Skip to main content

வன்முறைகளின் உளவியல் 2 Cognitive behavioural therapy - சிறுபேச்சு 3


குழந்தைகளின் உளவியல் வளர்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்களின் பங்கு பெரியது. அவற்றைப் பற்றிப் பேசுகிற புத்தகம்தான் "The Young Mind". குழந்தைகள் தங்கள் வளர்ச்சியில் எதிர்கொள்கிற பிரச்சனைகளை ஆராய்வதோடு அதற்குரிய சரியான உளவியல் வழிகாட்டல்களை எப்படி அணுகுவது என ஒரு கட்டமைப்பை நிறுவியிருக்கிறது.



பாடசாலையில்  தனது நண்பி தன்னைப் பார்த்து சிரிக்கவில்லையென்று ஒரு மாணவி வருத்தப்படுகிறாள் என்று வைப்போம். இதை வைத்து தனது நண்பிக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்று அந்தக் குழந்தை எண்ணிக்கொள்ளும். அதுமட்டுமல்லாமல், தான் அழகில்லாமலும், போரிங் டைப்பாகவும் இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொள்ளும். யாருக்குமே தன்னைப் பிடிக்கவில்லை என்று தன்னம்பிக்கையின்றி அழுத்தத்துடன் இருக்கும். சிலர் தங்களைத்  தனிமைப்படுத்திக்கொள்வார்கள். சிலவேளைகளில் பாடசாலைக்குப் போவதையே நிறுத்திவிடும். இந்தமாதிரியான எதிர்மறை எண்ணங்கள் எதிர்காலத்தை எப்படியெல்லாமோ மாற்றக்கூடும். அடுத்தவர்கள் மீதும் பாதிப்பை ஏற்படுத்தகூடியவர்களாக மாற்றும். ஒரு சிறிய விடயம் எவ்வளவு தூரம் வளரக்கூடும் என்பதற்கு இதுவொரு உதாரணம்.

சில குழந்தைகளுக்கு நாய்களைக் கண்டால் அதீத பயமிருக்கும். உதாரணமாக இரவுகளில் அவை தொலைவில் குலைத்தாலும் இவர்களுக்கு பயம்  வந்துவிடும். உளவியல்ல இதை  "Cynophobia" என்று சொல்லுவார்கள். இதற்குக்கூட மேற்குலக நாடுகளில் உளவள ஆலோசனை உண்டு.  CBT (cognitive behavioural therapy) என்று சொல்லுவார்கள்.  அதாவது பேச்சின் மூலம் ஒருவரின் ஆதார எண்ணங்களையும் பிரச்சனைகளையும்  மாற்றுவார்கள். அங்கு சைனோபோபியாவைக்கூட சீரியஸ் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு தீர்க்க முற்படுகிறார்கள். ஆனால் இங்கு சிறுவர் துஷ்பிரயோகம் முதற்கொண்டு, தீவிர உளவியல் வன்முறைக்கு உள்ளாகும் குழந்தைகளை கவனிக்க மறுக்கிறார்கள். இப்படியானவர்கள்தான் போதைப்பொருள் பாவனை, வன்முறை மாதிரியான விஷயங்களைக் கையில் எடுக்கிறார்கள் என்கிறது மேற்குலகின் ஸ்டடிஸ்டிக்ஸ். 

சமூகத்தில் நிலவும் வன்முறைகளுக்கான தீர்வு என்று பேசும்போது எல்லோரும் எப்போதுமே சட்டத்தையும் கட்டுப்பாடுகளையும்தான் பேசுகிறார்கள். எந்தவொரு பிரச்சனை என்றாலும் அது அங்கேயே ஆரம்பித்து அங்கேயே முடிகிறது என்பதுதான் பெரும்பாலோனோரின் அடிப்படைச் சிந்தனை. அதிலிருந்து அறிவுரைகளைச் சொல்லுகிறார்கள். 

முதலில் ஒருவர் அடுத்தவர் மீது பிரயோகிக்கும் உளவியல் வன்முறைகளை  நிறுத்தவேண்டும். உளவியல் வன்முறைக்கு பெண்ணியமும் ஆணாதிக்கமும் தெரியாது. அதனை முழுதாக நிறுத்தமுடியாவிட்டாலும்,   சரியான உளவள ஆலோசனைகள் வழங்கும் கட்டமைப்பு நிறுவப்படவேண்டும். பாடசாலைகளில் இருந்து வீடுவரைக்கும் அந்த உளவியல் அறிவுரை வழங்கும் கட்டமைப்பு விரிவாக்கப்படவேண்டும். 

Comments

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...