Skip to main content

கண்ணில் தாகம் தீருமோ !



நீண்ட நாட்களுக்கு முதல் எண்ணங்களில் மெல்லிய வண்ணங்களை   தீட்டிய ஒரு பாடல். இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்க்கும் போதும் ஏதோ ஒன்றை இரசித்துக்கொண்டே இருக்க முடிகிறது.

 பின்னணி இசை , காட்சியமைப்பு ,வரிகளில் விரகதாபமும் மௌனமும் கலந்திருக்கிறது. உணர்வுகளை சரியாகக் கோர்த்து உருவாக்கப்படும் படைப்புகள் மனதை கொஞ்சம் கனமாக்கிப் பின்  காற்றில் ஆடும் ஒரு இறகு போல் ஆக்கிவிட்டே செல்லும். அந்த விதி இந்தப் பாடலுக்கு பொருந்தும்.

பாடல் வரிகளில் இன்னொரு தனித்துவம் படர்ந்திருக்கிறது. அந்த வரிகளுக்குத்  தன் இனிய  குரலால் அழகு சேர்த்தது பாடகி சௌமியா.  அந்தக் குரலில் இருக்கும்  ஏக்கம் , வேதனை சில வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. கார்த்திக் ராஜாவின் பாடகித் தேர்வு சிறப்பு.

காதலனை /கணவனை நண்பனாக நினைத்துப் பாடுவது போன்ற வரிகள்.இலக்கியங்களில் தோழி என்பது போல , இந்தப் பாடலில் நண்பனாக நினைத்துப் பாடுவது ஒரு தனி அழகு.

// கோபங்கள் பேசும்போது வேதனை கூடும் ப்ரேமைகள் பேசும் போது மோகம் கூடும் //
வடமொழிச் சொற்களும் தமிழும் கலந்து வரும் வரிகள்.  வரிகளின் ஆழமும் அதை இணைத்துக்கொண்டே பயணிக்கின்றது. சொற்களின் தேர்வுகள் ,உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துதல் என அடர்த்தியான வரிகள்.

//மாமழை நேரங்கள் ஈரமாய் என்னை சேர்பவன் //
காட்சியமைப்போடு பொருந்திய வரிகள் . காதலுக்கான ஏக்கத்தை வெளிப்படுத்தும் வரிகள்.

//பூவின் அசைவினிலே 
ஏதோ ஒரு படபடப்பு //


மிகவும் பிடித்த வரிகள் . காதலி தன் மனநிலையை , உணர்வில் கலந்திருக்கும் ஒரு படபடப்பை வெளிக்கொண்டுவரும் வரிகள். வரிகளில் ஒரு புதுமை.

காட்சியமைப்பே ஒரு கவிதை போல் உணர்வுகளை வடித்திருக்கிறது. வெளியில் மழை , ஜன்னலில்  வழியும் நீர்த்துளிகள் என அனைத்தும் உள்ளே உருவாகும் உணர்வுகளை கரைத்துக்கொண்டு போகிறது.

கார்த்திக் ராஜா எனும் ஓர் அற்புதமான இசையமைப்பாளர் இசையை எங்காவது இருந்துவிட்டு ஒரு சில படங்களில் தான் கேட்க்க முடிகிறது. இருந்தாலும் மனதில் என்றும் சுகமாய் அமர்ந்துகொள்பவை  அந்த இராகங்கள். அது போல் தான் இந்தப் பாடலும் அமைந்திருக்கிறது.



முழுமையான பாடல்

Comments

arasan said…
உங்கள் தளத்தைப் பற்றி சிறு விளக்கம் ...
காண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_12.html
இன்றைய வலைச்சரம் பார்த்து உங்கள் தளம்
வந்தேன் ..
மிகவும் அருமையான எழுத்துக்கள் உங்களுடையது...
இனி தொடரும் வரவு...'

Popular posts from this blog

குறுந்தொகைக் காதல்!

ஒரு மழைநாளில் குறுந்தொகைப் பாடலை வாசிப்பதுபோல சுகானுபவம் கிடையாது. அதிலும் ஒரு ஈரமான குறுந்தொகைப் பாட்டு அமைந்துவிடுவது வரம். இந்தப் பாடலைப் படிக்கும்போதே,  பிச்சியின் வாசத்தை ஈரக்காற்று சுமந்துவருகிறதென்றால், இதை எழுதியவருக்கும் தமிழுக்கும் வெற்றி என்று கொள்ளுங்கள். மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை  இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து  பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன  நறுந்தண் ணியளே நன்மா மேனி  மழைக்காலத்துல மலருற பிச்சியின் நீர் ஒழுகுகிற மொட்டுகள் எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு பனங்குடைல மூடி வைச்சுட்டு, அதை ஒரு அடைமழை பெய்கிற விடியற்காலைல திறந்துவிட்டதுபோல நன்மணமும் குளிர்ச்சியும் உடைய மேனி கொண்டவள் அவள். அவளை எப்பிடி நான் பிரிஞ்சிருப்பேன் . அவளைப் பிரிந்தா ல் என்னால் உயிர் வாழமுடியாது. 'சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்' என்கிற வைரமுத்து வரிகள்போல கவலைகொள்கிறான் தலைவன். ஆனால் இதிலே வாசம்தான் அவனை வாட்டுகிறது. இதில் 'நறுந்தண்ணியள்‬' என்பது ஈர்ப்புள்ள சொல். காதலனின் மென்மையான அன...

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிட...

வைரமுத்து : தேடல் உதிர்த்த வரிகள்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் இன்று. கவிஞனுக்குக் கவிதை எழுதி வாழ்த்துவதா !  நினைச்சுப் பார்க்க  முடியவில்லை .அதனால் இந்தப் பதிவு.  வரிகளை / இசையோடு சேர்ந்துகொள்ளும் தமிழ்ச் சொற்களின்  அழகை   இரசிக்கும்  பெரும்பாலானோர்களிடம் போய் எந்த வரிகள் அதிகம் பிடிக்கும் எனக் கேட்டால், உடனே ' நறுமுகையே நறுமுகையே' என்று பதில் வரும். விதிவிலக்காக யாராவது இருந்தால் மன்னிக்க :) . அந்தளவுக்கு இலக்கியப் பாடல் வரிகளையும் சினிமாப் பாடல்களில் தைரியமாகப் புகுத்தி இரசிக்க  வைத்தவர்.  'தீண்டாய் மெய் தீண்டாய்' பாடல் தொடங்கி  'நறும்பூக்கள் தேடும் திருத் தும்பியே' வரை சில பாடல்களை சங்கத் தமிழ் கலந்து எழுதினார். காதலன் படத்தில் சில நிமிடங்கள் வரும் பாடலில் குற்றாலக் குறவஞ்சியையும், தீண்டாய் மெய் தீண்டாய் பாடலின் ஆரம்பத்தில்  குறுந்தொகையையும் அப்படியே பயன்படுத்தியிருப்பார். வரவிருக்கும்  கோச்சடையானில் கூட  இலக்கியத் தமிழில்  பாடல் எழுதுவதாகப் பகிர்ந்திருந்தார். இலக்கியத்தையும் அவர் பயன்படுத்திய உவமைகளையும் விட்டுவிட்டு கொஞ்சம் விஞ்...