Skip to main content

Posts

ஒருவரால் என்ன முடியும்- ஒன்று செய்யுங்கள் !

எவருக்காகவும்  கடவுளை பிரார்த்திக்காதீர்கள்  .முடிந்தளவு கடவுளாக இருங்கள் அனைவருக்கும் .. மனிதனின் அடிப்படைத்தேவைகளில் உறையுளை இழந்து ,முதல் நாள் உண்ட உணவையும் ,உடுத்த உடையையும் மட்டுமே மூலதனமாக கொண்டு இடம்பெயரும் அகதிகளின் தினம் நாளை .   இன்னொருவருடைய துயரை அறிய நான் அப்படி இருந்தால் என ஒரு சுயசரிதையை  எம் மனதுக்குள் நாமே எழுதிக்கொள்வது நல்லது . எம்மால் என்ன செய்ய முடியும் ?- ஒருவரால் மாற்ற முடியும் ...   இந்த முறை அகதிகள் தினத்துக்காக(ஜூன் 20 ) ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் தாபனம் தனது இணையத்தளத்தில் "ஒன்று செய்யுங்கள் " என்ற தொனிப்பொருளில் தனது தளத்தை நேர்த்தியாக வடிவமைத்துள்ளது .   Click here இந்த தளத்தில் Learn ,Spread the world  ,Give என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .   வீடியோ பார்க்க  Learn பகுதியில் அகதிகள் படும் துயரங்களையும் ,அவர்களாகவே எம்மை  உணர்ந்து அவர்களின் துயரங்களையும் உணரும் வகையிலும் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது . 1 . அகதிகளின் உணர்வுகளை கேட்டல்...

காலத்தில் பயணிக்கும் துகள்

கால பயணம் பற்றிய முன்னைய பதிவு  இந்த நேரத்தை நான்காவது பரிணாமமாக சிந்தித்தால் மட்டுமே உணரமுடியும் . உதாரணமாக நீங்கள் இந்த ஆக்கத்தை ஒவ்வொரு சொல்லாக படிக்கும் போதும் நேரம் இறந்த காலத்துக்கு சென்று கொண்டிருக்கிறது .நேரத்தில் நாம் பயணிக்கிறோம் .  மனிதன் பயணித்த அப்பலோ விண்கலம் 25 ,000 mph எனும் வேகத்தை தான் இறுதியாக அடைந்தது.ஒளியின் வேகத்தில் பயணிக்க இதை விட கிட்டத்தட்ட 2000 மடங்கு வேகம் வேண்டும். அதுவும் சாத்தியமாகும் ,ஆனால் காலம் செல்லும்.  உண்மையில் நேரத்தில் இறந்தகாலத்துக்கோ,எதிர்காலத்துக்கோ பயணிப்பதில்  இது மாத்திரமல்ல பிரச்சனை .பரடொக்ஸ்(கிராண்ட்  பாதர்,மேட் சயன்டிஸ்ட் )  ,வோர்ம் ஹோல், லூப் பிரச்சனை என்றெல்லாம் பல பிரச்சனைகள்.  ஆனால் மனிதன் தன்னால் பயணிக்க முடியாவிட்டாலும் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் அணு துகள்கள் பயணிக்க கூடிய அளவு உலகின் மிகப்பெரிய துகள்களை முடுக்கி விடும்(  particle accelerator ) மையம் சுவிசில் ஜெனீவாவில் அமைக்கப்பட்டுள்ளது . அடித்தளத்தில் 16 மைல்கள் தூரமுள்ளதான வட்டவடிவில் அந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது .அந்த...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிம...

எக்ஸ்ட்ரீம் சூப்பர் மூன் - மார்ச் 19 என்ன நடக்கும் ?அறிவியல் விளக்கம்

ஜப்பானில் ஏற்ப்பட்ட புவியதிர்வு மற்றும் சுனாமி தாக்கத்திற்கு பின்னர் அனைவரிடமும் கேள்வி எழுப்பி இருக்கும் செய்தி இந்த சந்திரன்  பூமிக்கு அருகில் நெருங்கி வரவிருக்கும்  செய்தி . இந்த நிகழ்வு  மார்ச் மாதம்  19 ஆம் திகதி இடம்பெறும் . இதன் விளைவாக தான் ஜெப்பானில் பூமியதிர்ச்சியும் ,ஆழிப்பேரலையும் ஏற்ப்பட்டது எனவும்  மார்ச் 19 ஆம் திகதி மிகப்பெரிய பூகம்பங்களும் சுனாமி அலைகளும் உலகம் முழுதும் ஏற்ப்படும் எனவும் சில  வானவியலாளர்கள்  கூறிவருகின்றனர்  . இதெல்லாம் உண்மையா ? ஜெப்பானில் ஏற்ப்பட்ட சுனாமிக்கும் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கும் சந்திரனும் தொடர்புண்டா ? வரலாற்றில் இப்படி நிகழ்ந்த போது ஏதாவது இதற்க்கு முதல் நடந்திருக்கிறதா? இந்த சூப்பர் மூன் என்றால் என்ன ? என்பவை பற்றி ஆராய்வோம் . சந்திரன் வழமையாக பூமியை சுற்றி எப்படி இயங்குகிறது ? சந்திரன் பூமியை சரியான வட்ட பாதையில் சுற்றுவதில்லை .நீள்வட்ட பாதையில் தான் சுற்றுகிறது . சந்திரனின்  நீள்வட்ட பாதையில் மற்றைய பக்கத்தை விட ஒருபக்கம் 31 ,000 மைல்கள் குறைவாகும் .பூமியிலிர...

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

முதலில் பாலியல் தெளிவூட்டும் இப்படி மன பக்குவம் அடைந்தவர்களுக்கான(18 +) படங்கள் எடுப்பதற்கு தைரியம் வேண்டும்.அதுவும் முக்கியமாக எமது சமுதாயம் இன்னும் பகுத்தறிவு ,மனப்பக்குவம் அடையாத நிலையில் .ஆனாலும் கவுதம் தெளிவாக சொல்லியிருக்கிறார் பக்குவநிலையை அடைந்தவர்களுக்கான படம் என்று . பலரின் தவறான புரிதலுக்கு உள்ளான ஆரம்ப கதையின் சுருக்கம் . சிறுவயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் வீராவிடம் சில வருடங்கள்  கழித்து இளம் பராயத்தில் ஏற்ப்படும் மனோநிலை மாற்றமே பல பிரச்சனைகளுக்கு வழிகோலுவதுடன் வாழ்க்கையையும் புரட்டிப்போடுகிறது . சிறுவயதில் தாயை இழந்து ,தனது தந்தையால் பாலியல் வன்புணர்ச்சிக்கு,துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தப்படும் சமீரிட்க்கு(வீராவுக்கு அல்ல ) அவனது பதின்ம வயதில் (Teenage (13 )) அவன் மீது அக்கறை செலுத்தும் பக்கத்து வீட்டு பெண் மீனாட்சி என்பவருடன் பார்த்தவுடனேயே காதல் ஏற்ப்படுகிறது . இந்த கொடுமைகளை தெரிந்துகொண்ட மீனாட்சி சமீரை காப்பாற்றி தன்னுடன் வைத்துக்கொள்கிறார் .சமீரின் பெயரை வீரா எனவும் மாற்றி அவனை வளர்ந்தார் .வீராவும்...

காதல் - ஹார்மோன்களினூடு ஒரு பயணம் !

இந்த காதலை ஹார்மோன் செய்யும் கலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் . நீங்க காதலிக்காம இருந்தா கூட இந்த அடுத்த,பக்கத்துவீட்டு ,நண்பர்கள்  காதலை கவனித்தாலே போதும் எவ்வளவு அடிமையாகி இருக்கிறார்கள் என தெரியும். பேஸ்புக் வாலில் கவிதை கிறுக்கல்கள் ,எஸ் எம் எஸ் என அனைத்திலும் அதன் அடிமைத்தன வெளிப்பாடு பார்த்திருபீங்க . எதனால் இப்படி ? ஏன் இவ்வாறான அடிமைத்தனம் என்ற கேள்விகளுக்கு சேதன இரசாயனத்தோட கொஞ்சம் அறிவியலையும் குழைத்து பயணம் செய்து பார்ப்போம் . எதிர்ப்பு பதிவல்ல ,காரணம் தெரிந்துகொள்வதில் தவறும் இல்லை . குருநாதர் சுஜாதா அவர்கள்  ஆயுத எழுத்தில் எழுதிய வசனம்  சுருக்கமாக இருக்கும் .  காதல்னு ஒன்னு கிடையவே கிடையாது . நாம் பிறந்ததெல்லாம் , நாமண்ணா நான் நீ இதோ இந்த பச்சை சட்டை மஞ்ச சுடிதார் போலீஸ்காரர் எல்லாரும் பொறந்தது எதுக்காக நம்மோட நலத்துக்காக . இந்த காதல், பாட்டு, ஓவியம் ,கண்ணீர் இதெல்லாமே இருட்லையும் ,ஹோடேல்லையும் ,பெட்லையும் முடியிறது தானே . estrogen    testosterone   Vasopressin   வெறும் ஒர்கனிக் கெமிஸ்ட்ரி . x கிரோம...