Skip to main content

மூடர் கூடம்


அண்மையில் வெளியான திரைப்படங்களில் இயக்குனர்  நவீன் அவர்கள் இயக்கிய 'மூடர் கூடம் '  மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு முயற்சியையும் புதிது என அறிமுகப்படுத்துவது கொஞ்சம் பழசாகப்படுகிறது. Quentin Tarantino வினுடைய படங்கள் போல என்கிற அறிமுகத்துக்கு  எல்லாம் அவசியமில்லை.

இந்த அறிமுகங்கள்,விளக்கங்கள் எதுவுமில்லாமல் படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள். தமிழில் ஒரு புதுமையான திரைப்படம் பார்த்த அனுபவம் கிட்டும்.



படத்தில் அப்படி என்ன இருக்கு ? . ஒரு ஆர்வத்தில், 'படத்தின் கதை என்ன ?' எனக் கேட்பவர்களுக்காக கதையைச் சொல்லிடலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாலு பேரும்  சேர்ந்து திருடப்போறாங்க.படத்தின் கதையே அவ்வளவுதான்.ஆனால் கதை சொல்லும் விதத்தில் புதுமை செய்திருக்கிறார் நவீன்.

அந்த நான்கு பேரில் இயக்குனர் நவீனும் ஒரு பாத்திரமேற்று நடித்திருக்கிறார்.படத்தில் வருகிற அத்தனை பேரின் நடிப்பும்,Deadpan expressions உம் பிரமாதம்.ஒவ்வொரு சிறிய கதாப்பத்திரத்துக்கும் படத்தில் முக்கியத்துவம் உண்டு. நாய்க்கு ஒரு பாடல் கூட உண்டு. Flashback எல்லாம் உண்டு. விலங்குகளை வைச்சும் இந்தச் சமூகத்தோடை கதையை சொல்லிடலாமா!. சில காட்சிகளை நகைச்சுவை என நினைச்சு கடந்தும் போய்விடலாம்.படம் முழுதும் அபப்டித்தான். நகைச்சுவையாகப்  பார்க்கிறவர்கள் அப்படியே கடக்கலாம். அவரவர் பார்வைக்கு,சிந்தனைக்கு என்று இயக்குனர் விட்டுவிட்டாரோ என்னவோ!

இந்தப் படம் பார்த்துவிட்டு நகைச்சுவையே இல்லையே,சிரிப்பே வரல என்று கேட்டால் ஒன்றும் செய்யமுடியாது. கம்யூனிசம் , மார்க்ஸிசம் பேசுகிறார்கள் என்றெல்லாம் அலுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவ்வப்போது சில காட்சிகள்.இந்தப் படத்தில் எல்லோரும் இயல்பாகவே இருப்பார்கள். பார்க்கும் எமக்கு சிரிப்பைத் தூண்டும். உண்மையிலேயே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு வாழும் நகைச்சுவையான வாழ்க்கை தானே இது. வெளியிலிருந்து திரையில் பார்க்கும் போது சிரிக்கிறோம். உள்ளிருக்கும் போது தோன்றுவதில்லை.


இறுதியில் பொம்மைக்கும் ஒரு கதை உண்டு. 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்கிற பாடல் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெளிவாக்கிவிடும்.இது 'பொம்மை' என்கிற படத்தில் ஜேசுதாஸ் பாடிய பாடல். தமிழில் அவர் பாடிய முதல் பாடல் இது.அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.


இந்தப் படத்தில் இசையை மிகவும் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் சங்கர நாராயணன்.பின்னணியில் 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' ஒலிப்பதெல்லாம் சிறப்பு.

தமிழுக்கு ஒரு நல்ல புதிய இயக்குனர் கிடைத்திருக்கிறார்.இந்தப் படம் உருவாக எடுத்த முயற்சிகளை பற்றி ஒரு கட்டுரை தி இந்துவில் (இயக்குனரின் பேட்டி)கூட வந்திருந்தது.  

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...

மதன் கார்க்கி வரிகளின் ரசிகனாய் - 180 பாடல் வரிகள்

பாடல்கள் என்றால் முதலில் அதில் வரிகளை உன்னிப்பாக ரசிப்பவன் நான் . வரியோடு சேரும் போது தான் அதில் உயிரோட்டம் இருக்கும் . இதற்க்கு ஒரு காரணம் வைர வரிகளின் சொந்தகாரர் வைரமுத்து அல்லது  வரிகளிலேயே  இசை கொண்டுவரும் கண்ணதாசனின் வரிகளாகவும் இருக்கலாம் . எல்லாவற்றையும் விட தமிழின் அழகை உணருவது மிக முக்கிய காரணமாக இருக்கலாம் . ஆனால் அழகான தமிழ் சொற்களை கொண்டலாய்( :-) ) பொழியும்  மதன் கார்கியின்  மீதான ஈர்ப்பே இரும்பிலே ஒரு இருதயத்தில் இருந்து தொடர்கிறது  . புதிய படமான  180 இல் மதனின் பாடல் வரிகளை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பார்ப்பை சற்றும் குறைக்கவில்லை .முன்னைய கார்கியின் வரிகளுக்கான  பதிவு .. முதலில் ரசித்த பாடல் ..... சந்திக்காத கண்களில் .... -பாடலை  கேட்க்க சந்திக்காத கண்களில் இன்பங்கள்  செய்ய போகிறேன்  சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்  பெய்யப்போகிறேன் ... குவியமில்லாவுக்கு பிறகு ஈர்த்த சொல் கொண்டலாய் . கொண்டலாய் என்றால் மேகம்  . சிந்திக்காது சிந்திடும் மேகம் .அழிந்து வரும் அழகான சொற்கள் அறிம...