Skip to main content

Posts

முல்லைப்பாட்டு : கன்று தவிப்பதைப் போல்!

தாயைப் பிரிந்த கன்றின் தவிப்புக்கு ஆறுதல் சொல்லிவிடமுடியாது. அதன் கண்களையும், கட்டப்பட்டு நிற்கும் இடத்தையே சுற்றிச் சுற்றித் தன் தவிப்பை வெளிப்படுத்தும் விதத்தையும் பார்த்தவர்களுக்கு ஓர் உண்மை தெரியும். எத்தனை செயல்கள் செய்தாலும், தாய்ப்பசு வரும்வரை கன்றின் ஏக்கம் தீராது. அதுபோக, அதைப் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதன் ஏக்கம் எங்களையும் தொற்றிக்கொள்ளும். கிட்டச் சென்று அரவணைத்துக்கொள்ளும்போது, எங்கள் மனம் வேண்டுமானால் கொஞ்சம் நிறைவு காணும். இந்த ஆழத்தை இந்த முல்லைப்பாடல் எப்படிக் கொண்டுவருகிறது எனப் பார்ப்போம். இலக்கியத்தில் இருக்கும் அழகே இந்த ஆழம்தான். படிக்கும்போது தொடர்புபடுத்திக்கொள்ளுங்கள். அது ஒரு மழைக்கால மாலைப்பொழுது. துயரை மேலும் அதிகரிக்கச்செய்யும் பொழுது. 'மழைக்காலத்துக்கு முன்னர் திரும்பி வந்திடுவேன்' எனச் சொல்லிவிட்டுப்போன தலைவன் எப்போ திரும்பி வருவான் எனத் தலைவி வருத்தத்தில் இருக்கிறாள். அவள் வருந்தி இளைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோருக்கும் அந்தத் துயர் தொற்றிவிட்டது. இவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியாத செவிலித்தாயும் முதுமையான சில பெண்களும் ...

அடைமழைக்குள் ஒரு குறுந்தொகைக் காதல்

இந்தக் கார்காலம் என்னை வதைக்கிறது தோழி. தோழியே கேளு! காட்டில் இருக்கிற ஆண்மான்கள் எல்லாம் மென்மையும் மடமையும் உடைய தங்களோட அழகான பெண்மான்களைத் தழுவிக் காதல் இன்பம் கொள்கின்றன. இயற்கைதான் எவ்வளவு மென்மை! அந்த மயக்கத்தில், அவையெல்லாம் காட்டிலுள்ள புதரிலே ஒடுங்கும்படியான சூழலை இந்தக் கார்காலம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தலைவன் பிரிவு ஒருபக்கம் இருக்க, இந்தக் கார்காலமும் இயற்கையும் எனக்கு எதிராகச் சதி செய்கிறது.   மான்கள் மட்டுமா! துதிக்கையை உடைய பெரிய ஆண்யானைகள் எல்லாம் பெண்யானைகளுடன் சேர்ந்து மேகம் சூழ்ந்திருக்கிற மலையிடத்தை அடையும்படி அடைமழை பொழியுது. இருக்கிற கவலை போதாதென்று, மேலும் துன்பம் தந்து வாட்டக்கூடிய இந்த மாலைநேரமாகப்  பார்த்தல்லவா பெய்கிறது. பொன் மாதிரி இருக்கிற என் மேனியின் நல்லழகை கெடுத்த என் தலைவர் இனியும் வராமல் விட்டால் என் உயிர் என்னாகும்! அவரால்தான் என் மேனி அழகையும் உயிரையும் மீட்டெடுக்க முடியும். நான் பசலையால் நொந்துபோய் இருக்கிறேன். அவர் வராவிட்டால் என் உயிர் நீங்கிவிடும்.  அவர் தீண்டினால் உயிர் நிறைவேன். அந்த மான்க...

கூதிர்காலத்தை குறுந்தொகையால் வரவேற்கலாம்...

கூதிர்காலம் ஆரம்பித்திருக்கிறது. பனியும் மழையும் ஒன்றாகப் பொழியும்போது அதற்குப் பொருத்தமான ஒரு அழகான குறுந்தொகைப் பாடலோடு காதல் காலத்தை வரவேற்பது அழகாக இருக்கும் என நினைக்கிறேன். தலைவன் பிரிவைத் தலைவி தாங்கிக்க மாட்டான்னு கவலைப்பட்ட தன் தோழியிடம் தலைவி தன் மனநிலையைச் சொல்லுகிறமாதிரியான பாடல். படம் : இணையம்  தோழியே கேளு, ஈரத்தைச் சுமந்துவந்து என்மேல தூவுகிறபடி பனிக்காற்று வீசுகிற கூதிர்காலம் இது. நடுக்கம் தருகிற இந்தக் குளிர்கால இரவின் அமைதியில் மெல்லிய மணி ஒலி மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. தொலைவிலிருந்தாலும் துல்லியமாகக் கேட்கிறது. இரவுல நல்லாத் தூங்குற பசுவை ஈ/நுளம்பு உறங்கவிடாம கடிச்சு தொந்தரவு செய்கிறது. ஈ அமரும் இடத்தை எல்லாம் தன்னோட நாக்கால தடவுவதற்காக பசு தன்னோடை தலையைத் தூக்கிவிட்டு மறுபடியும் உறங்குகிறது. இதையே திரும்பத் திரும்பச் செய்திட்டிருக்கு. அது இப்பிடி செய்யும்போதெல்லாம் அதோடை கழுத்துல இருக்கிற குட்டி மணி அசைந்து அசைந்து சின்ன ஒலி எழுப்புது. அந்த ஒலி என்னை ஏதோ செய்கிறது. என் தனிமைக்கு துக்கத்தை இன்னும் அதிகரிக்கிறது.  இந்தச் ...

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

தேரழகு !

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, நல்லூர்க் கந்தனின்  தேர்த்திருவிழாக் காலம்  என்பது ஒரு மிகப்பிரமாண்டமான கொண்டாட்டக் காலம். யாழ்ப்பாணச் சமூகத்தின் பிரதான கலாச்சார விழாவாகவே ஆகிவிட்டது என்றுகூடச்  சொல்லலாம். கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழாவானது,  மொத்தமாக  27 நாட்கள் இடம்பெற்று, வைரவர் உற்சவத்துடன் நிறைவுபெறும். இன்றுவரை சரியான ஆகம விதிமுறைகளின்படி இடம்பெறும் தேர்த்திருவிழா இதுவென்றும்  சொல்லலாம்.  தேரன்று, வெளிக்கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள்  என அனைத்தும் மூடப்பட்டு, ஒரு விடுமுறை தினம்போலவே காட்சியளித்தது. கோயிலிலிருந்து குறிப்பிட்ட அளவு தூரத்திலேயே வாகனங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கோயிலைச் சுற்றியுள்ள வீதியெங்கும் தண்ணீர்ப் பந்தல்கள் நிறுவப்பட்டிருந்ததோடு, எங்குபோனாலும் பக்திப் பாடல்கள்தான் காதுகளில் கேட்டவண்ணம் இருந்தது. கோயிலுக்குச் செல்லும் வீதியில், கலாச்சார ஆடைகளுடன் வரும்படி அறிவுறுத்தும்  பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கலாச்சார ஆடைகளுடன் கோயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந...

தமிழர் அரசியலும் சர்வதேசமும் 2..

ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுச்  சில நாட்களே ஆகிறது. இந்நிலையில், இலங்கையின் முக்கிய பிரச்சனையான இனப்பிரச்சினை தொடர்பில் அரசிடமிருந்து எவ்வாறான பதில்கள் கிடைக்கப்பெற்றிருக்கிறது  என்பதனை ஆராய்வது அவசியமாகும். சாதகமான ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்கிற வேளையில் இனப்பிரச்சனை தொடர்பில் சர்வதேசம் என்ன அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது எனத் தெரிந்துவைத்திருப்பதும்  அவசியம். இனப்பிரச்சனையும் உள்நாட்டு அரசியலும் ஜனவரி 17ல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தபின்னரும்கூட  உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை நிச்சயமற்ற தன்மை தொடர்ந்தது. இதன் காரணமாக, இனப்பிரச்சனை தொடர்பில் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளையோ, கருத்துகளையோ யாரும் முன்வைக்கவில்லை. எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஒருவித புரிந்துணர்வின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டது.  வெளிப்படையான பேச்சுகளை முன்னெடுத்திருந்தால், அவை தென்னிலங்கையில் மிகப்பெரும் அரசியற் பிரச்சாரமாக உருவெடுத்திருக்கும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைகூட மார்ச்சில் வெளியாகவிருந்த மனித உரிமை அ...

தமிழர்களின் அரசியலும் சர்வதேச நகர்வுகளும்!

இந்தக் கட்டுரையானது, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த காலகட்டத்திலிருந்து, இலங்கை மீது விழுந்திருக்கும் சர்வதேசப் பார்வையை ஆராய்வதோடு, உள்நாட்டு அரசியல் களநிலவரங்களையும் ஆராய்கிறது. இந்தியா, அமெரிக்கா உட்பட  மேற்குலக நாடுகளினதும் கொள்கைகள் மாறியிருக்கிற காலகட்டத்தில், அவற்றை நன்றாகப் பயன்படுத்தி, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உண்டாக்கித் தரவேண்டியது அரசியற் தலைவர்களினது கடமையாகும். அதற்குத் தகுதியான, சர்வதேச நாடுகளிடையே சிறந்த உறவைப் பேணக்கூடிய உறுப்பினர்களை, பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது. அமெரிக்கா போலே Soft power இலிருந்து Smart Power எனும் கொள்கையை அடையவேண்டும். அதனை அடைவதற்கு ஒற்றுமையும் உழைப்பும் அவசியம். சர்வதேச அரசியல் பற்றிய அறிவினைச்  சாதாரண மக்களும் பெற்றிருக்கவேண்டும். இலங்கையில், 2015ம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிற வேளையில், வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தல் களங்களும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதற்கான  காரணம், உள்நாட்டில் நிலவுகிற  இனப்பிரச்சனை.  இதி...