Skip to main content

Life of Pi

கனடாவை சேர்ந்த எழுத்தாளர் Yaan Martel எழுதி Man Booker விருது பெற்ற புத்தகமே 'Life of Pi' . அதே பெயரிலேயே Ang Lee இயக்கத்தில்  திரைப்படமாகவும் வந்திருக்கிறது. அவரின்  Brokeback Mountain  என்ற படத்திற்காக அவருக்கு சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருது கிடைத்தது. சிறந்த இயக்கத்திற்கான விருது பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர்.

Life of Pi திரைப்படமும் பதினொரு ஒஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது . அதில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய தமிழ்ப் பாடலும் ஒன்று.


ஆரம்பத்திலேயே பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் பின்னணியில் ஒலிக்க விலங்குகளின் நடத்தையை அழகாக படமாக்கி இருக்கிறார்கள். 'கண்ணே கண்மணியே " என்ற தமிழ்ப்பாடல் நகரத்துக்கு வாழ்க்கையிலிருந்து எம்மை மெல்ல அந்நியப்படுத்தி இயக்குனரின் உலகை அறிமுகப்படுத்துகிறது. மனதுக்கு ஓர் இனிய தாலாட்டு.எழுத்துகளை காட்டுவதில் கூட அவ்வளவு கவனம் செலுத்தியிருக்கிறார்கள். விலங்குகளின் நடத்தையே எழுத்தின் வடிவையும்  தீர்மானிக்கிறது.

தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் பை (Piscine Molitor) தனது கதையை ஆரம்பத்திலிருந்து சொல்ல ஆரம்பிக்கிறான் . பாண்டிச்சேரியில் இருந்து ஆரம்பிக்கிறது கதை . 
அனைத்து மதங்கள் மீதும் ,கடவுள் மீதும் நம்பிக்கை கொண்டவன் பை .அவனுக்கு முதலாவதாக கிடைத்த அறிமுகம் கிருஷ்ணா. அதிலிருந்தே அவனது தேடல் ஆரம்பிக்கிறது. இரண்டாவதாக இயேசுவினுடைய அறிமுகமும் அவனுக்கு கிடைக்கிறது. எல்லா கடவுளையும் ஏற்றுக்கொள்ளும் அவனது மனப்பான்மைக்கு அவன் சொல்லும்  "Thank you Vishnu, for introducing me to Christ." போன்ற  சில வசனங்களை சொல்லலாம் .

தந்தை ஒரு மிருகக் காட்சி சாலை நடத்துகிறார். தாயார் ஒரு 
botanist. ஆனால் இவர்கள் பேசிக்கொள்ளும் தமிழ் தான் கொஞ்சம் உறுத்தல் . இவர்கள் கனடாவுக்கு புலம்பெயர முடிவு செய்து விலங்குகளை ஏற்றிக்கொண்டு கப்பலில் புறப்படுகிறார்கள் . பிலிப்பைன்ஸ் அருகே சென்றுகொண்டிருக்கும் போது கப்பல் புயலில் சிக்க பையும்,ஒரு ஓநாயும், வரிக்குதிரையும், ஒரு ஒருங்குட்டானும், ரிச்சர்ட் பார்கர் எனும் புலியும்  தப்புகின்றன . ஏனைய விலங்குகள் இறந்துவிட புலியும்  பையும்  மட்டுமே இறுதில் எஞ்சுகின்றனர் .பசுபிக்கடலின் நடுவே  தனியான ஒரு படகில் எப்படி அந்தப் புலியுடன் தன் நாட்களை கழிக்கிறான் என்பதே மிகுதிப்பகுதி .



இந்தக் கதையை சொல்லியிருக்கும் விதத்திலும்  திரைக்கதையை நகர்த்தும் விதத்திலும் தான் ஆங் லீயின் இயக்கம் தனித்து தெரிகிறது . இதில் இறுதிவரை புலியின் குணத்தை மாற்றாது யதார்த்தமாக அப்படியே கொண்டுசென்றதில் தான் அந்தத் திரைக்கதையின் நேர்த்தியும் வெற்றியும் தங்கியிருக்கிறது.


புலியிடமிருந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு , அதையும் காப்பாற்ற உணவளிப்பது என்பதில் அன்பின் தொடர்பாடல் வலுக்கிறது. விலங்குகளுக்கும் உணர்வு உண்டு , ஆன்மா உண்டு என சின்னவயதிலிருந்தே நம்புபவன். புலி அவனை பார்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அதன் கண்களை காட்டும் காட்சி ஒன்றே போதும், அவனது நம்பிக்கை நம் நம்பிக்கையாகி போகும் சந்தர்ப்பம் அது.



ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும்  ஷிராவந்தி சாய்நாத் அழகாய் தெரிகிறார் . வியர்வையோடு நடனமாடும் இடங்களில் அவ்வளவு அழகு. நம் தமிழ் சினிமாவில் பாலுமகேந்திரா காட்டிய அழகை Claudio Miranda வும் அழகாகவே காட்டியிருக்கிறார். சில காதல் காட்சிகளே வந்தாலும் ,  மிகவும் அழுத்தமானவை.


இதை ஒரு உயிருள்ள படைப்பாக வெளிக்கொண்டுவருவதற்கு அனைவரும் மிகவும் இரசித்து உழைத்திருக்கிறார்கள் . ஒளிப்பதிவாளர் 
Claudio Miranda ,Michel Danna வின் பின்னணி இசை, பையின் நடிப்பு  என்பவற்றை குறிப்பிட்டு சொல்லலாம் .

எவ்வளவு தான் அன்பு காட்டினாலும், பழக்கப்படுத்தினாலும் புலி காட்டை கண்டவுடன் பையை விட்டு காட்டை நோக்கி ஓடிவிடும். புலி தன்னை திரும்பிக் கூட பார்க்கவில்லை என பை உருகும் காட்சியில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.ஆனால் காட்டை கண்டவுடன் ஓடியது  புலியின் இயல்பு.அன்பு செலுத்தியது அவனின் இயல்பு. 


"புலி இல்லாவிட்டால் நான் என்றோ இறந்திருப்பேன். என்னுடைய பயம் தான் என்னை எப்போதும் விழிப்புடன் வைத்திருக்கிறது "

"Hunger can change everything you thought you knew yourself! " 

"All of life is an act of letting go but what hurts the most is not taking a moment to say goodbye. " 
என நிறைய வசனங்களை எடுத்துக்காட்டலாம். இந்தப் படத்தின் கதாப்பாத்திரங்களின் தன்மைக்கு வலுச்சேர்ப்பதில் வசனங்களின் பங்கும் முக்கியமானது.  

இறுதிவரை பிரிவுகளையே சந்தித்தும் , நம்பிக்கையை பற்றிப்பிடித்திருக்கும் ஓர் இளைஞன் பை.Life of pi திரைப்படம் மெல்ல நுழைக்க முயலும் தேடல் ஒரு நல்ல அனுபவம் . 

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ