பாஷோ ஹைக்கூவின் கம்பர் என்று சுஜாதா சொல்லுவார். அனைத்து உணர்வுகளையும் தன் பக்கம் குவிக்கும் திறன் கொண்ட ஹைக்கூ கவிதைகள் அவருடையது. ஒரு வித அமைதியை தந்துவிட்டுப் போகும்.
பாஷோவின் புகழ்பெற்ற ஹைக்கூ கவிதைகள் இவை :
***
விருந்தினர் கூட
மறந்து விட்ட
மலையடி கிராமம்
***
பழைய கிணறு
தவளை குதிக்கையில்
தண்ணீரில் சப்தம்
***
நிசப்தம்
கற்களில் ஊறிவிட
பூச்சிகளின் சப்தம்
***
கோடைப் புல்வெளி
அந்த மாவீரர்களின்
கனவுப் பாதைகள்
***
இலையுதிர் காலத்தில் இந்தப்
பாதையில் யாரும் செல்வதில்லை
என்னைத் தவிர
ஒரு பொருளை மேலாகப் பார்த்தால் போதாது .கவித்துவத்துக்கு ஆழமாக அந்தப் பொருளின் உள்ளே நோக்க வேண்டும் . வருணனை மட்டும் ஒரு காட்சியின் உள் அர்த்தத்தை பிடிக்க முடியாது என்பது பாஷோவின் கூற்று.
அவற்றை அவரின் ஹைக்கூக்களிலேயே கவனிக்கலாம்.
எழுதும் போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது. எண்ணங்களை கலைய விடாமல் நேரடியாகச் சொல்" என்றார் .
எஸ் ராமகிரிஷ்ணன் அவர்களின் "கவிதை கேட்ட நரி " என்ற இந்தப் பகிர்வையும் படித்துப் பாருங்கள்.
Comments