உயர் தொழில்நுட்பத்தில் ஒரு திரைப்படம் அதிக செலவில் எடுக்கப்படும் போது வர்த்தக ரீதியில் அதை வெற்றியடைய செய்யும் கட்டாயத்தில் தயாரிப்பாளர் இருக்க(அதில் தவறில்லை ) , ஷங்கர் மீதான விமர்சனங்களும் ஒரு புறம் இருக்க , தமிழில் அறிவியல் திரைப்படம் எனும் கோணத்தில் பார்க்கும் போது அனைத்தையும் உடைத்துப்போட்டு விடுகிறது இத்திரைப்படம் .
தமிழ் அறிவியல் எழுத்தில் எதிர்காலமாகவும் நிஜத்தில் இறந்தகாலமாக திகழும் என் இனிய எழுத்தாளர் சுஜாதாவின் கதை "என் இனிய இயந்திரா" , எந்திரன் திரைப்படமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததன் விளைவு பட்டி தொட்டி எங்கும் குப்பன் ,சுப்பன் வரை எந்திரனையும் எந்திரன் பற்றிய அறிவியலையும் எடுத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை .ஆனால் அந்த எந்திரன் ரஜனிகாந்தாக செல்லுமா அல்லது தொழிநுட்பப நிஜ எந்திரனாக அறிவியல் சார்ந்து செல்லுமா என்பதே இன்றைய கேள்வி .
அறிவியல் திரைப்பட வெற்றிக்கு கோவில் படியில் முட்டியால் நடந்து சென்ற ரசிகர்கள் ..
சுஜாதாவின் என் இனிய இயந்திராவில் ஹீரோ என்று யாரும் கிடையாது . சிபி ,நிலா ,ரவி , ஜீனோ கதாப்பாத்திரங்கள் ஜீவா எனும் நாட்டின் தலைவருக்கு எதிராக , அவரின் கொடுமைகளுக்கு எதிராக செயல்படுவது போல அந்த கதை நகர்கிறது . அந்த விஞ்ஞான புனைகதை 2022 இல் இடம் பெறுவது போல 1986 இல் எழுதியிருந்தார் . இதில் ஜீனோ ஒரு இயந்திர நாய் . முழுவது கணணி எந்திர மயம், இலக்கங்களிலேயே அனித்தும் இருக்கும் என பல விஞ்ஞான விளக்கங்கள் , கருத்துகள் என் இனிய இயந்திராவில் வாசிக்க வசிக்க இனிமையும் வியப்பும் நிறைந்திருக்கும் .
சுஜாதாவின் எழுத்து அறிவியலை அப்படியே பிரதிபலிப்பது மிக கடினம் . அப்படியே பிரதிபலிக்க முனைந்தாலும் தமிழ் திரையுலகம் மசாலா எனும் மந்திரன் கொண்டு அதை அழித்துவிடும் . அதில் தவறும் இல்லை .தமிழர்களின் இன்றைய தேவை மசாலா தான் .. 7 பாடல்களை(35 நிமிடங்கள் ) திணிக்க வேண்டிய கட்டாயம் வேறு இதில் .
ஆனால் சுஜாதா கதையும் ,அறிவியலும் திரைப்படத்தில் சிதைந்து போகலாம் . அறிவியல் படத்துக்கு படம் வெளி வர முதலே சிலர் கொடுத்த விமர்சனங்களும் , ஷங்கர் ,ரஜனி மீதிருக்கும் வெறுப்புமோ இத்திரைப்படத்தை மறைத்தாலும் சுஜாதாவின் நூல்களுக்கு வழிகாட்டி விட்டதால் எந்திரன் தமிழ் அறிவியலில் நுழையும் . சுஜாதாவின் கனதியான எழுத்தை இத்திரைப்படம் பாதியில் இழந்தது நிவர்த்தி செய்ய முடியாதது .
ஒரு வேளை இந்த திரைப்படம் வெறும் ரஜனி படமாக தமிழர்களை அடையலாம் . அவ்வாறான உத்திகளே படம் வெளிவர முதலே கையாளப்பட்டு வருகின்றன . இதுவரை அறிவியல் தொடர்புடைய எந்த நடவடிக்கையும் , விளம்பரமும் இடம்பெறவில்லை .வெறும் பிரம்மாண்ட (செலவில் ) இயக்குனர் நாயகன் ஷங்கர் இந்த படத்தில் கூற வரும் செய்தியை சுஜாதா இல்லாமல் சரியாக பிரதிபலிப்பாரா என்பது சிந்திக்க வேண்டியது . சுஜாதாவின் எழுத்து பாமரனையும் அறிவியல் தன்மையோடு சிந்திக்க வைக்கும் . அனைவரையும் சிந்திக்க வைக்கும் .
சுஜாதா வசன வாசனை சில பட ற்றேயிலரின் பிரதி பலித்தது " என்ன நக்கலா ? சிட்டி இயந்திரன் "இல்லை நிக்கல் ,போல்ட் நட்டெல்லாம் நிக்கல் பண்ணது " என்று சொல்லும் .
வரவேற்க தக்க அறிவியல் திரைப்படம் , ரஜனியாலேயே இவளவு பிரபலம் , ஆனால் முழு ரஜனி படமாக, மசாலாவாக மக்களை அடையாமல் விட்டால் நல்லது . ஆனால் இன்னும் இத்திரைப்பட பின்னணியில் வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை கதாநாயகன் என் இனிய சுஜாதா ..

Comments
அவரின் கதையை கருவாக வைத்து எந்திரன் உருவாகினாலும்... சன் பிக்ஷர் என்ற வலைக்குள் இருப்பதாலும்..இது அறிவியலைத்தாண்டி ஒரு கொமர்ஷியல் படமாகத்தான் அமையும் என நானும் நினைக்கிறேன்.. :(