ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஏராளமான முடிவுகளை எடுக்கிறோம். இன்றைக்கு என்ன கலர் ஆடை போடுவது, என்ன உணவை எடுத்துச்செல்வது, எந்தப் பக்கத்துக்கு காலுறையினை முதலில் போடுவது என ஏராளமான முடிவுகளை நம் மூளை எடுக்கும். சில முடிவுகள் தன்னிச்சையாக நிகழ்பவை. ஒரு பொருளை வாங்கும்போது மிகச்சிறந்தது எதுவென்று தேடுவதில்லை. காரணம், நம் முன்னே ஏராளாமான தெரிவுகள் இப்போது வந்திருக்கிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்டளவு முடிவுகளைத்தான் நம் மூளை எடுக்கிறது என்பது நியூரோலோஜிஸ்ட்களின் கருத்து. அதிலும் குறிப்பாக, ஒரு விடயத்தை அதிமுக்கியமானது என தீர்மானிப்பதில்லையாம்.
1978ல் சைமன்(Herbert A.Simon) எனும் பொருளாதார வல்லுனருக்கு நோபல் பரிசு கிடைத்தது. நிறுவனங்களுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களையும், அவை எடுக்கப்படும் முறைமையினையும் ஆராய்ந்தவர். நாம் எல்லோரும் அவர் அறிமுகப்படுத்திய 'திருப்திப்படுதல்' என்கிற கருத்தை பின்பற்றுகிறவர்கள். ஒரு தீர்மானம் எடுக்கிறபோது நாம் எல்லோரும் பின்பற்றுகிற சிந்தனைச் செயற்பாட்டுக்கு அவர் ஒரு சுருக்கமான சொல்லைத் தேடினார். ஒரு மிகச் சிறந்த தெரிவினை எடுக்கமுடியாது போகும்போது நாம் இருப்பதிலேயே 'பரவாயில்லை' என்கிற முடிவை எடுப்போம். அதாவது ஒரு பொருளைத் தேர்வு செய்யும்போது இது இருக்கிறதிலேயே பரவாயில்லை ரகம் என்று தீர்மானித்துக்கொள்வோம்.
இருப்பதை, கிடைத்ததை வைத்து திருப்திப்படுகிறவர்கள்தான் மகிழ்ச்சியானவர்கள் என்று மேற்கொள்ளப்பட்ட சமூக உளவியல் ஆய்வுகள் சொல்கிறது. ஆனால் அதை நம் வாழ்வின் மிக முக்கியமான தீர்மானங்களில் செயற்படுத்த முடியுமா ?
2015ம் ஆண்டிற்கான பணக்காரர்கள் பட்டியலினை Forbes சஞ்சிகை வெளியிட்டது. அதில் Warren buffet மூன்றாம் இடத்தினைப் பிடித்திருந்தார். 1958ல் வாங்கிய அதே வீட்டில்தான் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். இருப்பதை வைத்து திருப்திகொள்ளவேண்டும் என்பது அவரது கருத்து. கிழமை நாட்களில் நியூயோர்க் நகரத்துக்குச் செல்லும்போது காலை உணவுக்காக ஒரியோ குக்கீஸ் மற்றும் ஒரு கலன் பாலையும் கொண்டுசெல்வது வழக்கம் என ஒரு வானொலிப்பேட்டியின்போது சொன்னார். ஆனால் முதலிடுதல் என்று வரும்போது அவரின் கொள்கைகள் வேறுவிதமானது. மிகச் சிறந்த முடிவுகளையே அவர் எடுத்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை முக்கியத்துவம் பெறாத விடயங்களில் நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்ள மட்டுமே நாம் திருப்தி அடையவேண்டும் என்பதுதான் அவரது கருத்து.
Warren buffet பற்றி ஒரு நல்ல ஆக்கம் . http://www.wsj.com/articles/lessons-from-50-years-of-buffett-1430527313
Comments