Skip to main content

லூசிட் கனவுகள்(Lucid dreaming) - கனவில் கனவு

நீங்க யாரும் நிச்சயம் கனவு காணாம இருந்திருக்க மாட்டீர்கள்  . ஆனால்  அதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை எனலாம் . தேஜாவு போல . அதாவது சில நேரங்களில் சில இடங்கள் நிகழ்வுகள் ஏற்க்கனவே பார்த்தது போல இருக்கும் .ஆனால் இவை இரண்டும் அடிக்கடி அனைவருக்கும் நடப்பது . இதுவரை விடை காணாத புதிராய் இருப்பது கனவுகள் தான் . மருத்துவம் ,அறிவியல்,மனோதத்துவம்  என பல பக்கங்களில் இருந்தும் விளக்கங்கள் குவிகிறது .

இந்த வகையில் சில கனவுகள் நாம் காணும் போது அவை கனவு தான் என தெரியும் . ஆனால் சில கனவுகள் காணும் போது நிஜமாக நடப்பது போலவே இருக்கும்  . அந்த வகை கனவுகள் எளிதில் மறக்க முடியாதது . உங்களால் அனைத்தையும் உணர்ந்து விளக்கமாக பார்க்க முடியும் .

அது தான்  லூசிட் கனவுகள் . லூசிட் கனவுகளை நீங்கள் உணர்ந்து கனவு தான் காண்கிறீர்கள் என உணர்ந்து அனுபவிக்க முடியும் . இன்செப்ஷன் படம் பார்த்தவர்களுக்கு கிட்டத்தட்ட அதே போல இருப்பது போல தோன்றும் .

லூசிட் கனவுகளை எமக்கு ஏற்றது போல அமைத்துக்கொள்ளலாம் .விரும்பிய இடங்களுக்கு செல்லலாம் .இதன் முக்கியத்துவத்திட்க்காக ஒரு உதாரணம் சொல்கிறேன்.



 இந்த லூசிட் கனவுகள் பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டது என்பது உண்மை . நீல் போர் கண்ட கனவு அவருக்கு நோபெல் பரிசை பெற்றுக்கொடுத்தது .எமது கோள்கள் சூரியனை சுற்றுவது  போல அணுவை சுற்றி இலத்திரன்கள் காணப்படுவதை கனவிலேயே அவர் கண்டார் .

இந்த கனவு REM உறக்க நிலையிலேயே வரும் . அதாவது உறக்கத்தின் 5 நிலைகளில் 5 ஆவது நிலையில் .

இந்த லூசிட் கனவுகளின் பின்னணியை  அலசினால் கொஞ்சம் தெளிவு பிறக்கும் . இது புராதன காலம் தொட்டே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இனத்தவர்கள் பலரிடமும் நிலவிய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்தது . அமெரிக்க பழங்குடிகள் இந்த கனவுகளை அவர்கள் இறைவனை அடைய  ,தேவதைகள் ,ஆவிகளின் உலகத்துடனான வாசல் போல நினைத்திருந்தனர் .

Aborigines எனப்படும் அவுஸ்திரேலிய மூத்த பழங்குடிகள் உலகின் தோற்றத்தை ஒரு கனவாக தமது குறிப்புகள் ,கதைகளில் குறிப்புட்டுள்ளனர் . சிலர் தாம் காணும் கனவை குறியீடுகளாக வரைந்து வைத்துள்ளனர் .




இதிலிருந்து லூசிட் கனவுகள் புதியவை இல்லை என்பது தெரிகிறது ..அரிஸ்டாடில் இந்த கனவுகள் பற்றி எழுதியிருக்கிறார் ஆனால் சரியான பதம் இல்லை  . 

ஆனால் திபெத்திய புத்தர்கள் பலர் இந்த லூசிட் கனவுகள் போல சிலவை  பற்றி நீண்டகாலம் பயிற்சி,ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அது dream yogaa (யோகா ) .

உங்கள் நிலையை உணர்த்தி எப்போதும் விழிப்புடன் இருக்க மிகவும் உதவும் டிரீம் யோகா . எப்போதும் புத்த சமயத்தில் உள்ள நம்பிக்கை நிஜத்தை உணர்தல் .மாயையில் இருந்து விலகி இருத்தல் . லூசிட் கனவு காண்பவரால் அது கனவு உலகம் என அறிய முடியும் . கனவு காணும் போது அவர்களுக்கு  விருப்பமானது போல கனவை ,நிகழ்வுகளை  செலுத்தலாம் .

டச்சு மனோதத்துவவியலாளர்   Frederik van Eeden என்பவரே அதற்க்கான விளக்கங்களுடன் வந்தார் . சாதாரண கனவுகள் தொட்டு கனவில் 9 வகைகள் இருப்பதை கூறினார் .அவர் தனது லூசிட் கனவுகள் பற்றியும் குறித்துள்ளார் .ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பாலியல் உறவு சம்மந்தப்பட்ட கனவுகளே கூடுதலாக வந்துள்ளது . 

ஆனால் இது பிரசித்தி பெற்றது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மனோதத்துவவியலாளர்  Stephen Laberge
என்பவராலே .இவர் தான் கனவுகளை நாம் எமது படைப்புகள் ,கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என கூறியவர் .

Comments

Jana said…
Superb Post.

வித்தியாசமான தகவலாகவும், சுவாரகசியமாகவும் இருந்தது
நன்றிகள், பாராட்டுக்கள்.
கனவு குறித்த தகவல்களை படிப்பதில் எனக்கு அதிக விருப்பம்... தொடருங்கள்...
Jana said...
//Superb Post.

வித்தியாசமான தகவலாகவும், சுவாரகசியமாகவும் இருந்தது
நன்றிகள், பாராட்டுக்கள்//

மிக்க நன்றி ஜனா :-)
Philosophy Prabhakaran said...
//கனவு குறித்த தகவல்களை படிப்பதில் எனக்கு அதிக விருப்பம்... தொடருங்கள்..//

நன்றி ..நிச்சயம் தொடருவேன் :-)

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒர...

கங்குபாய் கத்தியவாடி

நாம் எதையெல்லாம் விரும்பிச் செய்கிறோமோ அதன் மீது மரியாதையும் ஒருவிதமான பிடிப்பும் நமக்கு இருக்கவேண்டும். அதில் காமம் மட்டும் விதிவிலக்கல்ல. காமம் தந்து , உடல் தந்து, தானும் மகிழ்ந்து இன்னோர் உயிரை மகிழ்விப்பவரும், காதல், அன்பு, உள்ளமெலாம் உருக்கி உடலாய்த் தந்து மகிழ்விப்பவரும், இரண்டையும் ஒன்றாய்த் தந்து மகிழ்விப்பவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆணாய் இருந்தாலும், பெண்ணாயிருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் மதிக்கப்படவேண்டியவர்கள். இந்த மதிப்பானது, உள்ளப் புரிதலினாலும், மனிதத்தினாலும், தகுந்த புத்தியினாலும், பெற்றுக்கொண்ட விஸ்தாரமான அறிவினாலும், நடத்தையினாலும், வார்த்தையினாலும் உள்ளுக்குள்ளே நிகழும் மாற்றத்தினாலும் எழவேண்டும். கங்குபாய் என்கிற இந்தப் படம், விலைமாதர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பெறுமதிக்கு ஏற்றபடி ஒவ்வொரு தரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைபார்க்கும் விலைமாதர்களும் இருக்கிறார்கள். பகுதியாய் விலைமாதராக இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதும் அப்போதும், விலைமாதர்கள் வெவ்வேறு தரத்தில் இருந்தா...