Skip to main content

Posts

கண்ணில் தாகம் தீருமோ !

நீண்ட நாட்களுக்கு முதல் எண்ணங்களில் மெல்லிய வண்ணங்களை   தீட்டிய ஒரு பாடல். இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்க்கும் போதும் ஏதோ ஒன்றை இரசித்துக்கொண்டே இருக்க முடிகிறது.  பின்னணி இசை , காட்சியமைப்பு ,வரிகளில் விரகதாபமும் மௌனமும் கலந்திருக்கிறது. உணர்வுகளை சரியாகக் கோர்த்து உருவாக்கப்படும் படைப்புகள் மனதை கொஞ்சம் கனமாக்கிப் பின்  காற்றில் ஆடும் ஒரு இறகு போல் ஆக்கிவிட்டே செல்லும். அந்த விதி இந்தப் பாடலுக்கு பொருந்தும். பாடல் வரிகளில் இன்னொரு தனித்துவம் படர்ந்திருக்கிறது. அந்த வரிகளுக்குத்  தன் இனிய  குரலால் அழகு சேர்த்தது பாடகி சௌமியா.  அந்தக் குரலில் இருக்கும்  ஏக்கம் , வேதனை சில வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. கார்த்திக் ராஜாவின் பாடகித் தேர்வு சிறப்பு. காதலனை /கணவனை நண்பனாக நினைத்துப் பாடுவது போன்ற வரிகள்.இலக்கியங்களில் தோழி என்பது போல , இந்தப் பாடலில் நண்பனாக நினைத்துப் பாடுவது ஒரு தனி அழகு. //  கோபங்கள் பேசும்போது வேதனை கூடும் ப்ரேமைகள் பேசும் போது மோகம் கூடும் // வடமொழிச் சொற்களும் தமிழும் கலந்து வரும் வரிகள்.  வரிகளின் ஆழ...

Life of Pi

கனடாவை சேர்ந்த எழுத்தாளர் Yaan Martel எழுதி Man Booker விருது பெற்ற புத்தகமே 'Life of Pi' . அதே பெயரிலேயே  Ang Lee  இயக்கத்தில்  திரைப்படமாகவும் வந்திருக்கிறது. அவரின்   Brokeback Mountain  என்ற படத்திற்காக அவருக்கு சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருது கிடைத்தது. சிறந்த இயக்கத்திற்கான விருது பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர். Life of Pi திரைப்படமும் பதினொரு ஒஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது . அதில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய தமிழ்ப் பாடலும் ஒன்று. ஆரம்பத்திலேயே பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் பின்னணியில் ஒலிக்க விலங்குகளின் நடத்தையை அழகாக படமாக்கி இருக்கிறார்கள். 'கண்ணே கண்மணியே " என்ற தமிழ்ப்பாடல் நகரத்துக்கு வாழ்க்கையிலிருந்து எம்மை மெல்ல அந்நியப்படுத்தி இயக்குனரின் உலகை அறிமுகப்படுத்துகிறது. மனதுக்கு ஓர் இனிய தாலாட்டு.எழுத்துகளை காட்டுவதில் கூட அவ்வளவு கவனம் செலுத்தியிருக்கிறார்கள். விலங்குகளின் நடத்தையே எழுத்தின் வடிவையும்  தீர்மானிக்கிறது. தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் பை ( Piscine Molitor) தனது கதையை ஆரம்பத்திலிருந்து சொல்ல ஆரம்பிக்க...

பூ பூக்கும் மாசம் தை மாசம்..

நம்மை முழுதாய் ஆட்கொண்டு உணர்வுபூர்வமாக  புதியதொரு நிலைக்கு  அழைத்துச் செல்லும் பாடல்கள் என்று , ராஜா இசையில் அமைந்த ஏராளமான பாடல்களை குறிப்பிடலாம். ஆனால் பருவ நிலைகள் , காலநிலைகள் , இயற்கை  என  நம்மை அழைத்துச் சென்றுவிடும் பாடல்கள் தரும் சுகம் அலாதியானது. தென்றல் வந்து தீண்டும் போது பாடலை எப்படி வெறும் காதல் உணர்வு தூண்டும் பாடல் இது என கடந்து  போக முடியாதோ  அது போன்றதொரு பாடலே பூ பூக்கும் மாசம் தை மாசம். வருஷம் 16 படத்தில் அமைந்த பாடலை காலைப் பனி படர்ந்திருந்த வேளை கேட்பது தனி சுகம். தையை வரவேற்க்க தயாராக இருக்கும் இந்நேரத்தில் மனதை சிதறடித்து கரைத்துக் கொண்டு செல்லும் இதமான கீரவாணி இராகத்தில் அமைந்த பாடல் இது . பனி படர்ந்த சூழலை இசையே உருவாக்கிவிட அதை ஊடறுக்கும் தென்றல் போல் நுழைகிறது சுசிலாவின் தேன் குரல். கிராமிய சூழல் , மகிழ்ச்சி கலந்த சுதந்திரமான  காதல் நிலை, புதிய  பருவநிலையை  மகிழ்ச்சியுடன் வரவேற்பது என அனைத்தையும் ஒன்று சேர்த்து தரும் பாடல். அதற்கேற்றபடி  காட்சியமைப்பையும் மாற்றி மாற்றி அமைத்துள்ளது இயக்குனர் பாசில...

பகிர்வுகள் - சுஜாதா - கலைச்சொற்கள் 1

தமிழ்மொழியை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்வது பற்றி எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பகிர்ந்துகொண்ட   ஆக்கபூர்வாமான செயற்திட்டங்கள் பல உண்டு. அவற்றில் அவர்  கலைச்சொற்களின் முக்கியத்துவம் பற்றி பகிர்ந்த சில விடயங்களை பகிர்கிறேன்.. 'களஞ்சியம்' இதழில் முனைவர் ப.அர நக்கீரன் கட்டுரைகள் போன்றவை நமக்கு அதிகம் தேவை. மாட்டு வண்டியின் பல உறுப்புகளை குறிப்பிடும் கலைச் சொற்களை ஆராய்ந்திருக்கிறார்.இந்தச் சொற்கள் பண்டிதர்கள் யாரும் உட்காராமல் இயல்பாக, தேவை ஏற்பட்டு அமைந்தவை. நுகத்தடி , பூட்டுத்துளை ,சுள்ளாணி ,முகமுட்டு ,பார்/பார்பட்டை கோணாவட்டம் ,மையக்கட்டை ,சக்கரம்,உழல்வாய் (குடத்தில் உள்ள உராய்வினால் தேய்ந்து விரிவடையாமல் இருக்கப் பயன்படும் இரும்பினால் ஆன குழாய் ) ,ஆரக்கால்,வட்டை ,இருசு,கடையாணி,கூசு,தொட்டிக்கூண்டு,சவாரிக் கூண்டு. எத்தனை வார்த்தைகள் ! நாம் இன்னும் மாட்டுவண்டி யுகத்திலே இருக்க விரும்புகிறாரா சுஜாதா ,என்று கடிதம் எழுத உடனே சில பேனாக்கள் திறக்கப்படும் சப்தம் கேட்கிறது. இந்த வார்த்தைகள் அனைத்தும் சக்கரங்கள் உள்ள Mechanical Engineering சாதனத்துக்கும் பயன்படுத்தலாம். ஆங்கிலக் கலைச்ச...

இசையமைப்பாளர் ,பாடகர் ரமேஷ் விநாயகம்

தமிழ் இயக்குனர்களால் சரியாக இனங்காணப்படாத ,பயன்படுத்தப்படாத  மிகவும் திறமையான இசையமைப்பாளர்கள் வரிசையில்  ரமேஷ் விநாயகத்துக்கும் ஒரு முக்கிய இடம் கொடுக்கலாம் .  இசையமைப்பாளரும் பாடகருமான  ரமேஷ் விநாயகம் பற்றிய அறிமுகம் பெரும்பாலானவர்களுக்கு  நளதமயந்தி , அழகிய தீயே திரைப்படங்களுக்கு பின்னர் கிடைத்திருக்கும். அதற்கு முன்னரே வசந்தின் "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே " படத்தில் ஒரேயொரு பாடலுக்கு மட்டுமே இசையமைத்து இருக்கிறார். அவர் முழுமையாக இசையமைத்த முதல் திரைப்படம் யுனிவேர்சிட்டி. அவர் பாடி  இசையமைத்த பாடல்களில் சில எப்போது கேட்டாலும்  சுகமான இசை அனுபவத்தை தந்துவிட்டே செல்லும்.   "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே"   திரைப்படத்தில் ரமேஷ் விநாயகம் இசையமைத்து பாடிய   தொட்டு தொட்டு செல்லும் பாடல் அதிகமானோரைக் கவர்ந்தது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அவர் கொடுத்த மெல்லிசைகளை கேட்க்கும் போது , அதில்  இரண்டு எப்போதுமே தென்றலில் ஈரம் கலந்து  மனதை நனைத்துவிட்டே  செல்லும் ....

நீ தானே என் பொன்வசந்தம்

உறவுகள் ,உணர்வுகள் எனும் இரண்டு விடயங்களோடு உளவியலையும் சேர்த்து விட்டால் ஏராளமான படைப்புகள் கைகளில் கிடைக்கும் . அதைத் திறம்படக்  கோர்த்து ஒரு படைப்பாக தருவதில் கைதேர்ந்தவர்கள் என இயக்குனர்  பாலுமகேந்திரா, மறைந்த ஜீவா, கௌதம் மேனன் , மணிரத்னத்தை குறிப்பிட்டு சொல்லலாம் . இந்த தனித்துவத்துக்கு காரணம்  பெண்கள்  வெறும் காட்சிப்பொருள்கள் எனும் சித்தாந்தத்தை மாற்றியது தான். உறவுகளும் உணர்வுகளும் மிகவும் மென்மையானவை என்பதனால் தானோ என்னவோ அவர்களின் காட்சியமைப்புகளும் மெதுவாகவே மனதை ஆட்கொண்டு மென்மையாக்கிவிடும். ஆனால்  இந்த மென்மை எனும் விடயம் தமிழ் சினிமாவுக்கும் அதன் பெரும்பாலான இரசிகர்களுக்கும்  இன்னமும் பழக்கப்படாத ஒன்று. காதலுக்கு பிரச்சனை தருவது புறக்காரணிகளே எனும் உளவியலுக்குள்ளும் மிக ஆழமாக உந்தப்பட்டு இருப்பவர்கள். வழமையாக பெண்களை வெறும் அசையாத பொருளாக மையத்தில் வைத்துக்கொண்டு , ஆணின் மனோநிலையில் இருந்துகொண்டே சுழலும்  காதலை உடைத்து பெண்ணின் மனநிலையையும் ஆழமாக தொட்டவர் கவுதம் எனலாம். இதையே தான் நீ தானே என் பொன் வசந்தத்திலும் செய்திருக்கிற...

பாஷோ..

பாஷோ ஹைக்கூவின் கம்பர் என்று சுஜாதா சொல்லுவார். அனைத்து  உணர்வுகளையும்  தன் பக்கம் குவிக்கும் திறன் கொண்ட ஹைக்கூ கவிதைகள் அவருடையது. ஒரு வித அமைதியை தந்துவிட்டுப் போகும். பாஷோவின் புகழ்பெற்ற ஹைக்கூ கவிதைகள் இவை : *** விருந்தினர் கூட மறந்து விட்ட மலையடி கிராமம் *** பழைய கிணறு தவளை குதிக்கையில் தண்ணீரில் சப்தம் *** நிசப்தம் கற்களில் ஊறிவிட பூச்சிகளின் சப்தம் *** கோடைப் புல்வெளி அந்த மாவீரர்களின் கனவுப் பாதைகள் *** இலையுதிர் காலத்தில்  இந்தப் பாதையில் யாரும் செல்வதில்லை என்னைத் தவிர   ஒரு பொருளை மேலாகப் பார்த்தால் போதாது .கவித்துவத்துக்கு ஆழமாக அந்தப் பொருளின் உள்ளே நோக்க வேண்டும் . வருணனை மட்டும் ஒரு காட்சியின் உள் அர்த்தத்தை பிடிக்க முடியாது என்பது பாஷோவின் கூற்று. அவற்றை அவரின் ஹைக்கூக்களிலேயே கவனிக்கலாம். எழுதும் போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது. எண்ணங்களை கலைய விடாமல் நேரடியாகச் சொல்" என்றார் . எஸ் ராமகிரிஷ்ணன் அவர்களின்  " கவிதை கேட்ட நரி " என்ற இந்தப் பகிர்வையும் படித்துப...