அவ்வப்போது ஆனந்தத்தாண்டவம் படத்தைப் பார்த்து யாராவது சமூக இணையத்தளங்களில் சிலாகித்துக்கொள்வார்கள். அப்போதெல்லாம் எனக்கு சுஜாதா எழுதிய 'பிரிவோம் சந்திப்போம்' நாவல்தான் நினைவுக்கு வரும்.
என்னைப்பொறுத்தவரை அந்தத் திரைப்படம் நாவலைப் பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்வேன். உண்மையிலேயே தமிழ்த் திரைப்பட உலகில் நாவல்களைத் திருப்தி செய்த படமென்று ஒருசிலவற்றைத் தான் குறிப்பிடலாம். அதற்குக் காரணம், நாவலில் இருந்த ஆழமான தன்மை திரைபப்டங்கள்ல இருக்காது.
'இங்கு எல்லாமே மிகைப்படுத்தல்கள் தான்' என நாவலில் ஒரு வசனம் வரும். அது எவ்வளவு பெரிய உண்மை என்பது நான் சந்தித்த, எதிர்கொள்கிற மனிதர்களைப் பார்த்துப் புரிந்துகொண்டேன். மிகைப்படுத்தல்களை கண்மூடித்தனமாக நம்புகிற சமூகமாக மாறி வருகிறது.
இவர்களாகவே காதலுக்கென்று ஒரு தியரி அமைத்துக்கொண்டு, எதிர்கால உலகினை இப்படித்தான் அமைத்துகொள்வார்கள், வாழ்வார்கள் என சுஜாதா எண்பதுகளிலேயே எழுதிய நாவல் இது.
"ரகுபதி ஒரு இஞ்ச் உயரத்தில் மிதந்து சென்று வீட்டுக்கு வந்தான். மதுமிதாவைத் திறந்து மதுமிதாவை முகத்தில் இறைத்துக்கொண்டு, மதுமிதா போட்டுக்கழுவிக்கொண்டு , மதுமிதாவால் துடைத்துக்கொண்டு, மதுமிதாவைத் திறந்து மதுமிதாவை படித்தான்." - சுஜாதா
இந்த உணர்வை, கவித்துவத்தையெல்லாம் எப்படி சினிமாவில் காட்டிவிடமுடியும்.

Comments