சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை' என்கிற நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சினிமாவிலும், நிஜத்திலும் நல்ல உரையாடல்கள் என்பது அரிது. மணிரத்னம் படங்களில் காதலர்கள்கூட புத்திசாலித்தனமாக பேசிக்கொள்வார்கள். சுருக்கமாகப் பேசினால் 'என்ன மணிரத்னம் படம் மாதிரி பேசுற. ஒன்னுமே புரியல' ம்பாங்க. இப்போது ஒன்னுமே புரியல என்பது 'முயற்சிப்பது' என்பதைத் தாண்டி கேலியாக மாறிவிட்டது.
'Concise dialogues' னு சொல்லலாம். இதை எழுதுறதுல மணிரத்னமும் சுஜாதாவும் வல்லவர்கள். இலத்தீன் வார்த்தையான 'concisus' இலிருந்து உருவானது. ரியாலிட்டிக்கு கொஞ்சம் ஒத்துவராதது போலத் தெரிந்தாலும், அப்படிப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். வார்த்தை விரயமின்றி ஒருசில வார்த்தைகளிலேயே நிறையத் தகவல்களை உள்ளடக்கி சொல்லவருகிற விஷயத்தைச் சொல்லுவது முக்கியம். தட்டையாக இல்லாமல் அடுத்தவருக்குக் கொஞ்சம் மூளையும் மேலதிகமாக வேலை செய்யும். ஒரு புதிர் மாதிரியும் இருக்கலாம். அதை உடைப்பது சுவாரசியம். முரண்பாட்டை உரையாடல்களில் நேர்த்தியாக வெளிப்படுத்தும்போது ஒரு வாசகரைக் கொட்டாவி விடாமல் வைத்திருக்கலாம். அதிர்ச்சிக்கு உள்ளாக்குதல் அடிக்கடி நிகழும்.
'உங்களுக்கு 'ஸ்பைஸ் கேர்ள்ஸ்' பிடிக்குமா?'
'ஏன்!'
'சும்மாதான் நீங்க என்ன டைப்புனு தெரிஞ்சுக்க'
'இல்ல.. நித்யஸ்ரீ'
'கொரியா ஏறக்குறைய தமிழ்நாடு சைஸ் , மக்கள் தொகையும் ஏறத்தாழ நாலு கோடி அறுபத்தஞ்சு லட்சம். எழுதப் படிக்கத் தெரிஞ்சவங்க 98 பர்சன்ட்! தமிழ்நாடு மாதிரித்தான் விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தவங்க. திடீர்னு கப்பல், மோட்டார் கார், டெக்ஸ்டைல், எலெக்ட்ரோனிக்ஸ்னு தாவினாங்க. ஆயிரம் மடங்கு ஏற்றுமதி அதிகப்படுத்தினாங்க.'
'எக்ஸ்கியூஸ் மீ ... எதுக்காக இதெல்லாம் என்கிட்ட சொல்றீங்க'
'சும்மா இம்பிரெஸ் பண்ணலாம்னுட்டு'
'நான் இம்பிரஸ் ஆகல... இந்தப் புள்ளி விபரம்லாம் மனோரம்மா இயர்புக்ல கிடைக்கும்.'
'வார்றீங்களே.. நித்யஸ்ரீ குரல்ல ஒரு அழுத்தம், அதட்டல் இருக்கும். எனக்கும் பிடிக்கும்.
இருவருக்கும் காப்பி எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் ஆவலுடன் உட்கார்ந்தான்.
*****
திரைப்படத்தில் இதன் பங்கு முக்கியமானது. நிறைய உதாரணங்களைக் காட்டலாம். ஆய்த எழுத்து படத்துக்காக சுஜாதா எழுதிய வசனங்கள் சிறப்பு.
"How about a coffee"
"அர்ஜுன் ! எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடிச்சு! புரியுதா!"
"Just a coffee. ஒரு கப். புனிதம் கெடாத coffee. whats the problem?"
"கல்யாணங்கிற institution எல்லாம் சும்மா. சொஸைட்டிக்காக.. ஊர்ல ஒத்துக்கணும்னு.. நாமதான் சொஸைட்டிக்காக எதுவுமே செய்றதில்லையே! இதை மட்டும் எதுக்கு செய்யணும்?"
- Get link
- Other Apps
Comments