Skip to main content

மரணத்தின் பின்னரான வாழ்க்கை - கனவு -கடவுள் - மர்மம்

மனிதன் எந்த மர்மத்தை கண்டு பிடித்தாலும் இறந்த பின்னரான மர்மத்தை தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறான் . புரியாத பல புதிர்களையும்  கேள்விகளையும் , குழப்பங்களையும் சுமந்து நிற்கிறது . இந்த குழப்பங்களில் வாழ்கிறது கடவுள் நம்பிக்கை. விஞ்ஞானத்தால் எட்ட முடியாத இடம் அது , இருந்தாலும் அதனை அணுகும் முறையில் முன்னேறுகிறது மனோதத்துவமும் விஞ்ஞானமும்  . 

மரணத்தை தொட்டுவிட்டு வந்தவர்கள் சிலர் இன்னமும் உயிர் வாழ்கிறார்கள் அதில் பலர் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் . தமது கண்கள் மூடும் முன்னர் தமது வாழ்வு , தமது சூழல் அனைத்தும்   ஒளியால் நிரம்பி இருந்தது எனவும்  ஒரு வித அமைதி நிலை காணப்பட்டது எனவும் கூறியுள்ளனர் உயிர் பிழைத்து வந்தவர்கள். அமானுஷ்ய விடயங்கள் பல மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது நடைபெறும் .


மரணத்திற்கு அருகாமையில் சென்று வருவது என்றால் என்ன ? அது  என்ன அமானுஷ்யமா ? ஏதாவது சக்தியா ? அல்லது மூளையின் திடீர் மாற்றங்களா ? என பல கேள்விகள் எழுந்தாலும் விஞ்ஞானம், சமய நம்பிக்கை , அறிவியல் எனும் பார்வையில்  கொஞ்சம் பார்க்கலாம் என எண்ணுகிறேன் .

மரணத்திற்கு பின்னரான வாழ்க்கை பற்றி கிறிஸ்துவுக்கு  முன் வாழ்ந்த பிளாடோ என்பவர் தனது குறிப்பில் Er என்ற போர் வீரன் இறந்த போது தனது உயிர் (நாம் கூறுவது இவ்வாறே ) செல்வதை உணர்ந்து கூறியதை குறித்திருக்கிறார் . இது உண்மையா என பலரிடம் கேள்வி எழுந்தாலும் கூடுதலானோருக்கு அதே போன்ற ஒரே உணர்வு ஏற்பட்டிருக்கிறது  .

மரணத்தை அண்மிப்பவர்களின் உணர்வு

அமைதியான உணர்வு 

பதற்றமில்லாது அமைதியாக செயல்ப்படுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் . அவர்களால் மட்டும் தாம் இறக்கப்போவது பற்றி தெரிந்திருக்கும் ஆனால் அதை எப்படி விளங்கப்படுத்துவது  வெளிப்படுத்துவது  என அவர்களுக்கு தெரிந்திருக்காது . மரணத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இருப்பதை அது காட்டுகிறது. 

மிகவும் கூடுதலான வெளிச்சம் 

ஒரு வித ஒளி வந்து அவர்கள் சுற்றுப்புறம் அனைத்தையும் சூழும் . அவர்களின் ஆள் மனது இறைவனை அல்லது சொர்க்கத்தை காண்பது போல உணர்வை தோற்றுவிக்கும். 

உடலுக்கு வெளியே அனுபவம் 

தான் உடலை விட்டு வெளியேறுவது போல உணர்வு தோன்றும் . கிட்டத்தட்ட மிதப்பது போல . தன்னால் தனது உடலை பார்க்க முடியும் . சிலர் தாம் டாக்டர்கள் தம் உடலுக்கு சிகிச்சை செய்வதை  பார்த்ததாக கூறியுள்ளனர். பின்னர் எங்கோ பறந்து போவது போல உணர்வு தோன்றுமாம் .

இன்னொரு பரிமாணம் நோக்கி  செல்லல்    

சில வேளை அவர்கள் அவர்கள் மனதில் பதிந்த மத நம்பிக்கைகள் படி அல்லது உலக அனுபவங்கள் என்பன அவர்களை  அந்த அந்த பரிமாணங்கள்  நோக்கி இட்டுச்செல்லும் . ஒரு வேளை சொர்க்கத்திற்கும் சில வேளை நரகத்திற்கும். ஒரு வேளை வித்தியாசமான உலகமாக  இருக்கலாமோ .

உயிரின் தொடர் பயணம் 

ஒரு குகை போன்ற அமைப்பினூடு வெளிச்சமான பகுதியை நோக்கி செல்வது போல உணர்ந்திருக்கின்றனர் சிலர் . குகையினூடு செல்லும் போது பல விதமான தேவதைகள் , கடவுள் போல அவர்கள் மனதில் சித்தரிந்திருந்த உருவங்களை கண்டுள்ளனர் .


சக்திகளுடனான உரையாடல் 

அதனூடு பயணிக்கும் போது சில உரையாடல்களை கேட்டுள்ளனர் . பெரிய ஆண் குரலில் இது உங்களுக்கான நேரமில்லைமீண்டும் திரும்பி செல்லுங்கள் என்றெல்லாம் கட்டளை வந்திருக்கிறது . அது இறைவன் குரல் என நம்புகின்றனர் .

வாழ்க்கை மீதான மீள் பார்வை 
சிலர் இறந்த பின்னர் தமது வாழ்க்கை மீண்டும் தொடக்கத்திற்கு செல்வது போல உணர்வர் . கிட்டத்தட்ட பிளாஷ் பக் போல ஒன்று ஓடும்.


இது சிலர்  கண்டு வந்தவை ஆனால் இன்னொருவர் தாம் இந்த உலகை விட்டே வெளியேறுவது போலவும் அந்த உணர்வு  மிகவும் மகிழ்ச்சியானது எனவும் கூறியிருந்தார் . அந்த ஒளிக்குள்ளே செல்ல வேண்டும் என்ற உணர்வு எம்மை தூண்டும் எனவும் அதனுள் சென்றவுடன் அது தன்னை இன்னொரு ஒளி இல்லாத நகரத்திற்கு அழைத்து சென்றது எனவும் அங்கு தன்னுடன் ஒலியுடன் ஒருவர் நின்றதாகவும் கூறியிருந்தார் . (from The vestuble by Jess E. Weiss )

இன்னொருவரின் கருத்துப்படி அது ஒரு சிறந்த அனுபவம் எனவும் தன்னை சுற்றி அனைத்தும்  வெள்ளையாக  இருந்ததாகவும் ஆனால் அதே நேரம் வெட்ட வெளியாக இருந்ததாகவும் கூறியிருந்தார். இவர் தற்கொலை முயற்சி செய்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் .
Tracy Lovell, after a drug overdose suicide attempt (in "The return from silence " by Scott D. Rogo)


இந்த பிரச்னையை விஞ்ஞான ரீதியாகவும் வேறு விதமாகவும் ஆராயலாம் . விஞ்ஞானத்தை தவிர்த்து பார்த்தால் உடலை விட்டு வெளியேறும் உயிர் எமது உலகத்துக்கும் மரணத்திற்கு பின்னரான இன்னொரு உலகத்துக்கும் இடையில் பயணிக்கிறது . இது மிக நீண்ட குகை போன்ற இடங்களினூடு பயணிக்கின்றது . சில வேளைகளில் ஒளியின் வேகத்தில் பயணிக்கலாம் .  

இது நேர இயந்திரத்துடன் அதாவது ஐன்ஸ்டினின் நேர பயணத்துடன் தொடர்பு பட்டுள்ளதா என யோசிக்க தோன்றுகிறது . மேலே கவனித்தீர்களானால் பச்சை எழுத்துக்களால்  அவர்கள் பார்த்த வெளிச்சமில்லாத உலகம் , குகை போன்ற அமைப்பினூடு பிரயாணம், பார்த்த இன்னொரு வெளிச்சமில்லாத நகரம்  போன்றவை இந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு வேளை எமது வாழ்க்கை ஒரு தொடராக மீண்டும் பழைய காலத்துக்கோ அல்லது அதி நவீன காலத்துக்கோ நாம் செல்லலாம் . 

சிலருக்கு நித்திரையில் தியானத்தின் போதும் உடலை விட்டு மேலே செல்வது போல உணர்வுகள் தோன்றும் . உடலை விட்டு வெளியே செல்வது மரணத்தின் ஒரு அங்கமே .
மரணத்தை அண்மித்தால் விஞ்ஞான ரீதியாகவும் பார்க்கலாம் . எனது அடுத்த பதிவில் விஞ்ஞான  அறிவியல் பார்வையில் இடுகிறேன் . 

தகவல் பிடித்திருந்தால் ஓட்டு போட்டு அனைவரையும்  சென்றடைய செய்யவும்... 

Comments

மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . பல தகவல்களை அறிந்துகொண்டேன் . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !
நன்றி பனித்துளி சங்கர் ..
தொடர்ந்து எழுதுவேன் .. ;))
thalaivan said…
pakutharivu ullavargal othukkolla mattargal
நன்றி தலைவன்
பகுத்தறிவுள்ளவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் ..எடுத்த மாத்திரத்தில் எதுவும் சொல்ல மாட்டார்கள் ஆனால் ஆராய்வார்கள் .. இதை விஞ்ஞான பார்வையிலும் பார்க்கலாம்
Valaakam said…
Super post...
Innum eluthunga... :)

Popular posts from this blog

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ