சிலகாலங்களாகத் தொலைக்காட்சிகளில் காட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் விளம்பரங்கள் போட்டார்கள். சமூகத்தின் விருப்பங்களை மிகவும் கவனித்துச் செய்யப்பட்ட அந்த விளம்பரங்கள், சாக்லேட் விற்பனையை மேலும் உயர்த்தியது. குறிப்பாக, குடும்ப நிகழ்வுகள், உறவுகளை வைத்து உணர்வுபூர்வமான விளம்பரங்கள் எடுத்தார்கள். "மகிழ்ச்சியை இனிப்புடன் கொண்டாடுங்கள்" என்றார்கள்.
அதேநேரம், காமம் சார்ந்த உணர்வினை வைத்தும் மிக அழகாக விளம்பரப்படுத்தினார்கள். காமம் சார்ந்த உணர்வுநிலைகளை முன்னிலைப்படுத்திய விளம்பரங்களில், இன்பத்தைத் தேடுங்கள்(Discover) என்றார்கள். குறிப்பாக, அந்தப் பாடலும் அந்தக் குரலுமே நம் செவியின் வழியாக நம் உணர்வுநிலைகளைத் தூண்டிவிடப் போதுமானது.
அந்தப் பாடலின் வரிகள், ஒவ்வொரு விளம்பரங்களிலும் சிறு சிறு மாற்றங்களோடு வந்தது.
Kiss me. I can wet your lips. And your fingertips. And happiness in your eyes. Kiss me. Close your eyes. Miss me.
முத்தாடுதல், இதழில் ஈரம் சேர்த்தல், விரல்களை உண்ணுதல் , கண்களை மூடுதல், சுவைத்தல், இன்மையை உணர்தல், மீண்டும் முத்தாடுதல் என்று திரும்பத் திரும்ப வந்து தழுவும் வார்த்தைகள்கொண்டு நெய்திருப்பார்கள்.
Kiss me, I can read your lips, on your fingertips, I can feel your smile, come on my lips. Miss me.
பெரும்பாலும் சாக்லேட்டில் இருக்கும் மென்மையைத்தான் எல்லோருக்கும் காதலிப்பார்கள். அதன் சில்க் தன்மையை, 'Rich smooth and creamy' என்றார்கள். அது இதழுக்குத் தரும் இன்பத்தை, மேலும் (silk now bubbled up for joy) கூட்டினார்கள்.
சாக்லேட் என்று மட்டுமல்ல, Magnum ஐஸ்கிரீம்க்கும், 'Magnum temptation' என்று விளம்பரப்படுத்தினார்கள். இன்பத்தை நுகர விரும்புபவர்களுக்கு (For pleasure seekers) ஒருவித வாய்வழி இன்பத்தையும், அது தரக்கூடிய தூண்டலையும் காட்சிப்படுத்தினார்கள். கொஞ்சம் வன்மையான தன்மையை(crunch) உடைத்தபிறகு, உள்ளே கிரீம்போன்ற ஈர உணர்வைச் சுவைப்பதை நாம் விரும்புகிறோம். வாய்வழி playfulness இனையும், உண்டபின்பு அது தூண்டும் அதீத உணர்வுநிலைகளையும்(euphoria) காட்சிப்படுத்தினார்கள். Never stop playing....
உதாரணமாக, Ferero roucher சொக்கலேட்டைப் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடிக்கும். இதுவரையில் பார்த்திராவிட்டால், அடுத்தமுறை சூப்பர் மார்க்கெட் போகும்போது வாங்கிப் பாருங்கள். கொஞ்சம் விலை அதிகம். வெளியில் தங்க நிறப் பேப்பரால் சுற்றியிருக்கும். சிப்பிக்குள் தங்க முத்துப்போல வெளித்தோற்றம். அந்தப் பேப்பரைத் திறந்தால், உள்ளே கோதுபோல(wafer) ஓர் அடுக்கு இருக்கும். அதில், 'hazelnut'களை துண்டுகளாக உடைத்து, சொக்கலேட்டோடு கலந்து ஊற்றியிருப்பார்கள். அதை உடைத்தால், உள்ளே இன்னுமொரு மில்க் சாக்லேட் உருண்டை இருக்கும். அதையும் திறந்தால், உள்ளே அந்த 'hazelnut' சின்ன உருண்டையாக இருக்கும். அதைக் கடிக்கும்போது ஒருவிதமான நெருக்கும் உணர்வு ஏற்படும்.
வெளி உறையை மட்டும் அகற்றிவிட்டு அப்படியே வைத்துக் கடித்தால் அதற்குச் சுவை அதிகம். காரணம், நாக்கு ஒவ்வொரு லேயராக சிறுகச் சிறுக உணர்ந்து சுவைக்கும். இந்த மறைப்பும், இந்த உடைப்பும் அந்தச் சுவையை இன்னும் உயர்த்தும். அந்த waferஐ, பற்களால் உடைக்கும்பொழுது ஒருவித வாய்வழி இன்பம்(oral) கிடைக்கும். அந்த மில்க் சாக்லேட் உள்ளே நாவுக்கு இன்பம். பிறகு மீண்டும், உள்ளே இருக்கும் உருண்டையான hazelnut பற்களுக்கு இன்பம். கொஞ்சம் மென்மையான தன்மையும் கடினமான தன்மையும் பற்களுக்குக் கிடைக்கும். ஆகையால், இதைச் சாப்பிடுபவர்களின் சென்ஸரி நியூரோன்களுக்கு மோட்சம்தான்.
உண்மையில், இதன் வெளியில் சுற்றியிருக்கும்(wafer) லேயரை உருண்டை வடிவில் வளைத்தெடுக்கவே அப்போது ஐந்து வருடங்களாகி இருக்கிறது. அதற்குரிய தொழிநுட்பம் கண்டுபிடிக்க அத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. அதற்குப் பிறகுதான் மார்கெட்டுக்கு வந்தது. அத்தனை சிரமப்பட்டு அதை உருவாக்கக் காரணம் இருக்கிறது. இந்த ஐந்தடுக்கு நட்சத்திர விடுதிகள் எங்கும், food garnishing(உணவு வடிவமைப்பு) செய்திருப்பார்கள். வீட்டிலேயே வாசத்துக்கு இலைகள் போடுவோம். உணவு நம் அடிப்படைத் தேவையென்று எதையோ சமைத்தோம் சாப்பிட்டோம் என்றில்லை. அவற்றை மேலும் மேலும் அழகாக்குகிறோம். இரசனைக்குரியதாக்குகிறோம். அந்த இரசனை நமக்கு உணவின் சுவையைக் கூட்டுகிறது. உணவு உண்மையில் கண்களை முதலில் தாக்குகிறது. இதை அறிந்துதான் இத்தனை ஜோடிப்புகள். அழகை உண்கிறோம். கேஎப்ஸி சிக்கன் மீதிருக்கும் கிரிஸ்பிபோல, ferero roucher கிரிஸ்பி பிடிக்கிறது.
உண்ண முதலே, டார்க் சாக்லேட் (Dark fantasy) நிறமும் மில்க் சாக்லேட் நிறமும் பார்வையின்மூலம் வேறுவேறு உணர்வுநிலைகளைத் தூண்டக்கூடியது. சாக்லேட், காமத்தின்போது தூண்டப்படும் உணர்வுநிலைகளைத் (சென்ஸரி நியூரான்கள்) செயற்படுத்தக்கூடியது. குறிப்பாகக் காதலர்தினத்துக்கு சாக்லேட் விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவது உண்டு. அவை, நமக்குத் தெரியாமலேயே நம்முடைய காமத்துக்கான இன்பத்தை தரக்கூடியது.
காமத்தைக் காதல் கொண்டு ஜோடித்தோம். அந்தக் காதலையும் காமத்தையும், கவிதைகள், கலைகள் கொண்டு ஜோடிக்கிறோம். உணர்வுகளின் பரிணாமம் அழகான அடுக்குகளைத் தருகிறது. அதன் மூலம் இரசித்து இரசித்து அந்த உணர்வுகளுக்கு மேலும் மேலும் சுவை கூட்டுகிறோம். காமத்தையும் உணவுகளையும் இன்னும் சுவைத்து உண்கிறோம். ஜோடிப்புகள், லேயர்கள் எல்லாம் வைத்து வைத்து, இரசனைகளால் உலகை மேலும் மேலும் அழகாக்கிச் சுவைக்கிறோம்.
Comments