும் நல்ல பதிவு...ஒளியின் வேகத்தில் நாம் சென்றால் (எந்த திசை என்பதை விடுத்து) உலகம் சுற்றிக்கொண்டேயிருக்கும், ஆனால் எமக்கு வயது போகாது,எனவே நாம் எதிர்காலத்துக்கு போய் விடுவோம்! இது புரிகிறது..!ஆனால் இறந்த காலத்துக்கு எப்படி..? அது என்ன parallel universe Theory..? இணையத்தில் அது பற்றிய தமிழ் பதிவுகளை காணமுடியவில்லை.அதனடிப்படையில் இறந்தகாலத்துக்கும் செல்ல முடியுமாம்! வளாகம் வலைப்பூவில் பார்த்தேன்.அதனை பற்றியும் ஒரு பதிவு போடுங்களேன் ?
shunya prem said…
தமிழில் விஞ்ஞானம் சம்மந்தம்பட்ட செய்திகளை சிறப்பாக எழுதிகொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துங்கள்.
shunya prem said…
கடந்த காலத்துக்கு செல்வது என்பது கனவுகளில் மட்டும்தான் சாத்தியம்.

ஒளியின் வேகத்தை எது எட்டுகிறதோ அதுவும் ஒளியாகிவிடும். 3 *10 ^8 ms-இந்த வேகத்தை எது எட்டுகிறதோ அதை நாம் ஒளி என்று அழைக்கலாம்.
வேகம்தான் முக்கியம்.
ஒளி என்று நாம் அழைப்பது இந்த வேகத்தை எட்டும் ஒன்றைதான். ஒளி என்று ஒன்று கிடையாது அதற்கு என்று தனிப்பட்ட வேகம் எல்லாம் கிடையாது.உண்மையிலே அந்த குறிப்பிட்ட வேகத்தை எட்டும் ஒன்றைதான் நாம் ஒளி என்கிறோம்.
நல்ல பதிவு..இன்னும் விரிவாக எழுதுங்கள்.

Popular posts from this blog

கண்ணாளனே...!

அவள் கவிதையானவள்

மழைக்குருவியும் குயில்பாட்டும் - காதல் காட்சி