ஜூலை மாதம் என்றாலே சட்டென்று இரண்டு பாடல்கள் நினைவைத் தட்டும். ஒன்று, ரஹ்மானின் இசையில் அனுபாமா பாடிய "ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு" என்கிற பாடல். இன்னொன்று, "ஜூலை மலர்களே... ஜூலை மலர்களே...உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்" என்கிற பா.விஜயின் வரிகள்.
கொன்றைப் பூக்கள் ஜூலை மாதத்தில் பூக்கும். மரம் முழுவதும் நிறைந்திருக்கும். அதனால் "ஜூலை மலர்கள்" என்கிறார் பா.விஜய். கொன்றைப் பூக்களைத் தான் "ஜூலை மலர்கள்" என்றிருக்கவேண்டும். கொன்றைப் பூக்கள் அவ்வளவு அழகு. ஆனால் சிங்கள மொழியில் இதனை "Esala Mal" என்று அழைப்பார்கள். அதாவது ஜூலை மலர் என்று அர்த்தம்.
"கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்"
சங்ககாலத்தில் கொன்றைப் பூவின் நிறத்தை பெண்களின் மேனி நிறத்துக்கு ஒப்பிடுவார்கள். சிவனுக்குப் பிடித்தமான பூ என்பதால் சிவனைக் 'கொன்றை வேந்தன்' என்றும் அழைப்பதுண்டு.
வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.
| |
இந்தக் குறுந்தொகைப் பாடல் கொன்றையைப் பற்றிப் பேசுகிறது. கொன்றையைப் பெண்களுக்கு ஒப்பிட்டிருக்கிறார் ஒதலாந்தையார் . இதன் பொருள் மிகவும் அழகானது. என்னோட அவர் பொய் சொல்லமாட்டார். கார் காலத்துக்கு முதல் வருவேன்னு சொன்னார். இந்தக் கொன்றையைப் பார்க்கப் பெண் மாதிரி தோன்றினாலும் அது பெண்ணல்ல என்று தெளிவதுபோல , இந்த கொன்றைப் பூக்கள் கார்காலத்தை சொன்னாலும் அதை நான் நம்பமாட்டேன். ஏனென்றால் என்னோடை அவர் பொய் சொல்லமாட்டார். கார்காலம் என்றால் இந்நேரம் வந்திருப்பார். அதைத்தான் கொஞ்சம் கவிதாயாக்கி " ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே " என்றார் வைரமுத்து. |
Comments