அண்மையில் வெளியான மங்காத்தா பாடல்களில் மென்மையான பாடல்கள் இரண்டு ரசிக்க கூடியதாக இருந்தது . ஒன்று என் நண்பனே ,மற்றொன்று கண்ணாடி நீ கண் ஜாடை நான் . "என் நண்பனே" பாடலின் வரிகளுக்கு கவிஞர் வாலி பலம் ,பாடலுக்கு யுவனின் குரல் பலம் .
கண்ணாடி நீ கண் ஜாடை நான் பாடலுக்கு நிரஞ்சன் பாரதியின் வரிகளில் சரணின் குரலும் ,பவதாரனியின் குரலும் சிறந்த மெல்லிசை பாடலை தந்திருக்கிறது .பாடலை கேட்க்க
கண்ணாடி நீ கண் ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்
என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்
நான் தான் நீ என்பதை சற்று வித்தியாசமாக வரிகளில் காதல் கலந்து இருக்கும் வரிகள் இவை . இதனை எழுதியவர் கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்கள். இவர் வேறு யாரும் அல்ல மகாகவி பாரதியாரின் இரத்தவழி உறவு . மகாகவியின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் . இந்த தலைமுறைக்கு ஏற்ற படி காதல் கலந்து கொடுத்திருக்கும் வரிகள் இவை .அவரின் எதிர்கால தமிழ் வரிகளின் பயணம் சிறப்புற வாழ்த்துகள் .
நான் தான் நீ என்பதை சற்று வித்தியாசமாக வரிகளில் காதல் கலந்து இருக்கும் வரிகள் இவை . இதனை எழுதியவர் கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்கள். இவர் வேறு யாரும் அல்ல மகாகவி பாரதியாரின் இரத்தவழி உறவு . மகாகவியின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் . இந்த தலைமுறைக்கு ஏற்ற படி காதல் கலந்து கொடுத்திருக்கும் வரிகள் இவை .அவரின் எதிர்கால தமிழ் வரிகளின் பயணம் சிறப்புற வாழ்த்துகள் .
ஆனாலும் இந்த பாடலை கேட்க்கும் போது மகாகவியின் அருமையான தமிழ் வரிகளை நினைவுபடுத்தின . ஆனால் அவரின் வரிகளில் காதலுடன் தெய்வீகமும் இருந்தது . அதனையும் இங்கே பகிர்கிறேன் . தமிழ் சுவையும் கூடவே கலந்திருக்கும் . கவிராஜன் பாரதியின் வரிக்கு இசைராஜா இளையராஜா கொடுத்த இசை இது . பாடல் கேட்க்க
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வைரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!
வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!
வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!
வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!
காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!
நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!
தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!
வாலியின் வரிகளில் எப்போதும் தமிழ் சொற்கள் விளையாடும் . என் நண்பனே பாடலில் வந்த வளைக்கையை பிடித்து வளைக்கையில் விழுந்தேன் வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன் . வரிகள் காதலெனும் தேர்வெழுதியில் நான் ரசித்த இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா வரிகளை நினைவுபடுத்தியது.
Comments
ஒற்றை வரியில் எத்தனை ஆழம் சுதா... ரொம்ப நல்ல ரசனை...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).
But i don't feel much in mangatha song as like Bharthi's.