Skip to main content

Posts

டைம் டிரவல் ( கால பயணம் ) சாத்தியம்!!

டைம் டிரவல் ( கால பயணம் ) எனும் விடயம் எல்லோரும் தலையை பித்துக்கொள்ளும்  விடயம் பலருக்கும் இன்னும் தெளிவில்லை. பலருக்கு இன்னும் இப்படி ஒரு விடயம் இருப்பதே தெரியாது . இறைவன் காலத்தை கடந்தவன் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம் . எம்மாலும்  கடக்க முடியும். இறந்த காலத்துக்கு செல்ல முடிந்தால் நாம் இழந்தவற்றை செய்யலாம். பிரபலமானவர்களை பார்க்கலாம் .நாம் தவறவிட்ட யாருடன் வேண்டுமானாலும் கதைக்கலாம் . உதாரனத்திட்க்கு நியூட்டனை சந்திக்கலாம் , ராஜ ராஜ சோழனை சந்திக்கலாம். எதிர் காலத்துக்கு சென்று நம் உலகை கவனிக்கலாம். காலத்துக்கு விளக்கம் கேட்டால் ஒருவராலும் விளக்கம் கொடுக்க முடியாது . காலம் என்பது மிக மிக விளங்குவதற்கு கடினமான விடயம் . முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன் . நேரத்தை பார்க்கவும் முடியாது தொடவும் முடியாது . ஆனால் அதன் விளைவுகளை நாம் உணர முடியும் . எமக்கு வயதாகிறது , மரங்கள் வளருகின்றன போன்றவற்றின் மூலம் காலம் என்ற ஒன்று எம்முடன் நகருவதை நாம் உணரலாம் . நீங்கள் இப்போது மவுசை வைத்து கிளிக் செய்து கொண்டு இருக்கிறீர்கள் அந்த ஒவ்வொரு நொடியும் இமை...

பிரபஞ்ச தேடல்(Cosmic ocean) - முடிவிலி- ஏலியன்ஸ்

சாதாரண மனிதர்களின் சிந்தனை கடவுளுக்கு அப்பால் செல்வதில்லை. கடவுள் எனும் எல்லைக்கோட்டுடன் நின்று விட்டால் அறிவும் மட்டுப்படுத்தப்படும் .  உலகத்திற்க்கு அப்பால் நின்றால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் . தற்ப்போதைய மிக முக்கிய கேள்வி, வேற்று உயிரினங்கள்(ஏலியன்ஸ்) உண்டா என்பதே. உண்டு என்பதற்கான சாத்தியங்களே அதிகம் . காரணம் நாம் இருக்கும் பிரபஞ்சம் மீதான நீண்ட கால அவதானம் . அறியப்பட்டவரை அனைத்தும் முடிவிலி .  பிரபஞ்சம் மிக மிக பெரியது .இந்த சூரிய குடும்பத்தில் ஒரு புள்ளி பூமி . 200 பில்லியன் நட்சத்திரங்கள் கொண்ட எமது பிரபஞ்சத்தில் சூரிய குடும்பம் ஒரு புள்ளி . இவ்வாறு  பல சேர்ந்தது தான்  கலக்சி எமது பால் வீதி. பல பால்வீதிகள் சேர்ந்தது தான் காஸ்மிக் ஓசியன். கிட்டத்தட்ட 100 பில்லியன் பால் வீதிகள். அனைத்தும் ஒரு ஒழுங்கில் அனைத்து பக்கமும்  இழுவை விசையுடன் . இவற்றை அறியும் போது  நாம் உண்மையில் தனிமையில் இருக்கிறோம் என்பது நம்ப முடியாதது .  ஏலியன்ஸ் இருக்கிறதா இல்லையா என்பதற்க்கு விடை தொடங்கிய  இட...

கண்ணாடி....

சொல்கிறேன் கண்ணாடியில் தெரிந்துகொள் எவ்வளவோ .. சந்தர்ப்பத்தை எதிர்பார்ப்புக்கு சாதகமாக்கு .. உன்னுடன் முரண்படு சரியா?தவறா? உன் பெண்மையிடம் மட்டும் கேள் கனவுகளுக்கு வடிவம் கொடு வசனங்களுக்கு செயல் கொடு உணர்வுகளை விற்காதே.. சமூகத்தை அறுத்தெறி வெறி வேண்டாம் உனக்கு... ஆயிரம் சொல்லட்டும் உனக்கு நீ நீ மட்டும்..... தனிமையில் உன்னை அறி கற்பனைகளுடன் பேசு ரசனைகளுக்கு உயிர் கொடு காதலோடு ரசி இசையோடு சுவாசி கண்களில் காதல் பார் காற்றோடு புன்னகை அழுது அழுது அனைத்தையும் அழி எண்ணத்தில் நம்பிக்கை வை எண்ணி எண்ணி காலம் கழிக்காதே ஏன் என்று கேள் பதில் கிடைக்கும் ஏமாற்றத்தில் எதிரிகளை அறி உண்மைக்காதலை பகுத்தறிவால் அறி காத்திருப்பு வேலைக்கு ஆகாது உயிரைத்தருவேன் வாய்ப்பேச்சு மழையோடு வெய்யிலாய் இரு வானவில்... மூங்கிலில் துளையாய் இரு புல்லாங்குழல்... அழகும் ரசனையும் உன்னோடு சொல்கிறேன் கண்ணாடியில் தெரிந்துகொள் எவ்வளவோ ..