விமர்சனம் - எந்திரன்- சுஜாதா ?! அறிவியல் ?!!

திரைப்படங்கள், சிறந்த படைப்பு என்பது வெறுமனே ஒரு தனிமனிதனை மட்டும் கொண்டு நிர்மாணிக்கப்படுவதில்லை. ஆனால்  எல்லா வியாபார நோக்கர்களும் சேர்ந்தால் ஒரு படம் எப்படி வரும் என்பது எந்திரனில் தெரிகிறது . வெறும் ரஜனி என்கிற மாயையை வைத்து ஒரு சிறந்த எழுத்தாளர் கற்பனையை  மழுங்கடிக்கும் நிகழ்வு எந்திரனில் நடந்தேறியிருக்கிறது . தொழில்நுட்பம் பாவித்தமை ,சுஜாதாவின் எழுத்தை பாவித்தமைக்கு மட்டுமே பாராட்டுகள் .

எந்திரனை அனைத்து திறமையுடனும் உருவாக்கும் விஞ்ஞானி ரஜனி , அதற்க்கு தேவை ஏற்ப்படும் போது உணர்வுகள் பற்றி  சொல்லி கொடுக்க ஐஸ்வர்யாராயை காதலிக்கிறது . இதனால் அதே விஞ்ஞானி ரஜனி அந்த எந்திர ரஜனியை அழிக்க ,அதே எந்திர ரஜனி வேறொரு விஞ்ஞானியால் இன்னொரு வில்லன் ரஜனியாக உருவெடுக்கிறார் . எல்லாமே ரஜனி மயம் . இது போதாதென்று அந்த ரஜனி உருவாக்கும் நூற்றுக்கணக்கான எந்திரன்களும் ரஜனி தான் . முழுவதுமாக ரஜனி தான் .அந்த கதையே ரஜனி கதை தான் . சுஜாதாவினது அல்ல .

படத்தின் முதல் பாதி நேர்த்தியாக சென்றது .பல இடங்களில் சுஜாதாவின் வசனங்கள்  மின்னியது . வீதி  போலிஸ்  உன்னுடைய முகவரி என்ன என எந்திரனிடம் கேட்க்க  எனக்கு முகவரி கிடையாது ஐ பி முகவரி தான் .192 .68 .௦.1. என்பது என்ன நக்கலா என்ற போது நிக்கல் என்பதும் சரி அனைத்தும் பாமரனையும் தொழில்நுட்பம்  அடையவேண்டும் என்ற ஒரே நோக்கில் சுஜாதாவின் எழுத்துக்கள் தெரிந்தன .ஆனால் திரைப்படம் எவ்வாறு என்பது நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .

கடைசி இறுதி நிமிட தொழில்நுட்பம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் தொழில்நுட்பத்தை  பாவித்தமைக்கு பாராட்டுகள் . இதை தான் தேர்மினட்டர் ,அவதார் தொழில்நுட்ப்பவியலாலர்களிடமிருந்து எடுக்க முடிந்திருக்கிறது .

ரகுமானின் பாடல்கள் செவிவழி மட்டும் கேட்க்கும் போதே மிகவும் தரமாக இருந்தது ஆனால் வழமையான ஷங்கர் பாடல் காட்ச்சியமைப்புகளில் ரசனையற்ற தன்மையே வெளிப்பட்டது .
அதே பின்னாலே நூறு பேர் ஆடும் பாணி .இது தான் பிரம்மாண்டமா? இதுவரை மனிதர்கள் இப்போது நூறு எந்திரங்கள் .
பாடல்கள் ரகுமானால் உயர் தரத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் காட்ச்சியமைப்புகள் கீழ்த்தரமான ரசனையை கொண்டவை . பணம் இருந்தால் யாரும் எடுக்க முடியும் என்ற காட்ச்சியமைப்புகள் சிறப்பானதாக இல்லை .

 தொப்புள் கோடி குழந்தையை சுற்றியவுடன்  பழைய பாட்டி கால முறை போல இதில் விலா எலும்பை நகர்த்தி பிரசவம் பார்க்கும் வழி  முறையை எந்திரன் செய்வது போல காட்சி  ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் . இதில் சுஜாதாவின் பங்கே இருப்பது தெரிகிறது . ஆனாலும் பாராட்டப்பட வேண்டிய காட்சி செருகல் .
சுஜாதாவின் என் இனிய இயந்திராவும் , மீண்டும் ஜீநோவும் வாசித்தவர்களுக்கு இன்னும் ஏமாற்றம் தான் ,...
இது முழுக்க முழுக்க மசாலா கலந்த ஒரு குறிப்பிட்ட ரசனை உள்ள ரசனையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட படம் . எந்திரன் பற்றிய தகவலோ அறிவியலோ மக்களை போய் சேரவேண்டிய இடத்தில் ரஜனியே போய் சேர்ந்திருக்கிறார் . - இதை உலகத்தரத்துக்கு(இந்தியாவை தாண்டி ) ஏற்றி அவமானப்படுத்துவதன் காரணம் தெரியவில்லை .

Comments

எந்த ஊரில இதுக்குபேரு நடுநிலை விமர்சனம்?
எந்திரன்- ரசிகர்களுக்கு சுவீட்டு, எதிரிகளுக்கு வேட்டு. வயது திறமைக்கு தடை இல்லை என்பதற்கு ரஜினியின் வேகமும் ஐஸின் நடனமும் உதாரணமாக கூறலாம்.
சரியாக சொன்னீர்கள்
என்ன தலைவா.. நாங்கெல்லாம் படம் பாத்திட்டு நல்லாயிருக்குன்னு எழுதியிருகோம்... நீங்க...!!!!
நன்றி எப்பூடி ....//
நான் நடுநிலை விமர்சனம் என்று கூறியது ..ரஜனி ரசிகனாக இல்லாமல் சினிமா ரசிகனாக எழுதிய பதிவை ..

நன்றி ஜீவதர்சன் //
எந்த ரசிகர்களுக்கு சுவீட்டு ? ரஜனி ரசிகர்களுக்கு தானே ?
பாலாஜி சங்கர் said...
சரியாக சொன்னீர்கள்//
நன்றிகள் பாலாஜி
ஹாய் தல..
எங்க நான் பிழையா எழுதீட்டனோ என்று நினைத்தேன்..
நான் கரெக்ட்டுன்னு ப்ரூவ் ப‌ண்ணீட்டின்ங்க...
வாழ்த்துகள்...
இதே கருத்தை தான் நானும் சொன்னேன்.கன சனம் என்னை லூசா எண்டு வேற சொல்லீற்றாங்க.மொத்தத்தில இது impress பண்ணல.போட்ட பிலட் அப்புக்கு பெருசா காச சிலவழிச்சிருக்காங்க.தலைவர்ட ஸ்ரைல கொஞ்சம் பாத்தம்.ரஜனி ரசிகனா அது ஒரு குட்டி சந்தோசம்.அவ்ளோதான்.தமிழன் படைச்ச உலக தரம் எண்டு சொல்லி தமிழண்ட மனத்த வித்திடாதீங்க
TechShankar said…
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TS



டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
150 கோடி பணம் ஒரு வீண் செலவு
நம்ம ஊர்ல இன்னும் படிக்காத படிக்க முடியாத நிலைல இருக்க
ஒரு 1000 மாணவர்களை படிக்க வைத்து இருக்கலாம்.
சூப்பர் ஸ்டார்,சன் டிவி போன்ற பணம் இருக்கும் இடம் பணம் பெருகும்.,

அனைத்து நடிகர்களும் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை
சூர்யா - அஹரம் - விதை
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_3041.html

Popular posts from this blog

இது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும் !-விஞ்ஞான விளக்கம்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

பேய்கள் - விஞ்ஞான விளக்கம்