Skip to main content

'தமிழன் விருதுகள்'

புதிய தலைமுறை தொலைகாட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை, தமிழில் இப்படியொரு ஊடகம் வராதா என்ற ஏக்கத்தை  படிப்படியாக குறைத்துக்கொண்டே வருகிறது. என் எதிர்பார்ப்புகளை மீறி முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு பஞ்சமில்லை. அதை ஆரோக்கியமாக முன்வைப்பவர்களுக்குத் தான் தட்டுப்பாடு. தமிழ் ஊடகங்களில் 'புதிய தலைமுறை' ,தன் பெயருக்கு ஏற்றபடி பல படிகள் முன்னோக்கித் தான் இருக்கிறது. சக தமிழர்களைத் தூக்கிவிடும் ஊடகமாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது. ஒரு தமிழ் ஊடகம் தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் தரத்தோடு ஒத்துப்போகாமல், அந்தச் சமூகத்தையும் சேர்த்து அரவணைத்துக்கொண்டு  செல்கிறது என்பது ஆரோக்கியமான விடயம் அல்லவா.


இன்று சித்திரைத் திருநாளை முன்னிட்டு புதிய தலைமுறையில் ஒளிபரப்பான 'தமிழன்  விருதுகள்' நிகழ்ச்சியை  பார்க்கக் கிடைத்தது.  இலக்கியம் ,கலை ,அறிவியல் என்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்களுக்கு, தமிழன் விருதுகளை வழங்கி கௌரவித்தது புதியதலைமுறை. ஓர் ஊடகம் கேளிக்கை  நிகழ்ச்சிகளை தவிர்த்து ,சமூகத்துக்கு பயன்தரக் கூடிய விடயங்களை முன்னின்று நடத்தி வெற்றி பெறுவதென்பது ஒரு சாதனை தான். இந்தக் கருத்தைத் தான்  இந்து நாளிதழின் ஆசிரியர் ராம் கூட விருது வழங்கும் நிகழ்வில் முன்வைத்திருந்தார். அதுவும் ஒரு தமிழ் ஊடகமாக இருந்து,சமூகத்துக்கு  பயனுள்ள  விடயத்துக்கு  தமிழ் மக்களிடம் வரவேற்புப் பெறுவது என்பது ஒரு அசாத்தியத் திறன் தான். 

தொழில்நுட்பம், விளையாட்டு ,வணிகம் ,அறிவியல் , சமூக சேவை என அனைத்து துறைகளிலும் முன்னோடியாகத் திகழும் சாதனைத் தமிழர்களைத்  தேர்வு செய்ததோடு, அந்தந்தப் பிரிவில் நம்பிக்கை அளிக்கக்கூடிய இளம் சாதனையாளர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது. 


அறிவியலில் சாதனை படைத்த தமிழர் சிவதாணு பிள்ளை , நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகப்  போராடும் கிருஷ்ணம்மாள் போன்றவர்களுக்கு விருது கிடைத்ததே அந்த விருதுக்குப் பெருமை.  

தரமானவர்களுக்கு , சமூகத்துக்குக்காக உழைப்பவர்களுக்கு  விருதுகளை  வழங்கி ,சமூகத்துக்கு அவர்களை அடையாளம் காட்டும் புதிய தலைமுறையின் இந்த முயற்சி இனி வரும் வருடங்களில் தமிழர்களிடம் ,குறிப்பாக இளைஞர்களிடம்  இன்னும் வரவேற்ப்பு பெற வேண்டும் . 

எந்தச் சமூகம் தன் சமூகத்துக்காக உழைக்கிறவர்களை மதிக்கிறதோ ,அந்தச் சமூகமே மேலும் மேலும் சாதனையாளர்களைப் பெறும். அறிவால்  ஒளியேற்றப் போகிறவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும்  திறன் ஊடகங்களுக்கு உண்டு.புதியதலைமுறை  உலகத் தமிழர்கள் எனும் பரந்த வீச்சுக்குள் சாதனையாளர்களை தேடி எடுக்கும் என நம்புகிறேன்.

Comments

Popular posts from this blog

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...

அடியே அடியே என்னை எங்க நீ கூட்டி போற!

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் அவை சார்ந்த சூழலிலும், கிஸ்தவப் பாடல்களும் இசையும் இசைக்கப்படுவதைச் சிலர் கேட்டிருப்பீர்கள். அப்படிப் இசைக்கப்படும் இசையை Gospel music எனலாம். Gospel என்றால் Good message. பைபிளிலிருந்து கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் கடவுளின் செய்திகள் என்று நினைத்துச் சொல்லப்படுகிற விடயங்களையும் எளிமையான இசையோடு இசைத்துப் பாடப்படுகிற பாடல்கள். வரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள். பெரும்பாலும் நம்பிக்கையை விதைக்கிற செய்திகளைத் தாங்கிவரும் இந்தப் பாடல்களை மனதில் நிறையத் துன்பத்தோடு சென்று பாடுகிறவர்களுக்கு தேவாலயத்தில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. இந்த இசை துன்பத்தை வாங்கி நம்பிக்கையைத் தருகிறது. பலரும் கடவுள்தான் நம்பிக்கை தந்ததாக நினைத்துக்கொள்வார்கள். பிரச்சாரகர் அழைப்பு விடுக்க மற்றவர்கள் பதிலுரைத்து ஆமோதிப்பார்கள். ஒரு chorus இல் பலரும் பதிலுரைப்பார்கள். இதுதான் இசையின் வார்த்தைகளின் பலம். குறிப்பிட்ட மதங்களிடையே இசை தோன்றினாலும், அவற்றைச் சார்ந்திருந்தாலும், அது அந்தந்த மனிதர்களின் சமூகத்தின் அகவுணர்ச்சி மற்றும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடே என்பதனை நாம் புரிந்துகொள்ள...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...