மனித அறிவின் அசுர பரிணாம வளர்ச்சியில் விஞ்ஞானம் பல புராண கட்டுக்கதைகளையும் பல நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து அனைத்திற்கும் காரணம் தேடும் பயணத்தில் நேரம் எனும் பாதையில் செல்கிறது . மனோதத்துவம் பல வகைகளில் விஞ்ஞானத்தோடு ,விஞ்ஞானத்தில் ஒரு பெரும் பகுதியாக செயல்ப்படுகிறது என்றால் மிகையாகாது . சீனாவில் சீ எனவும் இந்தியாவில் பிராணா எனவும் மேற்கில் soul எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் இறை நம்பிக்கையில் உள்ளவர்கள். ஆனால் அதற்க்கு எந்தவித விஞ்ஞான ஆதாரமோ இதுவரை கிடையாது . ஆனால் இப்போது சமயங்கள் நிறுவனங்கள் வேறு விதமாக கதையை மாற்றுகின்றன . அதாவது பிழைப்பு தொடர்ந்து நடக்க மனோதத்துவத்திற்கு மாறி விட்டன .உள்ளிருந்து இயக்கும் மனசாட்சி இறைவன் என்கிறார்கள் . உயிர் ,மனது ,மரணம்,பயம் இது மூன்றும் இறை நம்பிக்கையை தூண்டுவன . ஆனால் உயிர் ,மனது,மனசாட்சி போன்றன இருக்கின்றனவா ? இது தான் விடயம் ....... முன்னர் ஒரு தனிமனிதனுக்கு ஏற்ப்படும் மனோதத்துவ பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்ச்சிகள் வேறு விதமாகவே நடந்தது . அவர்களை தனிமையில் வைப்பது ,இருட்டில் வைத்திருப்பது போன்றன . ஆனால் சிக்மன்
Comments