Skip to main content

Posts

குவாண்டம் சூசயிட்

பல்கலைக்கழக ஆய்வாளர் Max Tegmark  என்பவரால் இது 1997 இல் உலகின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது .ஒருவர்  துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்க்கொலை  தயாராக உள்ளார் .  துப்பாக்கி மணிக்கூட்டு திசைக்கு  எதிராக சுழன்றால் சுடாது , மணிக்கூடு திசையில் சுழன்றால் சுடும் . தற்கொலை செய்பவர் முதல் தரம் சுடுகிறார் துப்பாக்கி இடது பக்கம் சுழல்கிறது சுடவில்லை .இரண்டாவது தடவையும் சுடவில்லை .மூன்றாவது தடவையும் சுடவில்லை .  மீண்டும் ஆரம்பத்திற்கு சென்றால் , அதாவது தன்னை தானே சுட ஆரம்பிக்கும் முதல் :-  முதல் தடவை சுடும் போதே இறந்து விடுகிறார் . பொறுங்கள் .... . முதலில் இறக்கவில்லை , இரண்டாவது சந்தர்ப்பத்தில் ஆரம்பத்திலேயே இறந்து விடுகிறார் . அதெப்படி இரண்டும் சாத்தியம் ? அதாவது ஒவ்வொரு தடவை சுடும் போதும் உலகம் இரண்டாக பிரிகிறது . இது தான் நாம் எடுக்கும் தீர்மானங்களை ஒவ்வொரு நொடியும் நாமே தீர்மானிக்கிறோம் என்பது . ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை . அதாவது ஒருவர் உயிரோயல்லாத போது அவரின் பிரதி  உயிரோடு இருக்கலாம் .  இதை பற்றி ...

எந்திரன் - சரியாக போய் சேருமா ?

உயர் தொழில்நுட்பத்தில் ஒரு திரைப்படம் அதிக செலவில் எடுக்கப்படும் போது வர்த்தக ரீதியில் அதை வெற்றியடைய செய்யும் கட்டாயத்தில் தயாரிப்பாளர் இருக்க(அதில் தவறில்லை ) , ஷங்கர்  மீதான விமர்சனங்களும் ஒரு புறம் இருக்க , தமிழில் அறிவியல் திரைப்படம் எனும் கோணத்தில் பார்க்கும் போது அனைத்தையும் உடைத்துப்போட்டு விடுகிறது இத்திரைப்படம் . தமிழ் அறிவியல் எழுத்தில் எதிர்காலமாகவும் நிஜத்தில்  இறந்தகாலமாக திகழும்  என் இனிய எழுத்தாளர் சுஜாதாவின் கதை "என்  இனிய இயந்திரா" , எந்திரன் திரைப்படமாக  பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவு  பட்டி தொட்டி எங்கும் குப்பன் ,சுப்பன் வரை எந்திரனையும் எந்திரன் பற்றிய அறிவியலையும் எடுத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை .ஆனால் அந்த எந்திரன் ரஜனிகாந்தாக செல்லுமா அல்லது தொழிநுட்பப நிஜ எந்திரனாக அறிவியல்  சார்ந்து  செல்லுமா என்பதே இன்றைய கேள்வி . அறிவியல் திரைப்பட வெற்றிக்கு கோவில் படியில்  முட்டியால் நடந்து சென்ற ரசிகர்கள் .. சுஜாதாவின் என் இனிய இயந்திராவில் ஹீரோ என்று யாரும் கிடையாது . சிபி ,நிலா ...

இந்துக்களும் பிரபஞ்ச கொள்கையும் - முடிவிலிப்பக்கங்கள்

மதம் என்ற பெயரில் பதிவு எழுத ஆரம்பிக்கிறேன் என்றவுடன் எனது எண்ணங்கள் மதங்களை திருபுபடுத்திய/திருபுபடித்திக்கொண்டிருக்கும் , தவறான எண்ணக்கருவில் உள்ளவர்களை , இழிவானவர்களை நினைவு படுத்துவதால் பிரபஞ்ச கோட்பாடு அடிப்படையில் எழுத்துகளை பதிகிறேன் . மதங்களை உருவாக்கிய மனிதன் அதற்க்கு பெயரும் வைத்தான் என்று சொல்வதில் சந்தேகம் இல்லை . இந்து என்ற பெயரும் இதற்க்கு விதிவிலக்கல்ல ஆனால்  இந்து மதத்தின் உருவாக்கத்திற்கு எந்தவித கதைகளுமோ இல்லை .உரிமையாளரும் இல்லை . அது ஒரு விஞ்ஞான ரீதியாக முதலே விருத்தியடைந்த மனித இனம் .அதன் அடையாளம் . உதாரணத்திற்கு இந்தியா ஆரியபட்டாவின் (பூச்சியத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்  ) காலத்தில் உலக நாடுகளை விடவும் மிகச்சிறந்த அபிவிருத்தி அடைந்த  நாடாக இருந்ததாக உலக வரலாறுகள் கூறுகின்றன . இதன் வீழ்ச்சிக்கு காரணம் புரோகித சூழ்ச்சிகளும் , சில சமூகத்தவரின் தன்னலம் கருதிய நடவடிக்கைகளும் சமயத்தின் போக்கையே  மாற்றிவிட்டது .  வெறுமனே பணமும் ,காவடிகளும் ,திருவிழாக்களும் , பரிகாரமும் பூஜைகளுக்குளும் அடங்கி விட்டது . ...

மனிதன் ஏன் இரண்டு கால்களால் நடக்கிறான் ??

மனிதன் ஏன் இரண்டு கால்களால்  நடக்கிறான் ?? மனிதன் உருவாக்கிய கடவுளும் இரண்டு கால்களுடன் இருப்பதாலா ? டார்வினி கூர்ப்பு கொள்கைக்கு எதிராக  சில கேள்விகள் கேட்க்கப்பட்டு மதவாதிகளால் அலட்ச்சியப்படுத்தப்பட்டாலும் இன்றும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இறைவன் இந்த பூமியை ப்ராஜெக்ட் எடுத்து மனிதனை படைத்து அவனுக்காக எல்லாம் படைத்தது என்று பல ஆண்டுகளுக்கு முன் பகுத்தறிவு குறைவான காலத்தில் எழுதியவற்றை இன்றும் பின் பற்றி வருகிறான் . அப்படியானால் எதற்கு மனிதனுக்கு முதல்  டைனோசர்களை  படைத்தார் ? இவ்வாறான கேள்விகளை மீண்டும்  கேட்டாலும் அவற்றிற்க்கு பதில் அளிப்பதில்லை .. ஆனால் மனிதன் இரண்டு காரணங்களால் இன்று மற்றைய உயிரினங்களை விட அறிவாலும் அனைத்து விடயங்களாலும் முன்னேறி  உள்ளான். அதற்க்கு  முக்கிய காரணம் மனிதனின் சிந்தனை . இதில் முக்கிய பங்கு பகுத்தறிவு ... ஆபிரிக்காவில் 4 மிலியன் ஆண்டுகளுக்கு முதல் ஒரு வகை குரங்குகளில் (Apes ) இருந்தே கூர்ப்பின் அடிப்படையில் மனிதன் முழுமையாக ஆனான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது ஆய்வாளர்களால் ...  australopithecin...

எது செய்ததாலும் பிழைக்குதா? - விதி இல்லை- முர்பியின் விதி

ஒரு உதாரணத்தோடு தொடங்கலாம் .... நீங்கள் ஒரு தெருவில் வாகனத்தில் ஒரு வரிசையில் காத்திருக்கும் போது அருகில் இருக்கும் வரிசையில் வாகனங்கள்  நகரும் . அருகில் இருக்கும் வரிசைக்கு மாறினால் அந்த வரிசை நின்றி விடும் . ஏனைய வரிசைகள் யாவும் வாகனங்கள்  அசையும் . இன்னொரு உதாரணம் சொல்லலாம் . யாருக்காவது கால் பண்ணலாம் எண்டு பார்த்தா அந்த நேரம்பார்த்து பண மீதி போதாததா இருக்கும் . இல்லாவிட்டால் பட்டெரி தீர்ந்து  விடும் . முர்பியின் விதி இதை தான் சொல்க்கிறது .ஒருவிடயம் பிழையாக செல்ல வேண்டுமானால் பிழையாகவே செல்லும் . மொழி நடையில் சொன்னால் , சுதப்பினால் தொடர்ந்து சுதப்புவது பற்றி தான் அந்த விதி சொல்கிறது . இது அனைவருக்கும் நடந்திருக்கும் . உண்மையில்  மூர்பியின் விதி முன்னரே பிரபல்யம் அடையவில்லை . முர்பி எனும் அமெரிக்கா விமான படை அதிகாரி ஒருவர் இருந்தார்(இறந்த வருடம் 1990 ) . அவர் விமான பாதுகாப்பு பற்றி ஆராய்ச்சி மேட்க்கொள்ளும் போது  விமான விபத்தில் மனிதர்களின் நிலையை அறியும் பரிசோதனையும்  நடை பெற்றது .  அதற்ட்க்கு ஒரு மனிதர் தேவைப்பட்டார் . அதற்க்கு முர்...

ட்ரோஜன் குதிரைகள் - இணைய பாதுகாப்பு

ற்றோஜோன் ஹோர்செஸ் வைரஸ்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் சிலர் . ஆனால் அவை எவ்வாறு இயங்குகின்றன எப்படி தடுக்கலாம் பார்ப்போம் . இவை சாதாரண வைரஸ்கள் போல  அல்ல .   முதலில் ஒரு கதையை சொல்லி விட்டு பின்னர் தகவலை வழங்கினால் விளங்கும் என்று எண்ணுகிறேன்  .  கிரேக்கர்கள் ஒரு காலத்தில் ற்றோஜங்களிடம் மிகப்பெரிய குதிரையை கொண்டு செல்ல முயன்றனர் . அந்த மரத்தாலான பெரிய குதிரையை பார்த்தவர்கள் அதை தமது வெற்றி பரிசு என்று எண்ணி உள்ளே வரவைத்தனர் . அதன்  பின்னர் அந்த குதிரைக்குள் இருந்த கிரேக்கர்கள் படபடவென இறங்கி சண்டை இட தொடங்கினர் . இந்த கதை அனைவரும் கேட்டிருப்பீர்கள் .  அதே போல தான் இந்த ற்றிஜோன் குதிரை வைரஸ்களும் . சாதாரண வைரஸ்களை கணனியின் fire wall (பயர் வோல்) அனுமதிப்பதில்லை . அதனால் இவை வேறு ஒரு வடிவிலோ அல்லது எமக்கு தெரிந்த பழகிய ஏதாவது ஒன்றாகவோ உள்ளே நுழைய பார்க்கும் . முக்கியமாக அவை எம்மை கவரும் வகையிலே பெரும்பாலும் இருக்கும் .     இவை உள்ளே வந்தவுடன் தமது வேலையை ஆரம்பிக்கும் .  எமது கணனியில...

மனிதனை விட திறமையான விலங்கு - புறா 1

மிகவும் நீட தூர பிரயாணத்திற்கு பின்போ ஏன் குறுகிய தூர பிரயாணத்தின் பின்பே நாம் வந்த வழியை மறந்துவிடுவோம் . ஆனால் புறாக்கள் எவளவு தூரம் பறந்தாலும் அதே இடத்தை வந்தடையுமாம். 1100 மயில்கள் எந்த வித வழிகாட்டியும் இல்லாமல் வந்தடையும் . இதற்க்கு அவற்றிற்க்கு உதவி புரிவது அவற்றின் சொண்டுகளில் காணப்படும் இரும்பு தாது பொருந்திய கட்டமைப்பே . இவை அவற்றிற்க்கு பூமியின் மின்காந்த  அலைகளை உணர  செய்கின்றன . அவற்றின் மூலம் அவை புவியியல் தன்மையை இனம் கண்டு கொள்கின்றன . புறா பறக்கும் போது அதன் திசையை மாற்றும் போது வடக்கு நோக்கியே இரும்பு மூலக்கூறுகள் திரும்பும் .எப்போதும் பூமியின் மின்காந்த அலையை திசையை நோக்கிய படியே இருக்கும் . முதன் முதலாக புறா மூலமே எகிப்தியர்களால் தகவல் பரிமாறும் சேவையும் ஆரம்பிக்கப்பட்டது . மிகவும் திறமையான புறாக்கள் ஒரு நாளைக்கு 500 மைல் தூரம் பறக்குமாம் . படத்தில் காட்டியுள்ளது போல சொண்டின் மேற்ட்பகுதியில் உள்ள இரும்பே கூடுதலான உணர்திறன் கொண்டது . European Robins, domestic chickens, and Silvereyes  போன்ற பறவைகளுக்கும் இவ்வாறான அலகே...