வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர். 

'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார்.வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார்.

இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்ஞானம் பற்றி பேசுவோம் . விஞ்ஞானம் என்றால் ஒன்றும் சிக்கலான தகவல்களை தந்துவிட்டுப் போகவில்லை . அடிப்படை விஞ்ஞானத்தைக் கொஞ்சம் கற்பனையோடு ,காதலோடு சொல்லியிருப்பார் . கொஞ்சம் சிக்கலான தகவல்களை விளக்கப் போவதில்லை . ஒரு தொகுப்பாக மட்டுமே அமையும்.  சில வரிகள் நேரடியாகவே புரிந்துகொள்ளக் கூடியவை.

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து 
என்னோடு நீ பாடி வா சிந்து  

என்று 'இளமைக் காலங்கள்' படத்திலேயே ஆரம்பித்து விட்டார்.

------------------------------------------------------------------------------------------------------------

'கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும் 

பாடல் : கண்டுகொண்டே கண்டுகொண்டேன் 

------------------------------------------------------------------------------------------------------------
நீலம் மட்டும் இழந்துவிட்டால்
வானில் ஒரு கூரையில்லை 

பாடல் : பூ கொடியின் புன்னகை  

------------------------------------------------------------------------------------------------------------

நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதும் இல்லை
 
பாடல் : வண்ணம் கொண்ட வெண்ணிலவே 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

விதையொன்று உயிர் கொள்ள

வெப்பம் காற்று ஈரம் வேண்டும் 

காதல் வந்து உயிர் கொள்ள
காலம் கூட வேண்டும். 

பாடல் : முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் 

------------------------------------------------------------------------------------------------------------

என் உள்ளம் வெறுங் கோப்பை தான் தடுமாறும் கண்ணே 

உன் காதல் நீர் ஊற்றினால் ஆடாது பெண்ணே 

பாடல் : என் செஞ்சில் தூங்கவா நிலாவே

----------------------------------------------------------------------------------------------------------------------------------

நிலம் கடலாகும்
கடல் நிலமாகும்
நம் பூமி என்றும் அழிவதில்லை 

பாடல் : நாளை உலகம் இல்லையென்றால்

----------------------------------------------------------------------------------------------------------------------------------

கடலை வானம் கொள்ளை அடித்தால்
மேகம் என்று அர்த்தம்
 
பாடல் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஓடுகிற தண்ணியில் ஆக்ஸிஜன் மிக அதிகம்
பாடுகிற மனசுக்குள் ஆசைகள் மிக அதிகம். 

பாடல் : காதல் அணுக்கள்

----------------------------------------------------------------------------------------------------------------------------------வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ 

பாடல் : அழகான ராட்சசியே

----------------------------------------------------------------------------------------------------------------------------------

தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி 
பாடல் : தாஜ்மகால் படப் பாடல் 

------------------------------------------------------------------------------------------------------------

பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவி கொள்ளும் 
பாடல் : குளிருது குளிருது 

------------------------------------------------------------------------------------------------------------

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்
கானக்குயிலுக்கு வெயில் பிடிக்கும் 

பாடல் : குச்சு குச்சு ராக்கம்மா

------------------------------------------------------------------------------------------------------------

இதயம் துடிப்பது நின்றாலும்
இரண்டோர்  நிமிடம் உயிர் இருக்கும்
 
பாடல் : ஜீன்ஸ் படப் பாடல்  

------------------------------------------------------------------------------------------------------------
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்.
 
பாடல் : அன்பே அன்பே

------------------------------------------------------------------------------------------------------------

வேறு வரிகள் ஏதும் நினைவில் இருப்பின் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Comments

இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டோர் நிமிடம் உயிர் இருக்கும்
நன்றி கார்த்திக் கவி. சேர்க்கப்பட்டுள்ளது. :)

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

ராதாமோகனின் வேகமான பயணம் போகலாம் (எனது பார்வையில்)

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்