மானாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில்
கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்.
கருநீலப் போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம்.
வைரமுத்து |
கண்ணாடியின் முன்நின்று (Katoptronophilia) காமத்தின் நுண்கலைகள் பயில்வது காதலைத் தூண்டும். அதேநேரம், அது உணர்வின் கவனத்தைத் திசை திருப்பாமல் இருப்பதும் முக்கியம்.
தனியே, கண்ணாடியில் எமது அழகைக் கடந்திருக்கிறோம். அப்படிக் கடக்கையில், ஒன்று அழகை மெச்சிக்கொள்வோம். இல்லையென்றால், தாழ்வுமனப்பான்மை தோன்றும். நம் அழகை நாமே மெச்சிக்கொள்வதன் தீவிர நிலை நார்சிஸம். இப்படித் துணையாகக் கண்ணாடியில் பார்த்துக்கொள்வதையும் நார்சிஸம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால், காமத்தைச் சேர்ந்து கண்ணாடியில் பார்ப்பது ஒருவர் சம்பந்தப்பட்டது கிடையாது. எதுவுமே எல்லைக்குள் இருக்கும்வரை அழகு. கரை மீறாதவரை ஆழி அழகு. உள்ளக் காதலும் அப்படித்தான். எதிலும், நுண்கலை காண்பது காமத்துக்கு அழகு. புதுக் கலைகள் அழகு.
|
சிலருக்குத் தம் உடல் பற்றிய அதிருப்தி இருந்தால், அவர்கள் தங்கள் உடலைக் கண்ணாடியில் பார்ப்பதை விரும்பமாட்டார்கள். அதனால், துணைக்கும் ஆர்வம் இருந்தால் மட்டுமே இது நிகழவேண்டும். இல்லாவிட்டால், இது ஆர்வத்தைக் குறைத்து அதிருப்தியை ஏற்படுத்தும்.
கண்ணாடியில் பார்த்துக்கொள்வது மொத்தக் காதல் நிகழ்வில் சிலநொடி மட்டுமே நீள்வதாக இருப்பதும் நல்லது. இத்தனை காலக் கற்பனையும் நிஜமும் சேர்ந்துகொள்ளும் இடம்.
சிலருக்குத் தன் அழகுமீது விருப்பம் இருக்கிறது. பின்னிருந்து கழுத்து வளைவில் அழுத்தி எழுதும் முத்தத்தின் நீட்சியைப் பாராட்டி, சொருக எண்ணும் கண்களோடு, தன்னைக் கண்ணாடியில் பார்த்து இரசிப்பாள். உணர்வில் மிதக்கும் தன் இதழ் அசைவையும், அவன் சேவை அழகையும் ஒருசேர இரசிப்பாள். ஆடையற்ற உடலில் மயிலிறகு ஸ்பரிசங்கள் வரைவதை இரசிப்பாள். அவள் அழகு ஆராதிக்கப்படுவதையும் பாராட்டப்படுவதையும் இரசிப்பாள்.
இவை யாவும் அவள் இத்தனை காலம் மனக்கண்ணில் சேர்த்து வைத்த கனவுகள். மனக்கண்ணில் நிறைவுறாத காட்சிகளுக்குக் கண்ணாடி உயிர் கொடுக்கும். என்றோ ஒரு தனியறையில், தான் மனதில் கண்டு திளைத்த காட்சியை, நினைவு நனைந்ததைக் கண்ணாடியில் இரசிக்கிறாள். அவள் உணர்வுகளையும் அவன் கண்ணாடியில் பார்க்கிறான். அவன் செயல்களையும் கண்ணாடியில் பார்க்கிறான். இருவர் உணர்வையும் ஒரு சட்டகத்துக்குள் காட்சி ஊடகத்துக்குள் அழைக்கிறது கண்ணாடி. இத்தனை காலமும் காட்சி ஊடகங்களில் ஏங்கிய காட்சியைக் கண்ணாடி ஒரு ஊடகமாகிக் காட்டுகிறது. பிழைகளைக் காட்டுகிறது. பயில்வோம் என அழைக்கிறது.
மணிரத்னத்தின், 'ஓக்கே கண்மணி', 'காற்று வெளியிடை' என்று கண்ணாடி பார்த்துக் காதல் பயிலும் காட்சிகள் அதிகம். "கள்வரே" பாடலில் நடனத்தைக் கொண்டே உயர் நிலையைக் கலையாகக் காட்டியிருப்பார். கொஞ்சம் தீவிரமும் மென்மையும் கலந்த காமம். "கள்வரே" பாடலில் வீடு முழுவதும் கண்ணாடி இருக்கும். கூடுதலாக ஆர்வமிருப்பவர்கள் வீட்டின் கட்டிலின் மேலேயும் கண்ணாடி அமைப்பது உண்டு. இவற்றைத் திரையில் கலையாகக் காட்சிப்படுத்துவது என்பது இன்னொரு கலை.
Comments