மரணம் -வாழ்க்கையின் பின்னரான வாழ்க்கை

மரணம் எனும் பதம் இன்னமும் இறை நம்பிக்கையை ஊன்றுவதற்கு இன்னும் சாதகமாக இருக்கிறது. ஆனாலும் விஞ்ஞானிகள் சௌகரியமாக எல்லாமே இறைவன் என ஒரு முடிவு எடுத்து விட்டு அமைதியாக இருப்பதில்லை  . சிந்தனை ஆற்றலை பரிமாணத்தின் உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளவர்கள் .

மரணமும் கனவும் அன்றாடம் சந்திக்கும் ,ஆனால் மனித மனங்கள்  சிந்திக்கும் ஆற்றலை பயன்படுத்தாத  விடயங்கள் .


மரணத்தின் விளிம்பை தொட்டு வந்தவர்கள் பலர் உண்டு . மனித முயற்சியின்  உச்சத்தில் இருக்கும் விஞ்ஞானம் ,அறிவியல்  பரிமாணம் அடையாத கடவுள் மனங்களின் சௌகரியமும் ஆயுதமான மரணத்தை அடைய , அறிய முயற்சிகிறது .

வரைவிலக்கணம் கொடுக்க முடியாத மரணம் எனும்  பதம் இலகுவாக உடலை உயிர் விட்டு பிரிகிறது எனலாம் . உடல் என்று இருப்பது உண்மை ஆனால் உயிர் ?

உயிர் அல்லது மனது என்பார்கள் சிலர் .. மூளையும் செயல்ப்பாடு அற்றுப்போதல் முழுமையான மரணம் எனலாம் .ஆனால் உயிர் அப்படியே இருக்குமா ? அல்லது மேலே அலுவலகம் வைத்திருக்கும் கடவுளிடம் சென்று நரகம் ,சொர்க்கம் என செய்த வேலைகளை டேட்டா பேசில் பார்த்து கடவுள் தண்டனை கொடுப்பாரா ?

சமய ரீதியாகவும் ,விஞ்ஞான ரீதியாகவும் சற்று அலசுவோம் ......

மரணத்தை நெருங்கியவர்கள் (Near death experience )

அதாவது இறந்துவிட்டார்கள் என மருத்துவ ரீதியாக முடிவு செய்த பின்னர் ,சில நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்று வந்தவர்கள் கூறிய கருத்துகள் கிட்டத்தட்ட ஒன்றே ...
1 . குகையினூடான பிரயாணம்
2 .அமைதியும் பிரகாசமான ஒளியும் நிரம்பிய இடம்
3 . ஒருவித சாந்தி ,இதுவரை உணராத அமைதி நிலை ...
4 . ஒன்றும் கேட்க்க முடியவில்லை ,ஆனால் பிரகாசமான ஒளி தெரிந்தது 

மருத்துவம் 
மருத்துவ வாதங்கள் வேறுபட்டு தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன . மூளையின் செயல்ப்பாடு இருக்கும் போது ,மருத்துவத்தின் போது அவர்களுக்கு கொடுக்கப்படும்  மருந்துகள் போன்றவை இவ்வாறான தூண்டல்களை ஏற்ப்படுத்தலாம்.


ஆனால் மருத்துவ ரீதியான ஆதாரங்களை இதில் திரட்டுவதில் மருத்துவர் பின் வான் லோமேல் (Pin van lommel ,cardiologist  Ph .D) முன்னணியானவர் .

மூளை நினைவுகளையும் ,ஆழ்மனதையும் உற்ப்பத்தி செய்கிறது . அந்த வகையில் அதன் செயல்ப்பாடு அற்ற நிலையில் மனத்தால் ஒரு வித மாயத்தோற்றம் (Illusion ) உணரப்படுகிறது என்கிறது சில மருத்துவ தரப்பு .

மனோதத்துவவியலாளர் பேராசிரியர் புரூஸ் க்ரேசன் (Bruce greson ) மரணத்தின் பின்னரான வாழ்க்கை , மரணத்தின் விளிம்பு போன்றவற்றை ஆராய்வதில் முனைப்பு காட்டும் இன்னொருவர் .

இவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்தவர்களிடம் பெற்ற மேலும் பல குறிப்புகள் ....
1 .திரும்ப முடியாத ஒரு எல்லைகோட்டில் நிற்றல்
2 .உடல் தொடர்பான கவனத்தன்மையை இழத்தல்  .
3 .இன்னொரு பரிமாணத்துக்குள் நுழைந்தமை
4 . நேரம் நிற்ப்பதை உணர்தல்

இதில் முக்கியமான விடயம் சாதாரண வாழ்க்கையை விட அது மிகவும் அமைதி தன்மையாகவும் ஆனால் மிகவும் சக்தியானவர்களாகவும் இருந்திருக்கின்றனர் /உணர்ந்திருக்கின்றனர் .

உதாரணமாக சிலருக்கு தாம் இறந்து விட்டோம் என்பது தெரிந்திருந்திருக்கிறது .
1 . நேரம் ஆர்முடுகியது .
2 . தான் யார் என்ற உணர்வு இழப்பு
3 .பிரபஞ்ச அமைதி
சிலருக்கு தாம் வெளியில் மிதப்பதும் அவர்களை யாரோ இழுப்பதும் போன்ற உணர்வு ஏற்ப்பட்டுள்ளது  .

இதில் சிலருக்கு அமானுஷ்யமான பல விடயங்கள் நிகழ்திருக்கிறது .அதில் சிலரால் பல ஆயிரம்  வருடங்களுக்கு முன்னரான பார்வையையும் பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னரான பார்வையையும் பார்க்க முடிந்துள்ளது . ஆனால் இரண்டுமே ஒன்றாக இருந்துள்ளது .

இதை அறிவியலுடன்  ஒப்பிட முடியுமா ? அல்லது மூளையில் செயல்பாடுகள் தான் காரணமா ? இன்னொரு உலகத்தை இப்போதே அறியும் நோக்கோடு .... தொடரும் ..... 

Comments

Unknown said…
என்னய்யா இப்பிடி பயப்பிடுத்திறீங்க !!
விரைவில் மிகுதியையும் பதிவுசெய்யுங்கள்...

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்