Skip to main content

கதை நேரம் : பாலுமகேந்திரா

மேசை மீது  ஒரு paperweight , அதன் கீழே பறக்கும் ஒரு சில கடதாசிகள், பேனை,புல்லாங்குழல் இசை என அனைத்தும் இன்னமும் நினைவில் இருந்தால் நீங்களும் பாலுமகேந்திராவின் 'கதை நேரம் ' தொடருக்கு இரசிகர் தான். அந்தளவுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அந்தத் தொடர். ஒவ்வொரு கதாப்பத்திரங்களுக்கும் செயற்கைத் தன்மை அற்ற உணர்வை கொடுத்திருப்பார் .

நான் பார்த்த போது என் வயது நுண்ணிய உணர்வுகளை எல்லாம் உற்றுநோக்கும் அளவில் இருக்கவில்லை . இயற்கையாகவே ,கதையின் போக்கிலேயே பாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலித்ததால் இன்று வரை அந்தக் கதாப்பாத்திரங்கள் கூட நினைவில் இருந்து அகலவில்லை. எத்தனை தடவைகள் பார்த்தாலும் சலிக்காத திரைக்கதை,இயக்கம். அது பாலுமகேந்திராவுக்கே உரிய  வித்தை. இப்போது அந்தத் தொடர்களை  மீண்டும் பார்க்கும் போது Lighting இல் இருந்து எத்தனை விடயங்களை இந்த மனுஷன் கவனித்திருக்கிறார் என வியப்பாக இருக்கிறது. அவர் ஒரு ஜீனியஸ். அவர் தொடக்கி வைத்த புதிய அத்தியாயத்தை யாரும் பின்பற்றவில்லை என்பது தான் கவலைக்குரியது.  

மனதினில் கொஞ்சம் அமைதி நிலவும் வேளையில் 'கதை நேரம் 'தொடரில் ஒன்றை தேடிப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறதென்றால்,அது தான் அதன் வெற்றி.




மொத்தமாக 52 சிறுகதைகளை படமாக்கியிருந்தார் இயக்குனர் பாலுமகேந்திரா. அதில் சுஜாதாவினுடைய சிறுகதைகள் 10 . ஜெயந்தன் ,திலகவதி ,மாலன் ,சுந்தர் ராமசாமி,வாஸந்தி போன்றவர்கள் எழுதிய சிறுகதைகளை மிகவும் சிறப்பாக படமாக்கியிருந்தார். ஒவ்வொரு சிறுகதைகளையும் மிகவும் அழகாக திரையில் கொண்டுவந்திருப்பார் . சிறுகதைகள் தரும் அதே உணர்வை திரையில் வடிப்பது என்பது கடினமான காரியம். சிறுகதைகளை எப்படிப் படமாக்குவது என அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.


ஒவ்வொரு கதையையும் தனித் தனியே எடுத்து ஆராயலாம் .அவ்வளவு ஆழமான கருவைக் கொண்ட கதைகள் . இயன்றவரை இரசித்த சிலவற்றை தனித் தனியே எழுதலாம் என்றிருக்கிறேன்.



Comments

முழுதாய் ரசிக்க கிடைக்காவிடினும் ரசித்திருக்கிறேன்...

இப்போது ராஜேஸ்குமார் நாவல்களை வைத்து கொல்லும் கலைஞரை விட எவ்வளவோ மேல்

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பாலா said…
நான் முழுதாய் பார்த்து ரசித்த ஒரு தொடர்

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...