கோலம் காண் படலத்தில் சீதையை அலங்கரிக்கிற காட்சில ஒரு குட்டி சினிமாட்டோகிராபியே நடத்தியிருக்கிறார் கம்பன். மெதுவாக நகர்கிற காட்சிகள் வைத்த மாதிரி.
'அமிழ் இமைத் துணைகள். கண்ணுக்கு
அணி என அமைக்குமாபோல் '
கண்ணுக்கு அஞ்சனம் தீட்டுதல் எல்லாம் அழகல்ல. கண்ணைப் பாதி மறைக்கிற மாதிரி அமைந்திருக்கிற இமைகள்தான் கண்ணுக்கு அழகு. அதுமாதிரித்தான் சீதைக்கு நகைகள் அணிவித்து அலங்கரிப்பது. நகைகள் சீதையின் அழகினை மறைப்பது இன்னும் அழகு. அழகுக்கு அழகு சேர்ப்பது மாதிரி இருக்கிறது. பிறகு, braided messy bun வடிவில் சிகை அலங்காரம். சுட்டி, காதணிகள், வளையல்கள் அணிதல், இடையினில் ஓவியம் தீட்டுதல் பற்றிச் சொல்லுகிறார். சீதைக்கு அணிவிக்கப்பட்ட முத்துக்களால் ஆன இடையணியின் ஒளி, பட்டின் நிறம், சீதையின் செந்நிற மேனியின் நிறம் எல்லாம் சேர்ந்து புறப்பட்ட கலவையான வண்ணமும் ஒளியும் அலங்கரிப்பவர்கள் கண்களைக் கூசச் செய்ததாம் என்கிறார்.
Comments