'அவள் வருவாளா' என்கிற பாடல் 98 களில் மிகவும் பிரபலம். அந்தப் பாடலை இப்போதுகூட சத்தம் எழுப்பாமல் மனதுக்குள் பாடிப் பார்க்காதவர்கள் கிடையாது. தேவா இசையமைப்பில் ஷாகுல் ஹமீதும் ஹரிகரனும் பாடிய பாடல்.
அதில் ' ஏய் கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணிலிருக்கு, அந்தப் பெண்ணிலிருக்கு' ங்கிற வரியை மட்டும் ஷாகுல் ஹமீது பாடுவார். ஹரிகரன் குரல் இருக்கும் போதே அந்தக் குரல் தனித்துத்தெரியும். "வீ மிஸ் யூ ஷாகுல் ஹமீத்" என்று சொல்லத் தோன்றுகிறது.
புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில இருக்கிற குறளை பயன்படுத்தியிருக்கார் வைரமுத்து. அந்தக் குறளை வேகமாகப் பாடுமளவு, துல்லியமான குரல் வளம் உடையவர் ஷாகுல் ஹமீத்.
சரி காமத்துப்பாலில் வருகிற அந்த வரியில் அப்படி என்ன சிறப்பு.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
கண்களால் பார்த்து, செவியால் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம், ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு. (நன்றி : பேராசிரியர் சாலமன் பாப்பையா உரை )
கவிஞ்ஞர் வாலியும் ஒரு குறளை பயன்படுத்தி இருக்கிறார்.
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன். (சாலமன் பாப்பையா உரை)
தீன படத்தில் இடம்பெற்ற 'காதல் வெப்சைட் ஒன்றில்' பாடலில்
"Hot box-ல் வைத்த food உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும்.
என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உன்னை உஷ்ணம் தாக்கக்கூடும்."
என்று எழுதியிருப்பார் கவிஞர் வாலி. :)
Comments