'அமுதம் உண்க நம் அயலிலாட்டி' என்றொரு நற்றிணைப் பாடல்(கபிலர்) உண்டு.அதாவது பக்கத்து வீட்டுப் பெண்(அயல் + இல் + ஆட்டி) அமுதம் உண்ணட்டும் என்கிறாள் தலைவி.
யாராவது நல்ல விஷயம் சொன்னால், 'வாய்க்குச் சக்கரை போடணும்' என்று இப்போது சொல்ற மாதிரி. தலைவி இவ்வளவு சந்தோஷப்படுகிற அளவுக்கு அப்பிடி என்னத்தைச் சொல்லிப்புட்டா பக்கத்து வீட்டுப் பெண்?
தலைவன் வருவானா என்று காத்திருக்கிறாள் தலைவி. தலைவன் வந்திடுவான் கவலைப்படாதே என்று தோழி தேற்றுகிறாள். உடனே தலைவியை மேலும் தேற்ற ஒரு செய்தியையும் சொல்கிறாள்.
"பக்கத்து வீட்டுப் பெண் வேறோருத்தியோடு ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது, ஏதோ எழுந்தமானமாக, 'அவன் இப்போதே வந்துவிடுவான்' என்று கூறினாள். எனக்கென்னவோ அது நல்ல சகுனமாக/செய்தியாகப்படுகிறது" என்றாள்.
ஒரு நல்ல சொல்லைக் கேட்டல், நல்ல சகுனம் என நினைத்தார்கள் பண்டைத் தமிழர்கள்.அதுதான் 'விரிச்சி கேட்டல்' எனப்படுகிறது. ஏதாவது நல்ல வேலையா போகும்போது எங்கிருந்தோ வரும் நல்ல சொல் கேட்டல். உதாரணமாக, மணி அடித்தால் நல்ல சகுனம் என்பது மாதிரி.
தலைவனுக்காக காத்துக்கொண்டிருக்கும் தலைவியிடம் வந்து தோழி இதைச் சொன்னவுடன், தலைவிக்கு மகிழ்ச்சி. அதனால் அந்த வாரத்தையைச் சொன்ன அந்தப் பெண் அமுதம் உண்ணட்டும் என்கிறாள்.

Comments