நகுலனின் 'சில அத்தியாயங்கள்' எனும் நெடுங்கதையில் கிறிஸ்தோபர் மார்லோ எழுதிய எட்வர்ட் II ....
அவனைச் சிறையில் அடைத்துவிட்டார்கள்... அவன் அவனைக் கொல்ல வருகிறான்... அவனுக்கு அது தெரியும்... இருந்தாலும் கேட்கிறான்...
என்னைக் கொல்லத்தானே...
சே, உனக்குத் துணையாக...
இல்லை, போய்விடு..
அவன் போகையில் கூப்பிடுகிறான்...
தனியாக இருக்க பயமாக இருக்கிறது, போகாதே...
எனக்குத் துணையாக இரு...
இருக்கிறேன்.
தூங்கு...
தூக்கம் வரமாட்டேன் என்கிறது...
ஏன்?...
நீ என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறாய். எனக்குத் தெரியும்.
Comments