நேற்றைய டெய்லி மிரர் பத்திரிகையில் "Moving from aid to entrepreneurship" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. வடக்கின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியத்தைச் சொல்லியிருந்தது அந்தக் கட்டுரை. இருந்தாலும் உள்ளிருக்கும் சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டு முன்னேறுவது பற்றி அந்தக் கட்டுரையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஒரு பொருளாதார அறிவுரையாளரிடம் இருந்து எல்லாவற்றையும் எதிர்பார்க்கவும் முடியாது. நிறையத் தன்னார்வ நிறுவனங்களும், சில நாடுகளும் வடக்கிற்குத் தேவையான உதவிகளையும், வழிகாட்டல்களையும் செய்யக் காத்திருக்கின்றன. ஆனால் அந்தந்தச் சமூகத்தில் இருக்கிற மக்கள்தான் அதற்கு ஆர்வம் காட்டவேண்டும். வருகிற உதவிகளை எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரியாமல் பலர் இருக்கிறார்கள். அரச வேலைவாய்ப்புத்தான் வேண்டுமென்று கேட்கிறார்கள். அது கிடைக்கும்வரையாவது சுயதொழில் முயற்சிகளில் இறங்கமாட்டேன் என்கிறார்கள். தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காக, உலகில் தோற்றுப்போன கொள்கைகளைப் பரப்பி இளைஞர்களைத் திசைதிருப்புபவர்கள் மலிந்துபோயிருக்கிறார்கள். சமூக...