கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது . அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில் ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு இந்த சிறகுகள் அமைப்பையும் மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் . சிறகுகள் அமைப்பின்
Comments
ஒரு வாழ்வு முறைகளில் தலைமுறைகள் முன்னோக்கி செல்லும் ஒரு மேம்பட்ட குடும்பத்திலிருந்து வளர்ந்த பொண்ணை காதலிக்கிறார்.. எல்லா இடங்களிலும் ரியாலிட்டியை விட்டுக்கொடுக்காத இயக்குனர் இங்கு மட்டும் கொஞ்சம் சினிமாத்தனம் காட்டிவிட்டார்.. இதே காரணங்களுக்காக காதலிக்காமல் இருக்கும் நண்பர்கள் நிறைய எனக்கு தெரியும்.நானும் அத்தகையோனே.. உணக்கெதுக்குடா தேவ இல்லாத வேலைன்னு திட்டிக்கொண்டே படம் பார்த்து முடித்தேன்..