ஐந்தாம் நூற்றாண்டு வரை முருகனுக்கு வள்ளி ஒருத்தி தான் மனைவி. வடமொழிப் பண்பாட்டுக் கலப்பில் ஸ்கந்தக் கருத்து நம் முருகக் கருத்துடன் கலந்த பின் தான் தேவசேனை எனும் மற்றொரு மனைவி ஏற்பட்டதாக ஒரு கட்டுரையில் சுஜாதா குறிப்பிட்டிருக்கார். "சேயோன் மேய மைவரை யுலகமும்" என தொல்காப்பியம் கூறும் சேயோன் தான் சுத்தமான தமிழ்க் கடவுள் போல. அதுவும் ஆதிகாலத்தில் சேவல்தான் முருகனின் கொடி. பின்னர் தான் மயில் வாகனமாகியிருக்கிறது.
தெய்வம் பற்றி தேடிக்கொண்டிருந்ததில் 'தெய்வம் ' எனும் சொல் எப்படி உருவானது என சில தகவல்களில் விக்கியில் கிடைத்தது.
'தெய்' என்ற உரையசைக் கிளவியிலிருந்து தான் தெய்வம் எனும் சொல் வந்திருக்கிறது. 'தெய்யனே' எனும் சிங்களச் சொல்லும் அங்கிருந்து வந்திருக்கலாம் .
அண்டவெளியில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒன்றோடொன்று உரசித் தேய்வதில் உயிரோட்ட ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தேய்தலில் பிறக்கும் ஆற்றலைத் தேய்வு என்றிருக்கின்றனர். பின்னர் அது தேய்வம், தெய்வம் என்றாகியிருக்கிறது(நன்றி விக்கிபீடியா).
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க" என திருவாசகத்தில் வருகிறது. இதில் தூரமாயிருப்பவன் என்று பொருள். ஐந்தாம் தலைமுறை மூத்த ஆணை சேயோன்(பாட்டனின் பாட்டன் ) என அழைக்கிறோம்.

Comments