Skip to main content

விஞ்ஞான புனை கதை ! - மகா பாரதம்

தற்போதையை உயர்ந்த ஐரோப்பிய / மேலைத்தேய நாகரிகம் ,முன்னர்  இந்து நாகரிகம் விஞ்ஞானத்திலும் மற்றும் கணிதத்திலும் சரி நாகரிகத்திலும் சரி சிறந்து விளங்கிய  போது   நாகரிகத்தில் மிகவும் பின் தங்கிய காட்டு மிராண்டிகளாக ஐயோரோப்பிய நாகரிகத்தை சேர்ந்தவர்கள் இருந்தார்கள்  . பூச்சியத்தை அறிமுகப்படுத்திய ஆர்யபட்டாவின்  (கி மு 500 ஆண்டுகளில்) காலத்துக்கு முன் பட்ட தொல்பொருள் சான்றுகள் இவற்றை பறைசாற்றி நிற்கின்றன . 

இந்து சமய வேத நூல் ரிக் வேதத்தில்(Rig Veda 10:129 )  கடவுளுக்கான பதிலை விட கடவுள் மீதான கேள்விகளே அதிகம் . உலகம் தோன்றி பல ஆண்டுகள் என்பதை ஒப்புக்கொள்ளும் மில்லியன்களில் அளவிட்ட ஒரே பழமை விஞ்ஞானம் இந்து சமய வேதங்கள்  . பிக் பாங் நடைபெற்ற சுமார் 12 -19 பில்லியன் கால ஆண்டுகளுடன் ஒத்துப்போகின்றது. இதில் கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இவற்றில் பெரும் பாலான நிரூபணங்கள்  ஆங்கிலேயனாலேயே மீண்டு கண்டுபிடிக்கப்படுவது/வெளிக்கொண்டுவரப்படுவது தான் 


இதற்கும் முற்ப்பட்ட காலத்தில் நடந்ததாக கூறப்படும் மகாபாரத யுத்தம் வெறும் யுத்த கதையாகவும் ,உண்மையிலேயே கடவுள் சம்மந்தப்பட்ட கதையாகவுமே  இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது . இறை நம்பிக்கை உள்ளவர்கள் இதை இறை கதையாகவும் ,அறிவியல்  கண்ணாடியினூடு பார்ப்பவர்கள் இதை வேத வியாசரின் உலகின் மிகச்சிறந்த புனை கதையாக எண்ணலாம். 

காரணம் இத்தனை கதாப்பாத்திரங்களை ஒருவரால் இப்போது இவ்வளவு  எளிதாக உருவாக்கிவிட முடியாது . எத்தனையோ காட்ச்சிகள் ஆனால் அவற்றில் பல தற்போதைய கால கட்டத்தினரால் பகுத்தறிவு காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது இருக்கும் . ஆனால் அதில் எழுதப்பட்ட பல தற்காலத்தில் நடப்பவை போலவே இருக்கும் .அல்லது நவீன விஞ்ஞான அறிமுகங்களாக இருக்கும் . 
இதை பல கோணங்களில் பார்க்கலாம் .ஒரு வேளை நாம் அவர்களை விட தற்ப்போது விஞ்ஞான வளர்ச்சி குறைந்தவர்களாக இருக்கலாம் . அல்லது அப்போது எப்படி இத்தகைய அசாத்தியமான காரியங்கள் நடைபெற்றிருக்கலாம் என எண்ணலாம் . உதாரணமாக  நூறு கௌரவர்கள் பிறந்தது ,யுத்தகாண்டத்தில் பாவித்த  பயங்கரமான ஆயுதங்கள் ,அபிமன்யு தாயின் வயிற்றிலிருந்தே கலைகளை கற்றமை போன்றவற்றை எடுக்கலாம் .இவையே இது பொய்யா உண்மையா என்ற வாதங்களை முன் வைக்கின்றன . 

பொய்யோ? மெய்யோ? எழுதியதோ ?உண்மையாக நடந்ததோ ? ஆனால் இந்த கதை என்று ஒன்று இருப்பது உண்மை .

இதை இரண்டு விதத்தில் நோக்கலாம் . ஒன்று இவை உண்மையாக விஞ்ஞானம் (மிகவும்) முதிர்ச்சி அடைந்த காலத்தில் நடைபெற்றதாக , அல்லது இது வியாசர் எழுதிய ஒரு புனை கதையாகவும் எடுத்துக்கொள்ளலாம் .. இதில் இரண்டுமே மலைத்து பார்க்க வேண்டிய விடயங்கள் .

தற்போதைய விஞ்ஞான தொழில்நுட்பத்தின் படி ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாய் நிச்சயம் நல்ல மனோநிலையிலும் , இனிமையான விடயங்களையே செவிமடுக்க வேண்டுமென்றும் ,நல்ல இசைகள் ,செய்திகள் போன்றவற்றையே காதுகளில் கேட்கவேண்டும் என்று மருத்துவம் கூறுகிறது (Right Brain Education in Infancy )

சுபத்ரா கர்ப்பமுற்று இருந்த போது கிருஷ்ணன்(சிலவை அர்ச்சுனன் என்கிறது ) சக்கரவியூகம் அமைப்பதை பற்றி கூறிய போது சுபத்ரா உறங்கி விட ,அதை அபிமன்யு கிரகித்துக்கொண்டு இருந்தான் . என மகாபாரத கதையில் கூறப்பட்டுள்ளது .

எந்த ஒருவராலும் நூறு குழந்தைகளுக்கு  தாய் ஆக முடியாது . ஆனால் காந்தாரியிக்கு குழந்தை பேறு இல்லாத போது அவளுடைய கருமுட்டை எடுக்கப்பட்டு அதை பிரித்து தனித்தனியே வெளியே ஒரு சாடியில் வளர விட்டதாக பாரதம் கூறுகிறது . இதனை ஒரு அமெரிக்கர் மருத்துவ மாநாட்டில்(All India Biotech Association ) கூறியது சுட்டிக்காட்டபட வேண்டியது .

இது தான் தற்போதைய சோதனைக்குழாய் குழந்தை . ஆனால் ஒரு கருவை பிரித்து பல குழந்தைகள் உருவாக்கும் தொழில்நுட்பம் இன்னும் வளரவில்லை .

இவை எதிர்காலத்தில் நிகழும் என தீர்மானிக்கபட்டதா? அல்ல இப்படி ஒரு தொழில்நுட்பம் இறந்த காலத்தில் இருந்ததா என்ற கேள்விகள் மனதில் கேட்டுக்கொண்டே இருக்க ....இவை மனித சிந்தனைக்கு கேலியாக ஒரு சில காலங்கள் முன்னர் தெரிந்த விடயங்கள் இப்போது வியப்பாக பார்க்கப்படுகின்றன . காரணம் இப்படி அசாத்தியமான விடயங்கள் எழுத வேண்டிய அவசியங்கள் இருக்கவில்லை . இது ஒரு மிகப்பெரிய எதிர்வுகூறலாகவும் இருக்கலாம் .  தொடரும் ....   

பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும் ..அனைவரையும் சென்றடைய 

Comments

nis said…
நல்ல தகவல்
நன்றி ராவணா :-)
Valaakam said…
Super...
இந்த டைப்ல.. நானும் சிலது எழுதினேன்... :)
= திங்கிங்.... :D
அட, இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா!!
நல்ல பதிவு....

சமுத்ரா
// வளாகம் said... Super... இந்த டைப்ல.. நானும் சிலது எழுதினேன்... :) = திங்கிங்.... :D//

நன்றி .. ம்ம் , குமரிக்கண்டத்தில் உண்மை என்பதற்கு ஆதாரங்கள் வாசித்துள்ளேன் ...நான் இதை புனைவு ரீதியாக பார்த்துள்ளேன் .
//சைவகொத்துப்பரோட்டா said...
அட, இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா!//

ஆமா ஆமா ..:-) சரியாத்தான் இருக்கும்னு நினைக்கிறன் :)
//Samudra said...
நல்ல பதிவு....
//
நன்றி சமுத்ரா :)
virutcham said…
மகா பாரதம் குறித்த தகவல்கள் படிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் பிரம்மாண்டம் அசர வைக்கும்.
தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்
நல்ல பதிவு,இது போன்ற அருமையான பதிவுக்கு இண்ட்லியில் ஓட்டு கம்மி ஏன் என தெரியவில்லை

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ