Skip to main content

கவிதாஞ்சலி‬

ஒரு பாடல் அதனுள்ளே கவிதைத்தன்மை கொண்டிருப்பது என்பது மிகவும் அரிதான விடயம். அப்படியான பாடல்கள் நிச்சயமாக என் தெரிவுகளில்(Playlist) முதலிடத்தைப் பிடித்துவிடும். பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கும்போது வார்த்தைத் தேர்வுகளில் நழுவித் தொலைந்துபோவது ஒரு சுகானுபவம். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒருபாடல் தரக்கூடிய அதியுச்ச சுகம் என்றால் அதுதான் என்பேன். அப்படியான பாடல்களைத் தொகுக்கவேண்டும் என்பது நீண்டநாள் விருப்பம் . கவிதைகளில் இருக்கும் மீமொழி(metalingualism) அழகு. அதாவது, இரண்டாம் அடுக்கு மொழி. ஒன்றை நேரடியாகச் சொல்லாமல் இன்னொரு கவிதை மொழி மூலம் வெளிப்படுத்துவது. அதில் கற்பனைக்கு நிறையவே வேலை இருக்கும். "கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை" என்பது போல, அந்தப் புதிருக்குள் நுழைந்து யாத்திரை செய்வது ஒருவித போதை.
உதாரணமாக, "உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது. இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது." என்கிற வைரமுத்துவின் வரிகளை எடுத்துக்கொள்ளலாம். கற்பனைச் சிறகு விரிந்தால் இதற்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்களுக்கு மேலே எழுதிவிடலாம். சாய்ந்ததில் உன் பூக்கள் உதிர்ந்து இந்தப் பூமியை நிரப்பிவிட்டன என்று சொல்லலாம். அல்லது, அந்த அழகைக் கீழிருந்து கண்ட இந்தப் பூமி சிலிர்த்து மலர்ந்தது எனலாம். இல்லாவிட்டால், பெண்ணழகு கண்டு என் இளமை எனும் பாலைவன பூமி மலர்ந்துவிட்டது என்றுகூடக் கொள்ளலாம். கவிஞர் எழுதிய பொருளையே படிப்பவரும் கொள்ளவேண்டும் எனும் விதிமுறைகள் கவிதைகளுக்குக் கிடையாது. கவிஞர் அப்படித்தான் சிந்தித்திருக்க வேண்டும் என்கிற அவசியமும் கிடையாது.
'உன்னுடன்' திரைப்படத்தில் இடம்பெற்ற, "கண்டுபிடி அவனைக் கண்டுபிடி" என்கிற பாடலிலும் அதற்கு நிகரான வரிகளைக் கவிஞர் அமைத்திருப்பார். அங்கே கம்பனை வம்புக்கு இழுத்தவர் இங்கே கம்பனே பிறக்கட்டும் என்கிறார். "மாராப்பை சரியவிட்டு உந்தன் மார்போடு படரும் கொடி. பேரின்பக் கவி எழுத கம்பன் பிறக்கட்டும் பழையபடி" என்று ஹரிணி பாடுவது கவிதையழகியலை மேலும் மேன்மைப்படுத்துகிறது. இதில் "விண்மீன் விழித்திருக்க அவன் நிலவைத் திருடியவன்" என்றொரு வரி இடம்பெற்றிருக்கும். எனக்கு அவ்வளவு பிடித்தமான வரி. இத்தனை பெண்கள் இருந்தும் அவன் என் தனிச்சிறப்பு உணர்ந்து கொள்ளை கொண்டவன் என்று அர்த்தம் கொள்ளலாம். அல்லது என் பெண்மைக்கு(நிலவு) இத்தனை காவல்கள்(விண்மீன்) நான் வைத்திருந்தும் அதைத் திருடிவிட்டான் என்றும் பொருள் கொள்ளலாம்.
"முதல் முறை திருடியதால் என்னை முழுதாய் திருடவில்லை.", "திருடிச் சென்றதை திருப்பித் தந்தால் அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்" என்கிற எளிய வரிகளில் எவ்வளவு எளிய கவிதைத்தன்மை என்று வியக்க வைக்கிறது.

இந்தப் பாடலைப் பற்றிய என்னுடைய பேஸ்புக் பதிவு இது.

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

முதலில் பாலியல் தெளிவூட்டும் இப்படி மன பக்குவம் அடைந்தவர்களுக்கான(18 +) படங்கள் எடுப்பதற்கு தைரியம் வேண்டும்.அதுவும் முக்கியமாக எமது சமுதாயம் இன்னும் பகுத்தறிவு ,மனப்பக்குவம் அடையாத நிலையில் .ஆனாலும் கவுதம் தெளிவாக சொல்லியிருக்கிறார் பக்குவநிலையை அடைந்தவர்களுக்கான படம் என்று . பலரின் தவறான புரிதலுக்கு உள்ளான ஆரம்ப கதையின் சுருக்கம் . சிறுவயதிலிருந்தே பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் வீராவிடம் சில வருடங்கள்  கழித்து இளம் பராயத்தில் ஏற்ப்படும் மனோநிலை மாற்றமே பல பிரச்சனைகளுக்கு வழிகோலுவதுடன் வாழ்க்கையையும் புரட்டிப்போடுகிறது . சிறுவயதில் தாயை இழந்து ,தனது தந்தையால் பாலியல் வன்புணர்ச்சிக்கு,துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தப்படும் சமீரிட்க்கு(வீராவுக்கு அல்ல ) அவனது பதின்ம வயதில் (Teenage (13 )) அவன் மீது அக்கறை செலுத்தும் பக்கத்து வீட்டு பெண் மீனாட்சி என்பவருடன் பார்த்தவுடனேயே காதல் ஏற்ப்படுகிறது . இந்த கொடுமைகளை தெரிந்துகொண்ட மீனாட்சி சமீரை காப்பாற்றி தன்னுடன் வைத்துக்கொள்கிறார் .சமீரின் பெயரை வீரா எனவும் மாற்றி அவனை வளர்ந்தார் .வீராவும் மீனாட்சி அம்மா என்று அழைக்க வீரா மீனாட

விமான விபத்திலிருந்து எப்படி தப்பலாம்..?

உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ ,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான் தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் . அண்மையில் நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின் பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும் மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார் மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது . அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை . இனி எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் . இது குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2 மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும் முக்கியம் . இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன உயிர்கள் காப்பற்றப்பட்ட