Skip to main content

அவளுக்கு, வாளினிற் கொடிய வயமான் கண்கள்.

அவளுக்கு, வாளினிற் கொடிய வயமான் கண்கள், அம்மம்ம!
 

செந்தூரப் பொட்டும், சீரான பூந்துகிரும், கொண்டைக்குச் சில சின்மலர்களும் சூடியபடி நின்றாள். கண்ணாடி முன்னால், வளைகள் ஆர்க்க, அம்மம் ததும்ப, இரு கைகளையும் உயர்த்தி, குழலை வாய்ப்பாகச் சொருகி முடிந்தாள். இதழில், செம்முகை முத்தங்கள் பல வரச்செய்து, குதிக்கால்கள் தத்தி எழ, காற்றை முத்திமுத்திச் சிரிக்கும் குழந்தை அவள். இப்படி எல்லாமும் கோர்த்து, புறத்தில் இயற்கை போற்றி வளர்த்த பொம்மல் மலரழகுபோல், அழகினை வாரிக் கட்டிக்கொண்ட பதுமைபோல், பொலிவான தோற்றம் அவளுக்கு.
அகத்தின் ஆழத்தில், மிகையான அழகுகள் கண்டால், அவளுக்கு அதைக் கண்ணீர் விட்டுக் கொண்டாடத் தோன்றும். இப்படி அழகினால் மனதைப் பழக்கிக்கொண்டவளிடம் மிகுதிப் பண்பெல்லாம் வந்து வணங்காதா என்ன? இதற்குமேலும் அவள் மனதின் வடிவைச் சொல்ல உவமைகள் வேண்டுமா?
ஆனால், இவை மட்டுமா மதிப்பிற்குரிய பெண்ணின் இலட்சணைகள்? அவளின் இன்னொரு முகமும்தானே அரவணைப்புக்குரியது? ஒரு நாளின் இரகசிய யோசனைகளில், மாராப்புப் பெருமூச்சில், தன் அழகைத் தானே மெச்சி மருவும் மோகப் பொழுதுகளில், அவளிடம் தோன்றும் அந்த வாளினிற் கொடிய வயமான் கண்கள், அம்மம்ம! மஞ்சத்திலும் அதை நேருக்கு நேராய்ச் சந்திக்கும் ஆடவனைத் தேடினாள். எந்தக் குறையுமின்றி, பாவமுமின்றி, அதே மதிப்போடும், அதே கருவத்தோடும் அவளைப் பார்க்கும் ஆடவனின் கண்கள் அவளுக்கு வேண்டும்.
அவளுக்குப் புறா குனகும் ஓசை கேட்டபடி தூங்கப் பிடிக்கும். அளாவியிருக்க ஒரு தலையணையும், முடிந்தால், முலாம் பூசாத கரங்களால் மார்பில் அவளை இடுக்கி வளாவியிருக்கும் அன்பனும் வேண்டும். ஆகமொத்தம், அதனதன் அழகு கெடாமல், இலக்கணங்களைப் பகுமானமாய் உடைத்துப் பார்க்கும் இரகசிய ஆசைகள் அவளுக்குள் இருந்தது. அந்த வயமான் அருந்தும் புனலாக இருக்க ஆசைப்படும் ஆணின் உணர்வுக்கும் காதல் என்று பெயர்தானே?

Comments

Popular posts from this blog

கே வி ஆனந்தின் "கோ" -திரைவிமர்சனம்

கே வி ஆனந்த் அன் கோ வினுடைய வெற்றி கூட்டணியில் வந்துள்ள இன்னொரு திரைப்படம் கோ .வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் கே வி ஆனந்த் கோ வில் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்திருப்பது மட்டுமல்லாது அதை திரைக்கதையாலும் தனது கமெராவாலும் சிறப்பாக கையாண்டிருப்பது பாராட்டப்படவேண்டியது  .  அரசன் (கோ) யார் என்பதை தீர்மானிப்பது பத்திரிகையாளன் கையில் என்ற கருவோடு நேர்த்தியாக நகர்ந்திருக்கிறது திரைக்கதை  . இப்போதையை சாதாரண அரசியல் சூழ்நிலை போல ஆளும் கட்சியும் எதிர்க்கட்ச்சியுமாக மோதிக்கொள்வது போல திரைக்கதையிலும் பிரகாஷ்ராஜும் கோட்டா சிறீனிவாச ராவும் மோதிக்கொள்ள இடையில் மூன்றாவதாக சிறகுகள் எனும் அமைப்பு மாற்றம் தேடும் புரட்சிகர இளைஞர் அமைப்பாய் உருவெடுக்கிறது . இரு முக்கிய கட்சிகளின் மீதும் இருக்கும் அதிருப்தியால் அவர்களால் எதிர்நோக்கிய பிரச்சனைகளால் தின அஞ்சல் பத்திரிக்கை சிறகுகளுக்கு ஆதரவாக இருக்கிறது .தின அஞ்சலில்  ஜீவா புகைப்படபிடிப்பாளராகவும் ,கார்த்திகாவும் பியாவும் நிருபர்களாக இருப்பதோடு  இந்த சிறகுகள் அமைப்பையும்  மக்களிடத்தில் சரியாக கொண்டு போய் சேர்க்கின்றனர் .  சிறகுகள் அமைப்பின்

வைரமுத்து : ஈக்கி போல நிலவடிக்க!

ஈக்கி போல் நிலவடிக்க - கண்ணே இந்திரனார் பந்தாட, இந்திரனார் அடித்த பந்தை எதிர்த்தடிக்க வந்த கண்ணோ"  இதுவொரு தாலாட்டுப் பாடலின் ஒரு பகுதி. இதே வரிகளை 'யாரோ யாரோடி' பாடலில் வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியிருப்பார். அதுவொரு கிராமிய சூழலில் இடம்பெறும் பாடல் என்பதால், இந்த வரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இணையமெங்கும் பிழையாக எழுதப்பட்டுள்ள வரிகள். இந்தப் பாடல் வரிகளும் அவ்வளவு தெளிவாகக் கேட்காததும் ஒரு காரணமா இருக்கலாம்.பெரும்பாலும் எல்லோருக்குமே பிடித்த பாடல் இது. ஈக்கி போல் நிலவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை எதிர்த்தடிப்பவனோ சொல்லு! ஈக்கில் என்பது தெரியும். இந்த 'ஈக்கி' என்பது என்னவெனத் தேடியபோது, இதுவொரு திருநெல்வேலி வட்டார வழக்கு என்று சொன்னார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்தில் ஈக்கில்/ ஈக்கில் கட்டு என்று சொல்லுவார்கள்.மேலும் தேடியபோது,   ‘ விளக்குமாத்தைத் தின்ன கழுதை ஈக்கி ஈக்கியா வெளிக்கிருக்கும்’ என்று   ஒரு சொலவடை(கிராமிய வாய்மொழி இலக்கியங்கள்) கிடைத்தது. கி.ரா அவர்கள் தனது நாவலில் கிராமிய வட்டார வழக்கை ஒரு வர்ணனையில் கையாண்டிருப்பார். ஒரு க

கண்ணாளனே...!

சங்க இலக்கியப் பாடலில் ஒரு காட்சியமைப்பு அழகாக விரிந்துசெல்லும். உள்ளே ஒரு கதை காட்சியாக ஒளிந்திருக்கும். மணிரத்னத்தின் 'பம்பாய்' படத்தின் காதல் காட்சிகள் ஒரு இலக்கியப் பாடலை நினைவுபடுத்தியது. அகநானூற்றுப் பாடலைப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். அகநானூறில் இடம்பெறும் 32வது பாடல் நல்வெள்ளியார் எனும் பெண்பாற்புலவரால் எழுதப்பட்டது. இந்தப் பாடல் குறிஞ்சித் திணை வகையைச் சார்ந்தது.  மலையும் மலை சார்ந்த இடத்திலும்  நிகழ்கிற மக்களின் பண்பாட்டையும் காதல் வாழ்க்கையையும் சொல்கிற பாடல்கள் இந்த வகையைச் சாரும். ஆனால் இலக்கியம் அதன் பொதுத்தன்மை காரணமாக எல்லைகளைக் கடந்தது.  இந்தப் பாடல் காதல் வயப்பட்ட  பெண்ணின் உடல் மற்றும் உள உணர்வுநிலைகளைச் சிறப்பாகச் சொல்லுகிற பாடல். ஒரு பெண்பாற்புலவரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பெண்ணின் உணர்வுகள் என்பதால் அந்தக் காலத்துத் தாமரை என்றும் சொல்லலாம். இந்தப் பாடலை மேலும் எளிமைப்படுத்துவதற்காகச்  சில மேலதிக வசனங்களையும் இணைத்திருக்கிறேன்.  "நெருநல் எல்லை யேனல் தோன்றித் திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்றம் உறழ்கொள இ