ஒரு முறை சுஜாதா அவர்களிடம் ஒருவர் 7 ஆவது அறிவு என்னவாக இருக்கும் என கேட்டதற்கு தொழிநுட்பத்தை .ஊடகங்கங்களை பயன்படுத்தி செய்யப்படுவது என கூறினார் . உதாரணமாக மனிதன் உருவாக்கிய கணணி மனிதனை விட வேகமாக வேலைகள் செய்யும் . அதே போல இயற்கை ஊடகங்களை(சக்திகளை ) பயன்படுத்தும் திறன் சித்தர்களுக்கு இருந்திருக்கிறது .அதானால் தான் இந்த பெயராக இருக்க வேண்டும் .
7 ஆம் அறிவு திரைப்படம் பற்றி விமர்சனமாக இந்த பதிவை வைக்க போவதில்லை . சில விமர்சகர்கள் என்போரின் விமர்சனங்களுக்காக எழுதும் பதிவு .
அதற்கு முதல் இப்போது இருக்கும் தமிழ் மேதைகள் கூட்டம் பற்றி ஒரு வித அறிமுகம் கொடுக்கிறேன் .
இந்த மேதைகள் கூட்டத்தால் எந்த பயனும் இதுவரை காலமும் தமிழுக்கு, சைவத்துக்கு இருந்ததில்லை . எழுத்துலக பிரம்மாக்கள் என்பவர்கள் இலக்கிய சொட்ட சிறு கதையையும் ,கவிதைகளையும் இணையம் முழுக்க கொட்டி வைத்திருக்கிறார்கள் . கவிதைகளுக்கு ,கதைகளுக்கும்,முக்கியமாக சினிமாவுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை . ஒரு விஞ்ஞானம் பற்றிய விடயமோ ,அது பற்றிய ஆராய்ச்சிகளோ இணையத்தில் இல்லை .தமிழை,தமிழின் தொன்மைகளை விஞ்ஞான பார்வையில் தேடினால் ஒன்றையும் காணக்கிடைக்காது .ஒரு சில பிளாக்கர்களின்(எண்ணலாம்) ஆக்கங்கள் தவிர .
இந்த நேரத்தில் போதிதர்மன் எனும் கதாப்பாத்திரம் 7 ஆம் அறிவில் இருக்கிறது என கேள்விப்பட்டேன் . இணையத்தில் தேடிய போது ஆங்கிலத்தில் பல விடயங்கள் கொட்டிக்கிடந்தது . தமிழில் ஏழாம் அறிவோடு சேர்ந்த செய்திகளாகவே போதிதர்மன் பற்றி தமிழில் காணக்கிடைத்தது .
யாராவது ஒருவர் தமிழின் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்தால் அதை பற்றி ஒருவர் கூட வாய் திறந்து பேசுவதில்லை . செம்மால் மானவை எனும் பேராசியர் திருக்குறளில் 140 குறள்களில் இருக்கும் நவீன மருத்துவம் பற்றிய தகவல்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள் . இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை வைத்துக்கொண்டு இத்தனை காலம் எப்படி இருக்கிறீர்கள் என்பது அவரின் கேள்வி??? .இது எத்தனை பேருக்கு தெரியும் .எத்தனையோ பேர் மருத்துவம் படிப்பீர்கள் .யார் தேடியிருக்கிறீர்கள் ! எத்தனை எஞ்சினியர்களுக்கு தஞ்சை பெரும் கோவிலின் கட்டடக்கலை தெரியும் ! எத்தனை பேர் நீங்கள் படிக்கும் துறையில் தமிழை நவீன மயப்படுத்த தயாராக இருக்கிறீர்கள் . இத்தனைக்கும் தகுதி இருந்தால் 7ஆம் அறிவை .முருகதாஸை நீங்கள் தவறாக விமர்சிக்க முடியும் .
வைரமுத்துவிடம் ஒரு பெரிய நடிகர் தமிழ் வருவது போல பாடலில் வரி எழுதி தாருங்கள் ,தாய் குலத்தோடு ஒரு சீன்,உழைக்கும் வர்க்கத்தோடு ஒரு சீன் என கேட்டு வாங்குகிறார்கள் ஒரு உழைப்பும் ஒரு விடயமும் இல்லாமல் . இது எதை, பாச உணர்வை தூண்டி ?யாரை முட்டாளாக்கி பணம் சம்பாதிக்கும் வழி ? இந்த நடிகரின் எல்லா பாடல்களிலும் தமிழ் வருவதை கவனிக்கலாம் . இது ஒரு விடயத்தை சொல்லி,வரலாற்றை சொல்லி தானே தமிழ் தமிழ் என்கிறார்கள் .அதை விட இது எவளவோ மேல்.
தமிழ் உணர்வை தூண்டி விட்டு பணம் சம்பாதிக்க முடியும் என்றால் அதில் எனக்கு பெருமையாக இருக்கிறது .தமிழ் உழைப்பது பெருமை தானே ! அவர் பணம் பண்ணுவது ,கருணாநிதி குடும்பம் பணம் பண்ணுவது ,சூர்யா விஜய் சண்டை ,வரலாறு தவறு ,முருகதாஸ் தவறு என்பதை விட்டு சொன்ன கருத்து புரிந்து கொண்டீர்களா முதல் ? அதற்காக செயற்படுவீர்களா ? .ஒருவருமே செய்யாத போது ஒருவன் செய்ததை மட்டம் தட்டி ,அன்றோடு மறந்து விடுவீர்கள் தானே .
போகி என்ற பெயரில் எங்கள் முக்கிய குறிப்புகளை அழித்தார்கள் என்பது முற்றிலும் உண்மை . எம் முன்னோர்களை சூரன் என்று ,நரகாசூரன் அளித்த நாளை எம்மையே கொண்டாட வைத்துள்ளார்கள் புத்திசாலி ஆரியர்கள் .இன்றும் பிராமணனுக்கு அடிமையாகி பணத்தை சும்மா இறைக்கிறோம் தானே ? தமிழனுக்கு எந்த மதமும் இருந்திருக்கவில்லை ,அவன் கண்டுபிடித்த விடயங்களை ,பொக்கிஷங்களை படையெடுப்புகள் மூலம் பின்னர் எம்மை ஆண்டவர்கள் அழித்தார்கள் என்பது உண்மை . சித்தர்கள் புத்தகங்களில் நவீன விஞ்ஞானம் இருப்பது போன்ற விடயங்கள் எமக்கு தெரியும் .ஆனால் சிலபஸ் படி படித்தோம் ,வேலை கிடைத்தது .பணம் பணம் என்று ஓடினோம் என்று போய்க்கொண்டே இருப்போம் . ஏன் இன்னும் அறிவியலுக்கு ஒவ்வாத சித்திரையை புதுவருடமாக நாம் கொண்டாடவில்லையா ??
இதுவரை தமிழ் சினிமா காட்டாத பக்கத்தை தைரியமாக தமிழை நம்பி எடுத்திருக்கிறார் முருகதாஸ் . முதல் நிமிடங்களில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை காட்டும் போதே ஒரு வித திமிர் தொற்றிக்கொள்கிறது. சூர்யாவின் மிடுக்கான தோற்றம் ஒரு வீரனை முன்னிறுத்தியது . போதி தர்மன் பற்றிய முதல் 15 நிமிடங்களுக்கு மிகவும் உழைத்திருக்கிறார்கள் . இதே காட்சி சீனப்படத்தில் வந்திருந்தால் சங் சாங் என்று பேசியிருந்தாலும் பார்த்துவிட்டு இப்படி எல்லாம் தமிழ்ல எடுக்க மாட்டாங்களே என்று திட்டு வேறு . அதே தமிழில் எடுத்தால் ?
படத்தில் வரும் நோக்கு வர்மம் என்பது சித்தர்கள் பற்றி வாசித்தவர்களுக்கு தெரியும் . நோக்கு வர்மம் மட்டும் அல்ல .சித்தர்கள் பல கலைகள் பலருக்கு தெரியாது என்பது நம் துரதிஷ்டம் . ஒன்றுமே தெரியாதவிடத்து இப்படியொன்று இருக்கிறது,தமிழனின் பொக்கிஷங்களில் விஞ்ஞானம் இருக்கிறது என்று நினைவு படுத்தியது முருகதாசின் குற்றமாக இருக்கலாம் .
எம் முன்னோர்களை வணங்காமல் அவர்களை விஞ்ஞானிகளாக பாருங்கள் என்று ஒரு செய்தி வருகிறது . இது எத்தனை பேருக்கு புரிந்திருக்குமோ தெரியவில்லை .
எம் முன்னோர்களை வணங்காமல் அவர்களை விஞ்ஞானிகளாக பாருங்கள் என்று ஒரு செய்தி வருகிறது . இது எத்தனை பேருக்கு புரிந்திருக்குமோ தெரியவில்லை .
இந்த திரைப்படத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஒரே பதில் சொல்லலாம் . "நம்மை இங்கு நாமே தொலைத்தோம் " . நிச்சயம் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் . பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விடாதீர்கள் .
Comments
அன்பரே.....
ஆனா ஆரியர் கிட்ட நாம இன்னும் அடிமையா இருக்கிறோம் அப்படின்றது முழுக்க உண்மை கிடையாது, வேணும்னா சில சுய நல அரசியல் வாதிங்க கிட்ட இருக்கம்னு சொல்லுங்க ஒத்துக்கலாம்.
http://gragavanblog.wordpress.com/2011/10/27/%e0%ae%8f%e0%ae%b4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%9c-%e0%ae%86%e0%ae%a4/
அருமையான பகிர்வு!