"கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. " - நெடுவெண்ணிலவினார்.
கரிய அடியையுடைய வேங்கை மரத்துடைய மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல் நிலவொளியில் ,பெரிய புலிக்குட்டி போலக் காணப்படுமாம். அதைப் புலின்னு நினைச்சு தன் தலைவன் அஞ்சுவான் என எண்ணுகிறாள். இது இரவில் திருட்டுத்தனமாக வரும் தன் தலைவனுக்கு நன்மை தருவதாய் இல்லை என்கிறாள்.
எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள்! அவ்வளவு காதல் :)
ஆனால் இங்கு 'நெடு வெண்ணிலாவே' என்று கூறுகிறாள். இயல்பாகவே தனக்குரிய பொழுதில் தான் நிலவு எறிக்கும் .பின் ஏன் நெடு வெண்ணிலாவே என்கிறாள்?
தன் தலைவனின் களவொழுக்கத்திற்கு இடையூறாக இருக்கும் வெண்ணிலவை அவள் விரும்பவில்லை. அது விரைவில் மறைய வேண்டுமென விரும்பினாள். அதனால் அதை நெடு வெண்ணிலா என கூறுகிறாள். இந்தச் சிறப்பால் இந்தச் செய்யுளை இயற்றியர் 'நெடுவெண்ணிலவினார்' எனப் பெயர் பெற்றார்.
உவமைகளைக் கையாண்டிருக்கும் விதம் பிரம்மிப்பாகவும், இனிமையாகவும் இருக்கிறது. கரிய பாறையையும்,உதிர்ந்த வேங்கை மலர்களையும் இணைத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.
'வீ ' என்றால் நன்றாக மலர்ந்து வீழ்ந்த /வீழுகின்ற மலர் என்று பொருள். பூவின் ஆறு பருவங்கள் : முகை , அரும்பு ,மொட்டு ,மலர் ,பூ மற்றும் வீ .
Comments