Skip to main content

Posts

அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறைக் கொள்கை - QDDR 2015

அமெரிக்காவானது தனது புதிய இராஜதந்திரக் கொள்கைகள்  மற்றும் அபிவிருத்திக்கான திட்டங்களையும் உள்ளடக்கிய இரண்டாவது அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது. இது 'QDDR' என அழைக்கப்படுகிறது. இதனை அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகளுக்குப் பொறுப்பான  திணைக்களம் வெளியிடுகிறது. அமெரிக்க அரசினதும் சர்வதேச அபிவிருத்திக்கான ஏஜென்சியினதும்(USAID) நீண்டகால மற்றும் குறுகிய இலக்குகளைக் கொண்ட வெளியுறவுக்கொள்கைகளை நன்றாக ஆராய்ந்து, நன்கு நெறிப்படுத்தக்கூடிய திட்டங்களை வடிவமைத்து  இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. கொள்கைகளையும் திட்டங்களையும் ஒவ்வொரு வருடமும் மீளாய்வு செய்வதை விடுத்து, நான்கு வருடங்களுக்கு உண்டான  நீண்டகாலத் திட்டங்களை இது முன்வைக்கிறது.  ஒபாமாவின் தலைமையின் கீழ், அப்போதைய(2009-2013) அமெரிக்கச் செயலாளராக  இருந்த ஹிலாரி கிளிண்டனால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த முறைமை. முதலாவது அறிக்கையானது ஹிலாரி கிளிண்டன் தலைமையில் 2010 இல் வெளியிடப்பட்டது. அதில் 'மக்கள் சக்தி மூலம் முன்னோக்கிச் செல்லுதல்' என்கிற சாராம்சம் முன்னிலைப்படுத்தப்பட்டது.  Smart Power...

நிறம்

எங்கள் நிறுவனத்தில் வேறு பிரிவிற்கு புதிதாக மனேஜர் ஒருவர் வந்திருக்கிறார். வெளித்தோற்றத்திலேயே ஒரு நல்ல படிப்பாளிக்குரிய விபரங்கள் தெரிந்தது. அதிகமாகப் புத்தகங்கள் வாசிப்பவர் என்று அவருக்கு நெருங்கியவர்கள் சொன்னார்கள். நான் அடிக்கடி வாசித்துக்கொண்டிருப்பதை பார்க்கிறவர்கள் என்கிறபடியால் எனக்கென்று அந்தச் செய்தியை விசேஷமாகச் சொல்வதுபோலச் சொன்னார்கள். பொதுவான விடயங்களில் விவாதம் வரும்போது, தன்னைவிட உயர்நிலை அதிகாரிகளுக்கு புத்தகங்களிலிருந்து சில எடுத்துக்காட்டுகளைச் சொல்லி விளங ்கப்படுத்துவார். இவர்களும் கைபேசியைத் தடவுவதை நிறுத்திவிட்டு அவர் சொல்வதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அவர் சொல்கிற விதமும் அப்படியிருக்கும். சிங்களவராக இருந்தபோதிலும் தமிழர்களே தெரிந்துவைத்திருக்க ஆர்வம் காட்டாத தமிழர் வரலாற்றின் நுணுக்கமான விபரங்களை மிகவும் தெளிவாகப் புரியவைப்பதைப் பார்த்திருக்கிறேன். அன்று சோழர்களின் இலங்கை வருகையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இருந்தாலும் அதெல்லாம் one-way communication தான். உரையாடல் நீட்சி அடைவதற்கு மற்றப் பக்கத்தில் இருபவருக்கும் கொஞ்சம் விஷயங்கள் தெரிந்திருக்க...

சிறுபேச்சு : நகுலன்

நகுலனின் 'சில அத்தியாயங்கள்' எனும் நெடுங்கதையில் கிறிஸ்தோபர் மார்லோ எழுதிய எட்வர்ட் II ....  அவனைச் சிறையில் அடைத்துவிட்டார்கள்... அவன் அவனைக் கொல்ல  வருகிறான்... அவனுக்கு அது தெரியும்... இருந்தாலும் கேட்கிறான்... என்னைக் கொல்லத்தானே...  சே, உனக்குத் துணையாக...  இல்லை, போய்விடு..  அவன் போகையில் கூப்பிடுகிறான்...  தனியாக இருக்க பயமாக இருக்கிறது, போகாதே...  எனக்குத் துணையாக இரு...  இருக்கிறேன். தூங்கு...  தூக்கம் வரமாட்டேன் என்கிறது...  ஏன்?...  நீ என்னைக் கொல்லத்தான் வந்திருக்கிறாய். எனக்குத் தெரியும்.

புதுவெளி

“There is music in words, and it can be heard you know, by thinking.”   -   E.L. Doctorow மணிரத்னம், வைரமுத்து, ரஹ்மான் கூட்டணியில் 'ஓ காதல் கண்மணி' பாடல்கள் நவீன வடிவம் பெற்றிருக்கிறது. ஜதிகள், மிகவும் குறைவான வரிகள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் சொற்கள், இடையிசை, ஆரம்ப இசை அளவீடுகள்  என ரஹ்மானின் முயற்சிகள் அனைத்தும் பாடல் முழுதும் புதிதாக வெளிப்படுகிறது. ஆனால் கவிதை மொழிக்கான வெற்றிடம் நிரப்பப்படாமலே இருப்பாதாகத் தோன்றுகிறது. வெளிப்படுபவை எல்லாமே மொழிகளாகும்போது, இசைபோல சொற்களுக்கும் எப்போதும் இணையான இடம் கிடைக்கவேண்டியது அவசியம். இந்தக் கூட்டணியின் முன்னைய படைப்புகளில் கவிதை உயரும் இடங்களில் இசை நெகிழ்ந்துகொடுத்தும், இசை உயரும் இடங்களில் மொழி மௌனித்தும் இயங்கியிருக்கிறது. தன்னுடைய மொழிக்கு சரியான இடம்தேடிக் காத்திருந்தபோது வந்தவர் ரஹ்மான் என வைரமுத்து கூறியிருந்தார். இந்தக் கூட்டணியின் முன்னைய படைப்புகள் எல்லாம் இன்றுவரை சலிக்காத்திருப்பதன் ரகசியமும் அதுதான். மெதுவாய் நுழைந்து பரவுகிற தந்திரத்தை தமிழ் ஓசைகள் அறிந்திருக்கின்றன. அவை இசைவந்த பாதைய...

நண்ணு முகவடிவு

பாரதி எழுதிய 'கண்ணன் என் காதலன்' பாடலை வெவ்வேறு குரல் வடிவங்களில் கேட்டிருக்கிறேன். டி.கே ஜெயராமன் முதல் கார்த்திக் வரை பாரதியின்  மொழியைப் பாடிவிட்டார்கள். அவற்றில் பின்னணிப் பாடகியான சுசித்ராவின் குரலும்,  அதனை அவர் பாடிய விதமும்  மிகவும் வசீகரமானது. தமிழ் உச்சரிப்பின் தெளிவு, அழுத்தம், உறுதி  எல்லாம்  அத்தனை அழகு.அவன் மொழியைச் சந்தேகமாகப் பாடினாலே அழகு சிதைந்துவிடும். எழுத்தில் மட்டுமல்லாது, இசையோடு நெகிழ்ந்துகொடுக்கும்போதும் தமிழ்ச் சொற்களின்  வளைவுகள் எல்லாம் அழகு. அதிலும்  'சொற்தேர்வு' என்று வரும்போது   பாரதியை மிஞ்ச வேறொருவரும் இல்லை. அதைப் பிரதியீடு செய்யவோ, உடைக்கவோ முயன்றால் தோல்விதான். சுசித்ராவைத் தவிர  பலரும் "ஆரிடம்" என்பதை "யாரிடம்" என்று பாடிவைக்கிறார்கள். "நண்ணு முகவடிவு" என்று உச்சரிக்கிறபோதே கற்பனை பயனுறுகிறது. ஒரு பெண்ணினுடைய துயரமாக இருந்தாலும் இதில் காதலின் இன்பமான துன்பமும், இழந்த இனிமையும்  இழையோடுகிறது. சில நினைவுகள் பரிணமிக்கும்போதேல்லாம் இதைக் கேட்பதுண்டு. பெண்களினிடத்திலிது போலே -- ஒரு பேதையை மு...

புத்தகங்கள் 5/36 [2015] Business Model Generation

வளர்ந்துவருகிற தொழில்நுட்பம் காரணமாகப்  புத்தகங்கள் தமது இருப்பினைத் தொலைத்துவிடும் என்பதே பலரதும் எண்ணம். தொழில்நுட்ப வளர்ச்சியில் சில விடயங்கள் பிரதியீடாகவும் சில விடயங்கள் மெருகேறிக்கொண்டும் வருகின்றன. புத்தகங்களை இரண்டாவது வகையில்தான் இணைத்துக்கொள்ளவேண்டும். அதாவது, மாற்றமடைந்து  வருகிற விடயங்களின் பட்டியலில் சேர்த்துக்கலாம். புத்தகங்களின் எதிர்காலம் பற்றிய விடயத்தில், அமெரிக்காவினைச் சேர்ந்த Brian Dettmer என்பவரின் கருத்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியது. புகைப்படத் தொழில்நுட்பமும் அச்சுத் தொழில்நுட்பமும் முன்னேறியபோது ஓவியங்கள் அழிந்துவிடும் என்பதே பலருடைய கருத்தாக இருந்தது. ஆனால் ஓவியங்களோ தம்மை  அன்றாடப் பயன்பாட்டிலிருந்து விடுவித்துக்கொண்டன.  கிட்டத்தட்ட அதனை ஒரு விடுதலை என்றே சொல்லவேண்டும். தனக்கென ஒரு சுயமான கௌரவத்தோடு ஓவியங்கள் வேறு வடிவங்களையும் நிலைகளையும் தொட்டன. அதே நிலையில்தான் புத்தகங்களும் இருக்கின்றன என்பதே அவருடைய கருத்து.  ' Business Model Generation' என்கிற புத்தகத்தை ஒரு நவீன புத்தக வடிவமைப்பு என்று சொல்லலாம் . அதன் வட...

எப்போதும் பெண் 4/36 [புத்தகங்கள் 2015]

ஒரு ஆணினுடைய பார்வையில், சொட்டுச் சொட்டாய் உயிர்பெறும்  பெண்மையின் துல்லியமான உணர்வுகளைப் படிப்பதென்பது தமிழ்ச் சூழலில் எப்போதேனும் ஒருமுறை நிகழ்கிற விஷயம். ஒரு பெண்ணினுடைய விரகதாபத்தை வெளிப்படுத்தும் புதுமைப்பித்தனின் 'வாடாமல்லிகை', 'கல்யாணி' மாதிரியான கதைகள், வைரமுத்துவின் கவிதைகள் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால் ஒரு பெண்ணினுடைய வாழ்வினை முழுவதுமாகப் பதிவுசெய்கிற தமிழ் நாவல்களைக் காண்பது அரிது.  சுஜாதா தன்னுடைய "எப்போதும் பெண்" என்கிற நாவலில் ஒரு பெண்ணினுடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய விடயங்களைப் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார்.  ஒரு பெண்ணானவள் எப்படி வளரவேண்டும் என்பதை ஒரு சமூகம் எப்படி முன்கூட்டியே நிர்ணயித்து வைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கிறார். அந்தத் தீர்மானத்தின் வழியிலேயே இந்தப் புத்தகத்தில் வருகிற பெண்ணும் பிறந்து வளருகிறாள். பிரான்ஸ்ஸினைச் சேர்ந்த  பெண் எழுத்தாளரான  Simone de Beauvoir என்பவரின் "The Second Sex" என்கிற பிரபலமான புத்தகத்தை உதவியாகக் கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியதாக சுஜாதா கூறுக...