மனித அறிவின் அசுர பரிணாம வளர்ச்சியில் விஞ்ஞானம் பல புராண கட்டுக்கதைகளையும் பல நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து அனைத்திற்கும் காரணம் தேடும் பயணத்தில் நேரம் எனும் பாதையில் செல்கிறது . மனோதத்துவம் பல வகைகளில் விஞ்ஞானத்தோடு ,விஞ்ஞானத்தில் ஒரு பெரும் பகுதியாக செயல்ப்படுகிறது என்றால் மிகையாகாது .
சீனாவில் சீ எனவும் இந்தியாவில் பிராணா எனவும் மேற்கில் soul எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இறை நம்பிக்கையில் உள்ளவர்கள். ஆனால் அதற்க்கு எந்தவித விஞ்ஞான ஆதாரமோ இதுவரை கிடையாது . ஆனால் இப்போது சமயங்கள் நிறுவனங்கள் வேறு விதமாக கதையை மாற்றுகின்றன . அதாவது பிழைப்பு தொடர்ந்து நடக்க மனோதத்துவத்திற்கு மாறி விட்டன .உள்ளிருந்து இயக்கும் மனசாட்சி இறைவன் என்கிறார்கள் .
உயிர் ,மனது ,மரணம்,பயம் இது மூன்றும் இறை நம்பிக்கையை தூண்டுவன . ஆனால் உயிர் ,மனது,மனசாட்சி போன்றன இருக்கின்றனவா ? இது தான் விடயம் .......
முன்னர் ஒரு தனிமனிதனுக்கு ஏற்ப்படும் மனோதத்துவ பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்ச்சிகள் வேறு விதமாகவே நடந்தது . அவர்களை தனிமையில் வைப்பது ,இருட்டில் வைத்திருப்பது போன்றன . ஆனால் சிக்மன் பிரெயுட்(freud ) வேறு விதமாக முயற்ச்சித்தார் .அதாவது நோயாளிகளின் பிரச்சனைகளை கேட்டறிவது . ஒருவருடன் கதைத்து அவர்களுடைய துன்பங்களை கேட்பதன் மூலம் மனநோய் பிரச்சனைகளில் இருந்து மீட்டார் .
மனித மனதை ஈகோ, சூப்பர் ஈகோ , இட் என்று மூன்று வகையாக பிரித்தார் ..
இதில் இட் சிறு வயதிலேயே இருக்கும் . ID (Internal Drive ) இட் தான் சிறு வயதிலேயே மனதில் உருவாகும் முதல் வளர்ச்சி .இது கட்டுப்படுத்த முடியாதது . இது மிகவும் ஆழ மனதின் செயல்ப்பாடு . இதனுள் ஒரு பிரிவு Thanatos (தனடோஸ்) என அழைக்கப்படும். "ஆபத்தை தூண்டக்கூடிய செயல்ப்பாடுகளின் பால் ஈர்க்கப்படல் " மற்றையது Libido (லிபிடோ) என்று அழைக்கப்படும் "பாலியல் ரீதியான காம ,காதல் நிலைக்கு தூண்டப்படல்" . இவை இரண்டும் இட் இல் பகுதிகள் .
பின்னர் இரண்டாவதாக குழந்தைப்பருவ வளர்ச்சியில்(இரண்டு மூன்று வயதுகளில் ) சூப்பர் ஈகோ பரிணமிக்கிறது . உதாரணமாக அம்மா ஒரு செயலை செய்ய வேண்டாம் என சொல்லும் போது இது பரிணமிக்கிறது . அதாவது மேலே கூறிய இட் இல் உள்ள தனடோஸ்(ஆபத்தை தூண்டக்கூடிய செயல்ப்பாடுகளின் பால் ஈர்க்கப்படல்,கூடாத செயல்கள் ) இந்த சூப்பர் ஈகோ வை தூண்டுகிறது .
சூப்பர் ஈகோ வின் பகுதி இட் இல் உள்ள அந்த செயல்ப்பாட்டை கட்டுப்படுத்துகிறது . இறுதி வளர்ச்சியான ஈகோ முழுமையாக ஒரு மனிதனை எது சரி எது பிழை என தன்னிச்சையான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது .சில விடயங்களை பிழை என நேரேயே சுட்டிக்காட்டும் . மனசாட்சி என்று சொல்லலாம் .
இதில் சமயத்தை அழகாக தொடர்ப்பு படுத்துகிறார் . இந்த சூப்பர் ஈகோ வில் ஒரு பகுதியாக சமயம் உருவானது . இட் இல் உள்ள காம மற்றும் தவறான விடயங்களை(லிபிடோ மற்றும் தனடோஸ்) கட்டுபபடுத்த தொழில்ப்படுகிறது .எத்தனையோ குரு மார்களால்,யோகிகளால் காமத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது உண்மை . அது தான் இறைவன் என மனது நினைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது மனித மனங்களை .
அதுவும் இந்த சூப்பர் ஈகோ வில் இறைவனின் ,சமயத்தின் தொழில்ப்பாடு மனித அன்பு ,கருணை வளரும் போது அற்றுப்போகும் . ஒரு காலத்தில் மனித அன்பு ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் .சமய ,இறைவன் கட்டுப்பாடுகள் உறுதியானதாக இல்லை . என ப்ரோட் எதிர்வு கூறினார் .
உதாரணமாக நமது சாமி மார் இறைவனை வணங்குபவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தான் தெரியுமே .
ஆதிகாலத்தில் மனிதனிடம் இட் மட்டுமே காணப்பட்டது குறிப்பிடத்தக்கது .
மனித ஆன்மா 21 கிராம் நிறை உடையது என ஒரு ஆய்வு மர்மமாக உள்ளது .
தொடரும்.... .
Comments
//பயங்கரமா யோசிச்சு எழுதியிருக்கீங்க... முடியல... ஏன் திரட்டிகளில் இணைக்கவில்லை.///.
நன்றி பிரபாகரன் ..காலேல எழுந்து இணைக்கலாம் என்று தான் ..இணைத்து விட்டேன் :-)
//இது போன்ற தகவல்கள் நான் விரும்பிப்படிப்பவை.. மிக்க நன்றி//
மிக்க நன்றி பயணமும் எண்ணங்களும் ..தொடர்ந்து படியுங்கள் :-)
நன்றி