தளத்தில் தொடர்ந்து ஆக்கங்கள் எழுதி வருவதால் வலைப்பதிவில் இப்போது பகிர்வதில்லை . மீண்டும் வலைப்பதிவில் ஆக்கம் எழுத ஆரம்பிக்கும் போது பழைய நினைவுகள் மீள்கிறது. சரி நேரடியாக விடயத்துக்கு வருவோம் .
இன்று(28/02) இந்தியாவின் தேசிய அறிவியல் நாள் . இந்த நாள் இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்க்கும் புகழைத்தேடி தந்த நாள் . இன்று தான் சேர் சி வி இராமன் அவர்கள் "ராமன் விளைவை" கண்டுபிடித்தார் .
அதன் நினைவாக தான் அறிவியல் என்பது அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டுமென்று, இந்த நாள் இந்திய தேசிய அறிவியல் நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது .
ஆனால் இதை எழுத்து வடிவில் மிகவும் அழகாக பாமரர்களிடமும் கொண்டு சேர்த்தவர் குரு சுஜாதா அவர்களே . தமிழர்களை அறிவியல் பால் ஈர்த்த பெருமை அவர்களையே சாரும் .
சுஜாதா அவர்கள் அறிவியல் என்றால் என்ன என்று அனைவருக்கும் விளங்கும் வகையில் தெளிவுபடுத்தியிருப்பார் . வாசித்ததை உங்களோடு பகிர்கிறேன் .
சுஜாதா அவர்கள் அறிவியல் என்றால் என்ன என்று அனைவருக்கும் விளங்கும் வகையில் தெளிவுபடுத்தியிருப்பார் . வாசித்ததை உங்களோடு பகிர்கிறேன் .
"அறிவியல் -சயன்ஸ் என்பது பரிசோதனைகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடியது . சில விஷயங்களை உன்னிப்பாக பார்த்து அவற்றை பற்றி ஒரு கோட்பாடு அமைப்பது .அந்தக்கோட்பாடு பொதுப்படுத்தப்பட்டு விதிகளாக மாறுவது . அந்த விதிகள் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சரி தானா என்று கண்டறிவது . எங்காவது அந்த விதி தவறினால் அதை தூர எறிந்துவிட்டு வேறு விதிகள் அமைப்பது . நியூட்டன ,கொபர்நிக்கஸ்,கலிலியோ ,கெப்ளர் போன்ற விஞ்ஞானிகள் பெயர்களை கேள்விப்பட்டிருப்பீர்கள் . அவர்கள் பழகியது இயற்பியல் ,வான சாஸ்திரம் என்று நாம் படிக்கிறோம் . இதெல்லாம் அறிவியல் "
அறிவியல் தேடலில் ஆர்வம் இருக்கும் அனைவருக்கும் அறிவியல் தின நல் வாழ்த்துகள் . !
பல அறிவியல் ஆக்கங்களை பெற இந்த தளத்தை தொடரலாம்.
பல அறிவியல் ஆக்கங்களை பெற இந்த தளத்தை தொடரலாம்.
Comments