கால பயணம் பற்றிய முன்னைய ஆக்கம் . காலபயணம் பற்றிய அடிப்படை இல்லாவிட்டால் வாசிக்கவும் - அழுத்துக
காலத்தில் பயணம் செய்வதில் உள்ள பிரச்சனை இறந்த காலத்துக்கு பயணம் செல்வது தான் . எதிர்காலத்தில் பயணம் செய்வதை இதுவரை யாரும் விமர்சிக்கவில்லை.
இந்த பிரச்னையை இலகுவாக விளக்குவதானால் ,உதாரணத்திற்கு நீங்கள் 200 வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டீர்கள் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் உங்கள் பிறப்புக்கு முன்னரான காலப்பகுதியில் இருக்கிறீர்கள் .
அதாவது ஒரு விளைவுக்கு (பிறப்பு ) முன்னரே நிகழ்வு (வாழ்தல் ) நடக்கிறது . இது மிகவும் முரண்பாடானது .
இதனை விளக்குவது தான் பிரபலமான கிராண்ட் பாதர் பரடொக்ஸ். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் இறந்த காலத்துக்கு சென்று விட்டீர்கள் .அந்த காலத்தில் நீங்கள் உங்கள் சொந்த தாத்தாவையே கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது . நீங்களும் ஒரு துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டீர்கள் .
ஆனால் நீங்கள் உண்மையிலேயே பிறக்கவில்லை . உங்கள் தாத்தா உயிரோடு இருந்தால் தானே உங்கள் தந்தை பிறப்பார் .தந்தை இருந்தால் தானே நீங்கள். ஆகாவே இந்த தொடர்பு வட்டம் துண்டிக்கப்படுகிறது(inconsistent causal loop ) . ஆகவே இது இறந்த காலத்திற்கு செல்வதில் பிரச்சனையான விடயமாக கொள்ளப்பட்டது .
=======================================================================
Comments