ஜப்பானில் ஏற்ப்பட்ட புவியதிர்வு மற்றும் சுனாமி தாக்கத்திற்கு பின்னர் அனைவரிடமும் கேள்வி எழுப்பி இருக்கும் செய்தி இந்த சந்திரன் பூமிக்கு அருகில் நெருங்கி வரவிருக்கும் செய்தி . இந்த நிகழ்வு மார்ச் மாதம் 19 ஆம் திகதி இடம்பெறும் .
இதன் விளைவாக தான் ஜெப்பானில் பூமியதிர்ச்சியும் ,ஆழிப்பேரலையும் ஏற்ப்பட்டது எனவும் மார்ச் 19 ஆம் திகதி மிகப்பெரிய பூகம்பங்களும் சுனாமி அலைகளும் உலகம் முழுதும் ஏற்ப்படும் எனவும் சில வானவியலாளர்கள் கூறிவருகின்றனர் .
இதெல்லாம் உண்மையா ? ஜெப்பானில் ஏற்ப்பட்ட சுனாமிக்கும் பூமிக்கு மிக அருகில் வரவிருக்கும் சந்திரனும் தொடர்புண்டா ? வரலாற்றில் இப்படி நிகழ்ந்த போது ஏதாவது இதற்க்கு முதல் நடந்திருக்கிறதா? இந்த சூப்பர் மூன் என்றால் என்ன ? என்பவை பற்றி ஆராய்வோம் .
சந்திரன் வழமையாக பூமியை சுற்றி எப்படி இயங்குகிறது ?
சந்திரன் பூமியை சரியான வட்ட பாதையில் சுற்றுவதில்லை .நீள்வட்ட பாதையில் தான் சுற்றுகிறது .
சந்திரனின் நீள்வட்ட பாதையில் மற்றைய பக்கத்தை விட ஒருபக்கம் 31 ,000 மைல்கள் குறைவாகும் .பூமியிலிருந்து மிக தூரத்தில் இருக்கும் போது Apogee நிலையிலும் மிக நெருங்கிய தூரத்தில் இருக்கும் போது Perigee நிலையிலும் இருக்கிறது . மார்ச் 19 ஆம் திகதி மட்டும் இந்த Perigee அதாவது நெருங்கிய நிலையில் சந்திரன் இருக்கப்போவதில்லை .ஒவ்வொரு மாதமும் தான் இது நிகழ்ந்துகொண்டு வருகிறது .
ஆனால் எல்லா முறையும் நீள் வட்ட பாதையும் ஒரே அளவில் இருப்பதில்லை .19 வருடங்களின் பின்னர் இந்த முறை தான் இது மிக மிக அருகில் வரும் . வழமையாக 2 % பூமியை நெருங்கி வரும் இந்த முறை 8 % நெருங்கி வருகிறது .
சூப்பர் மூன் டே(Super moon day ) என்பது என்ன ?
"சூப்பர்" மூன் டே என்பது சந்திரன் எமது பூமிக்கு மிக மிக அருகில் வரும் போது முழுதாக தெரியும் நாள் .அதாவது பூமிக்கு மிக அருகில் ஏற்ப்படும் பௌர்ணமி எனலாம் .
சாதாரணமாக பூமியிலிருந்து 400 ,000 கிலோ மீட்டர்கள் தொலைவில் தான் சந்திரன் இருக்கும் .ஆனால் மார்ச் 19 ஆம் திகதி சந்திரன் சாதாரண தூரம் 400 ,௦௦௦ கிலோமீட்டர்களில் இருந்து 43 ,423 கிலோ மீட்டர்கள் குறைந்து பூமியிலிருந்து 356 ,577 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் .
இந்த தினத்தன்று பூமியதிர்ச்சி ,பெரிய அலைகள் ,சூறாவளி போன்றன உலகம் முழுதும் ஏற்ப்படலாம் என சில வானவியலாளர்கள்/ ஜோதிடர்களின் கருதுகிறார்கள் .
எக்ஸ்ட்ரீம் சூப்பர் முன் டே(Extreme Supermoon day)
மேற்கத்தைய பிரபல வானவியலாளர் ரிச்சர்ட் (Richard Nolle ) தான் சூப்பர் மூன் தினத்தன்று பூமியில் மிகப்பெரிய அழிவுகள் ஏற்ப்படும் என்று தெரிவித்துள்ளார் .இதனால் இதனை எக்ஸ்ட்ரீம் சூப்பர் மூன் டே என கூறியுள்ளார் .
ஆனால் இதை பெரும்பாலான விஞ்ஞானிகள் ஏற்க்கவில்லை என்பது தான் கொஞ்சம் ஆறுதலான விடயம் . காரணம் இதற்க்கு எந்தவித விஞ்ஞான காரணங்களும் இல்லை என்பது அவர்களுடைய கருத்து .
ஜப்பானில் ஏற்ப்பட்ட பூமியதிர்ச்சியும் ,சுனாமியும் இந்த சூப்பர் மூனால் ஏட்ப்பட்டதா என்ற கேள்வி தான் இப்போது பலரிடையே தோன்றியுள்ளது .
இல்லை என்பதே விஞ்ஞானிகளின் திட்டவட்டமான பதில் .காரணம் சுனாமி ஏற்பட்ட தினத்தன்று சந்திரன் சாதாரண தூரத்தை விட பூமியில் இருந்து விலகி இருந்தது .
இதுவரை ஏதாவது பாதிப்புகளை ஏற்ப்படுத்தி இருக்கிறதா என்று பார்த்தால்...
1955 ,1974 ,1992 மற்றும் 2005 களில் சூப்பர் முன் ஏற்பட்ட போது இதே போல இயற்க்கை அழிவுகள் ஏற்பட்டுள்ளன .1955 இல் அவுஸ்திரேலியாவில் ஏற்ப்பட்ட பாரிய வெள்ள(Hunter Valley floods ) அனர்த்தம் .2005 இல் சூப்பர் முன் ஏற்ட்படுவதட்க்கு ஒரு கிழமைக்கு முதல் தான் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டது .காற்றினா புயலும் அதனால் தான் ஏற்பட்டது என்கின்றனர் .ஆனால் இவை தற்செயலாக ஏற்ப்பட்டவை என்பது தான் விஞ்ஞானிகளின் கருத்து .
வழமையாக சந்திரனின் ஈர்ப்பால் அலைகளின் உயரம் அதிகரிக்கும் ஆனால் பூமியதிர்ச்சியை ஏட்ப்பட்டுத்தும் அளவுக்கு தட்டுகளை நகர செய்யும் அளவுக்கு மாற்றத்தை இதனால் ஏற்படுத்த முடியாது என விஞ்ஞானிகள் இப்போது திட்டவட்டமாக அறிவுத்துள்ளார்கள்.seismologists and volcanologists கருத்துப்படி பூமியின் உள் சக்திக்கோ (internal energy ) அதன் சமநிளைக்கோ மாற்றம் ஏற்படாது என்று கூறிகின்றனர் .
ஆனால் இந்த முறை சந்திரனை மிக பெரிதாக அனைவரும் அருகில் பார்க்கலாம் .
James Garvin, chief scientist at the Goddard Space Flight Center under NASA, said in an article on NASA's website that "the effects on Earth from a supermoon are minor."
பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள் .
Comments
நில்லாமல் ஓடி வா....
தொடருங்கள்.
//விளக்கம் எளிமையாக உள்ளது..//
நன்றிகள் :)
சின்னப்பயல் said...
//நிலா நிலா ஓடி வா...
நில்லாமல் ஓடி வா...//
சின்னப்பயல் னு நிரூபிச்சுடீங்க :D
//விஞ்ஞானிகள் எதையுமே இப்படி குழப்பமாகத்தான் அணுகுவார்கள். ஆனால் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் இயற்கையிடம் நாம் ஜம்பம் பலிக்காது. வரட்டும் பார்க்கலாம்.//
தெளிவாக தான் இருக்கிறார்கள் என நினைக்கிறேன் ..பெரிதாக பாதிப்புகள் இல்லை என்று உறுதியாக கூறி உள்ளனர் .. பார்ப்போம் :)
Ashwin-WIN said...
//சுவாரசியமான தகவல் சுதர்ஷன்..
தொடருங்கள்.//
நன்றி அஷ்வின் :)
நன்றி சுதா பல விசயங்களை தொகுத்தழித்துள்ளிர்கள்...
அது சரி நாங்க ரெண்ட பேரும் அந்த அன்று சங்கிலியால் அல்லவா பிணைக்கப்பட்டிருப்போம் எப்படியாம் பார்ப்பது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.
http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_5823.html
தங்களின் இந்த பதிவினை எமது தளத்தில் தங்களின் அனுமதியின்றி வெளியிட்டுளோம். தங்களுக்கு ஆட்சேபனை இருப்பின் நீக்கி விடுகிறோம்.
http://www.kovainews24x7.com/2011/03/19.html
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.