வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே
இந்திரனார் பந்தாட,

இந்திரனார் அடித்த பந்தை
எதிர்த்தடிக்க வந்த கண்ணோ" 


இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது.ஈக்கி போல் நிலவடிக்க
இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை
எதிர்த்தடிப்பவனோ சொல்லு!


ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,  ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று  ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது.

கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு காளையை வர்ணிக்கும் போது, ' ஈக்கி நுழையுமா பாரு குளம்புக நடுவில! ' என்று எழுதியிருப்பார். அந்தளவுக்கு நெருக்கமான குளம்புகள்.

ஈக்கி போல் நிலவடிக்க என்றால், மெல்லிய/ நேரான என்று சொல்லலாம். ' ஈக்கி மின்னல் அடிக்குதடி' என்று 'காட்டுச் சிறுக்கி ' பாடலிலும் எழுதியிருப்பார்.

Comments

Athisaya said…
வணக்கம் சொந்தமே!மிக்க மகிழ்ச்சி உங்கள் தளம் காணக்கிடைத்தது...!

Popular posts from this blog

மணிரத்னத்தின் ஆண்கள்

சாக்லேட் : Kiss me, I can read your lips.

மலரினும் மெலிது காமம் 09 - வியர்க்கக் கொய்திடு